ஆஹா... என்ன மணம்!



தெரியுமா?

மனிதனின் உணர்வுகளில் நுகர்வுத்திறன் மிகவும் நுண்ணியது. அதனால் ஒரு வருடத்துக்குப் பிறகும்கூட குறிப்பிட்ட வாசனையை 65 சதவிகிதம் வரை துல்லிய மாக கண்டுபிடிக்க முடியும். மகிழ்ச்சி, உணர்ச்சி மற்றும் நினைவுகள் போன்ற 75 சதவிகித உணர்வுகள் தூண்டப்படுவதற்கு வாசனை செல்களே காரணமாகின்றன.

மனிதனின் வாசனை செல்கள் 28 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் 4 வாரங்களுக்கு ஒருமுறை உங்களின் நாசி புதுப்பிக்கப்படுகிறது.மனிதனின் மற்ற புலன்களைவிட வாசனை செல்லானது தாயின் கருவில் இருக்கும்போதே வளர ஆரம்பித்து முழு வேகத்தில் செயல்படவும் தொடங்குகிறது.ஆணின் நுகர்வுத்திறனைவிட பெண்ணின் நுகர்வுத்திறன் வலிமையானது.

பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில், அவளின் நுகர்வுத்திறன் அதிகமாகிறது. மேலும் கருமுட்டை உருவாகும் நேரங்களில் உச்சத்தை எட்டுகிறது.     மனிதனின் பருவ வயதில் அதிகமாக இருக்கும் நுகர்வுத்திறன் போகப்போக குறையத் தொடங்குகிறது. நுகர்வுத்திறன் குறைவதால் நல்ல வாசனையுள்ள
உணவுகளை உண்பதும் குறையும்.

கோடை மற்றும் வசந்த காலங்களில் நாசியின் ஈரப்பதம் அதிகரிப்பதால் நுகர்வுத்திறனும் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்யும்போதும் நாசியின் ஈரப்பதம் அதிகரிக்கும். அதனால்தான் உடற்பயிற்சி முடித்தவுடன் காலை உணவின் நறுமணம் உங்களை சுண்டி இழுக்கிறது.    மனித உடலில் 60 லட்சம் இருக்கின்றன. இதுவே விலங்குகளில் முயல்களுக்கு 1 கோடியும், நாய்களுக்கு 2 கோடியே 20 லட்சம் வாசனை கண்டறியும் செல்களும் உள்ளன.