ஆரோக்கியத்துக்கும் இளமைக்கும் ஓஸோன் தெரபி!



நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... அப்படிப் பார்த்தால் இன்றைக்கு எல்லோருமே ஏழைகள்தான்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். சிலது பரம்பரையாகத் தொடரலாம். சிலது காரணமின்றி, அழையா விருந்தாளியாக உடலுக்குள் வந்து உட்கார்ந்திருக்கலாம்.

 வருமானத்தின் முதல் பகுதியை சேமிப்புக்காக ஒதுக்கிய காலம் மாறி, இன்று மருத்துவத்துக்காக எடுத்து வைக்க வேண்டிய நிலையில்தான் அனேகம் பேர் இருக்கிறோம். நோய் வந்தவர்களுக்கும் சரி... நோயே இல்லாமல் வாழ நினைப்பவர்களுக்கும் சரி... ஓஸோன் தெரபி சரியான தீர்வாக இருக்கும் என்கிறார் டாக்டர் மோகனசெல்வன்.

‘‘மாற்று மருத்துவமோ, ஏமாற்று மருத்துவமோ இல்லை இது. பிராண வாயு எனச் சொல்லப்படுகிற ஆக்சிஜன் குறைபாட்டால் உண்டாகிற அனைத்துப் பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு...’’ என்கிறவர், ஓஸோன் தெரபி பற்றி இன்னும் விளக்கமாகப் பேசுகிறார்.‘‘பிராண வாயுவான ஆக்சிஜனோட அளவு இன்னிக்கு ரொம்பவே குறைஞ்சு போச்சு. நாம சுவாசிக்கிற ஆக்சிஜனானது, நுரையீரலுக்குள்ள போய், அங்கேருந்து உடம்புல உள்ள ரத்த நாளங்கள் வழியா எல்லாப் பகுதிகளுக்கும் போகும். ஆக்சிஜன் சப்ளை குறையும் போது, உடலில் உள்ள செல்கள் வீரியமிழக்கிறதும், அதன் விளைவா பலவித நோய்கள் தாக்கறதும் நடக்குது.

நம்மோட சுற்றுச்சூழல்ல ஓஸோன் அளவு குறைஞ்சிட்டு வருது. ஓஸோனை நாம சுவாசிக்க முடியாது. அதை மருந்து வடிவுல உடலுக்குள்ள செலுத்தி, அதுலேருந்து ஆக்சிஜனை பிரியச் செய்து, உடலோட பாகங்களுக்கு அனுப்பற சிகிச்சைதான் ஓஸோன் தெரபி.ஓஸோன் தெரபியை சர்வரோக நிவாரணின்னே சொல்ல லாம். ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஓஸோன் தெரபியில தீர்விருக்கு.

ஓஸோனை   O3  னு சொல்றோம். அதை சலைன் வாட்டர்ல கலந்தா உடனே கரைஞ்சிடும். அதோட வீரியம் வெறும் 20 நிமிடங்கள்தான். அதை நரம்புல ஊசி மூலமா உடம்புக்குள்ள செலுத்தறபோது, O3 யானது உள்ளே போய்   O2  ஆயிடும். மிச்சமுள்ள ஒரு ளிவானது  உடம்புல உள்ள பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ்னு அத்தனை கிருமிகளையும் அழிக்கும். செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறபோது, அதெல்லாம் புத்துணர்வு பெறுது.

இந்த ஓஸோன் தெரபியை சலைன் வாட்டர் மூலமா மட்டுமில்லாம, சம்பந்தப்பட்டவங்களோட ரத்தத்தை எடுத்து அதுல கலந்தும் செலுத்தலாம். 250 மி.லி. அளவு ரத்தத்தை வெளியே எடுத்து, அதுல ஓஸோன் கலந்து  மறுபடி அவங்க உடம்புக்குள்ள அனுப்புவோம்.

ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு, ஹீமோகுளோபினுக்குள்ள இருக்கிற ஆக்சிஜனையும் செறிவூட்டி, அதை புத்துணர்வு பெறச் செய்யும். இதே சிகிச்சையை 2 லிட்டர் ரத்தம் வரைக்கும் எடுத்தும் செய்யலாம். அது அவங்கவங்களோட தேவை மற்றும் பிரச்னைகளைப் பொறுத்தது.

ஓஸோன் தெரபி மூலமா ஆக்சிஜனை கொடுக்கிறதால, வயோதிகத்தைத் தள்ளிப் போட முடியும். அது மூலமா 50 வயசுலயும் 30 வயசுக்கான தோற்றத்தோட இருக்க முடியும்!
நீரிழிவு காரணமா நரம்பு, கண், இதயம், மூட்டுகள்னு எல்லா உறுப்புகளுமே பாதிப்புக்குள்ளாகும். அவங்களுக்கு முறையான இடைவெளிகள்ல ஓஸோன் தெரபி கொடுக்கிறது மூலமா இந்த உறுப்புகளோட பாதிப்பை குறைக்கலாம்.

பெண்களுக்குப் பெரியளவுல உபயோகமா இருக்கு இந்த சிகிச்சை. சிலருக்கு அடிக்கடி அந்தரங்க உறுப்புத் தொற்று வரும். இடுப்பெலும்புப் பகுதி தொற்றும் அதன் விளைவான வலியும் சகஜமா இருக்கும். அவங்களுக்கெல்லாம் இந்த சிகிச்சையை அந்தரங்க உறுப்பு வழியா கொடுக்கலாம். மாதவிலக்கு முடிஞ்சு, ரத்தப்போக்கு முழுமையா நின்னதும் செய்துக்கலாம். போது மான ஆக்சிஜன் இருக்கிற இடத்துல ஃபங்கஸ் கிருமிகளால வாழ முடியாது.தேவையையும் பாதிப்பையும் பொறுத்து, இந்த ஓஸோன் தெரபியை பல வழிகள்ல கொடுக்கலாம்.

ரத்தத்தின் வழியே கொடுக்கப்படற ஓஸோன் தெரபி, புற்றுநோய், இளைஞர்களுக்கு வரக்கூடிய பார்வைக் குறைபாடான ரெட்டினஸ் பிக்மென்ட்டோஸா போன்ற பிரச்னைகளுக்குப் பலன் தரும். மலக்குடல் வழியே கொடுக்கற ஓஸோன் தெரபி, எல்லா நோய்களுக்குமே தீர்வு தரும். அது உடனடியா கல்லீரலுக்குப் பரவி, உடலின் எல்லா பாகங்களுக்கும் போகறதால, தீர்வும் சீக்கிரம் தெரியும். கொஞ்சம் கூட வலியில்லாத சிகிச்சை இது.

பெண்களுக்கு ஏற்படற வினோதமான வலியான ‘ஃபைப்ரோமயால்ஜியா’வுக்கும், மாதவிடாய், எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னைகளுக்கும், அந்தரங்க உறுப்புத் தொற்று, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கும் பிறப்புக் குழாய் வழியே கொடுக்கற ஓஸோன் பலன் தரும்.ஓஸோனை நல்லெண்ணெய்ல கலந்து, சுவாசத்தின் மூலமா உள்ளிழுக்கக்கூடிய இன்ஹேலர் முறையும் இருக்கு. தலைவலி, சுவாசக் கோளாறுகள் உள்ளவங்களுக்கும், காது தொடர்பான பிரச்னைகள் உள்ளவங்களுக்கும், செரிப்ரல் பால்சி நோய்க்கும் இது உதவும்.

மூட்டுத் தேய்மானமாகி, அறுவை சிகிச்சைதான் தீர்வுங்கிற நிலையில உள்ளவங்களுக்கு ‘ப்ரோலோசோன் தெரபி’ மிகப்பெரிய வரப்பிரசாதம். இதுல பி12, ஸ்டீராய்டு கலக்காத சத்துப் பொருள் கலவை, கடல்லேருந்து எடுக்கப்படுகிற மெரைன் பிளாஸ்மா ஆகியவற்றை ஓஸோன் வாயுவோட கலந்து, மூட்டுல ஊசி மூலம் செலுத்துவோம்.

 உடனடியா அந்த இடத்துல வறட்சி நீங்கி, வழுவழுப்புத் தன்மை அதிகரிக்கும். மூட்டுவலியோட முதல் 3 கட்டங்கள்ல இருக்கிற வங்களுக்கு இந்த தெரபி மூலமா அறுவை சிகிச்சை இல்லாம காப்பாத்தலாம். 4வது நிலையில உள்ளவங்களுக்கு அறுவை சிகிச்சையை தள்ளிப் போடலாம்.

அழகுக்கும் ஓஸோன் பெரிய அளவுல பயன்படுது. அந்த வகையில ஓஸோன் சவ்னாவும் வேக்குவம் ஓஸோனும் லேட்டஸ்ட். நீராவிக் குளியல் முறையிலயே ஓஸோனை செலுத்தி, உடம்புல உள்ள நச்சுப் பொருட்களை வெளியேத்தி, எடைக் குறைப்புக்கு உதவி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தற சிகிச்சை ஓஸோன் சவ்னா.

வேக்குவம் ஓஸோன் மூலமா சரும சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைத் தக்க வச்சுக்க முடியும். கூந்தல் வளர்ச்சிக்கும் ஓஸோன் சிகிச்சை இருக்கு. ஆட்டோஇம்யூன் நோய்கள், தீராத அலர்ஜி, சருமப் பிரச்னைகள், ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ், மூளை வளர்ச்சிக் குறைபாடு கள், மறதி நோய், நீரிழிவு முற்றியதால ஏற்படற கேங்ரைன் பிரச்னைனு வேற சில பாதிப்புகளுக்கும் ஓஸோன் தெரபியில தீர்வு காண முடியும்.

நோய் உள்ளவங்க மட்டுமில்லாம, நோயைத் தவிர்க்கவும் ஓஸோன் தெரபியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நிச்சயம் வரக்கூடிய பரம்பரைப் பிரச்னைகளை தள்ளிப் போடலாம்.வயது, பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, இந்த சிகிச்சையை தினசரியோ, வாரத்துல 5 நாட்களோ, வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ எடுக்க வேண்டியிருக்கும். இத்தனை நல்ல விஷயங் களை கொண்டதால இந்த தெரபி ரொம்ப காஸ்ட்லியானதா இருக்குமோங்கிற பயம் வேண்டாம். பர்ஸை பதம் பார்க்காத சிகிச்சை இது’’ என்கிறார் மோகனசெல்வன்.

நோயைத் தவிர்க்கவும் ஓஸோன் தெரபியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். நிச்சயம் வரக்கூடிய பரம்பரைப் பிரச்னை களை தள்ளிப் போடலாம்...

- அதிதி