லேட்டஸ்ட்
நேர மேலாண்மை, நிதி மேலாண்மை என்பதைப் போல உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டால், வலியை சமாளித்து வழியனுப்பி வைக்க உதவும் லேட்டஸ்ட் கருவிகள் இவை!உடல் உழைப்பு குறைந்த பணிகளில் இருப்பவர்கள் - இளைஞர்களாக இருந்தாலும் கூட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக மூட்டு வலி, கழுத்து வலி, கை, கால் வலி... இதுபோன்ற தீராத வலிகளால் அவதிப்படுபவர்கள் தேசிய அளவில் 30 சதவிகிதம் என்கிறது ஓர் ஆய்வு. திட்டமிடாத வாழ்க்கை முறை, மன அழுத்தம், வேலையின்போது அமர்ந்திருக்கும் முறை, உடலை தேவையில்லாமல் வருத்திக் கொள்வது, எலும்புத் தேய்மானம் போன்ற பல்வேறு காரணங்கள் இந்த வலிகளைத் தீர்மானிக்கின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, ‘பிலிப்ஸ்’ நிறுவனம், வீட்டிலேயே எளிதாகப் பயன்படுத்தும் வகையில் ‘இன்ஃப்ராபில்’, ‘இன்ஃப்ராகேர்’ என இரு வலி நிவாரணக் கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ‘அகச் சிவப்புக்கதிர் தொழில்நுட்பத்தில் (infrared technology) தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவிகள் வலியைப் போக்குவதில் சக்தி மிக்கவை... பாதுகாப்பு கொண்டவை’ என்று பிலிப்ஸ் அறிவித்திருக்கிறது.
அகச்சிவப்புக் கதிர்கள் வலியைப் போக்கும் வலிமை கொண்டவை என்பது மருத்துவரீதியாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அகச் சிவப்பு ஒளியானது தோலின் வழியாக ஊடுருவி ரத்த ஓட்டத்தைத் தூண்டி, தசைகளை வெதுவெதுப்பாக்குகிறது.
இதனால், உடல் தசைகளின் இறுக்கம் தளர்ந்து, திசுக்கள் நெகிழ்வதால் வலி குறைகிறது. ‘தினம் 2 முறை இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். 15 நிமிடங்கள் பயன்படுத்தினாலே வியக்கத்தக்க வகையில் வலி நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும்’ என்கிறது பிலிப்ஸ்!அகச்சிவப்புக் கதிர்கள் வலியைப் போக்கும் வலிமை கொண்டவை என்பது மருத்துவ ரீதியாக ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மாடல்: HP3643 Infracare: Zone treatmentMRP: R 19,995650 வாட்ஸ் இன்ஃப்ராரெட் ஹாலோஜன் விளக்கு கொண்ட கருவி இது. 90 டிகிரி வரை பக்கவாட்டிலும், மேலும் கீழுமாக 45 டிகிரி வரையிலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். படுத்திருக்கும் நிலையிலும் இந்த விளக்கைப் பயன்படுத்தலாம். எத்தனை நிமிடங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஃபிக்ஸ் செய்து விட்டால், தானாகவே ஆஃப் ஆகும் வசதி கொண்டது.
மாடல்: HP3621 Infracare : Zone treatment MRP : R 7,995
200 வாட்ஸ் சக்தி கொண்ட இன்ஃப்ராரெட் கருவி இது. 40 டிகிரி வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். 2 மீட்டர் வரை எந்தத் திசையிலும் நகர்த்திக் கொள்ளத்தக்க வகையில் கேபிள் உண்டு.
மாடல்: HP 3616 Infraphil : Focused treatment MRP : R 3,295
150 வாட்ஸ் பவர் கொண்ட இந்த இன்ஃப்ராரெட் விளக்கு, எந்த இடத்தில் வலியிருக்கிறதோ, அந்த குறிப்பிட்ட இடத்தையே ஃபோகஸ் செய்யும் திறன் கொண்டது.