புள்ளிவிவரம்



18 முதல் 40 வயது வரை உள்ள ஆயிரம் பெண்களிடம் ஓர் ஆய்வை நடத்தி யது ஆங்கில இதழ் ஒன்று. பெரும்பான்மையான பெண்கள் இனப்பெருக்க ஆரோக்கியம், கருத்தரித்தல், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல விஷயங்களிலும் அரைகுறை அறிவுடனேயே இருப்பது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி...

*30 சதவிகிதம் பெண்கள் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகு வதில்லை. பிரச்னை முற்றினால்தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
* 40 சதவிகிதம் பெண்களுக்கு கர்ப்பகாலம் குறித்த பயம் பெரிதாக இருக்கிறது.
* 50 சதவிகிதம் பெண்களுக்கு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் ‘மல்டி வைட்டமின்’ மாத்திரைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
* 25 சதவிகிதம் பெண்கள் பால்வினை நோய்கள் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். புகை பிடிப்பது, பருமன் போன்றவை குழந்தைப் பிறப்பை பாதிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.
* 20 சதவிகிதம் பெண்கள் ‘வயதானால் குழந்தை பெறும் வாய்ப்பு குறையும்’ என்பதையோ, அதன் விளைவாக கருக்கலையும் ஆபத்து அதிகரிப்
பதையோ, தாமதமாகக் கருத்தரிப்பதால், குழந்தை மரபணுக் கோளாறுகளுடன் பிறக்கக் கூடும் என்பதையோ அறியாமல் இருக்கிறார்கள்.
* 50 சதவிகிதம் பெண்கள் ஒரே நாளில் பல முறை உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும் என நம்புகிறார்கள்.
* 30 சதவிகிதம் பெண்கள் வித்தியாசமான மாறுபட்ட நிலைகளில் உடலு றவு கொண்டால் மட்டுமே கர்ப்பம் தரிக்கலாம் என கருதுகிறார்கள்.
* 10 சதவிகிதம் பெண்கள் மட்டுமே, ‘கருமுட்டை உருவாவதற்கு முன் தாம்பத்திய உறவு நிகழ்ந்தால்தான் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்குமே தவிர, அதற்குப் பிறகான உறவு எந்த வகையிலும் உதவப் போவதில்லை’ எனத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

20 சதவிகிதம் பெண்கள் தாமதமாகக் கருத்தரிப்பதால், குழந்தை மரபணுக் கோளாறுகளுடன் பிறக்கக்கூடும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.