கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டில் எது நல்லது? எது ஆபத்தானது? ‘‘கொழுப்புக்குள் அடங்கியிருப்பதுதான் கொலஸ்ட்ரால். அதனால், இரண்டும் வேறுவேறு அல்ல. கொலஸ்ட்ரால் தவிர, பிஞிலி என்ற நல்ல கொழுப்பு, லிஞிலி என்ற கெட்ட கொழுப்பு, க்ஷிலிஞிலி என்ற மிகவும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்றவையும் கொழுப்புக்குள் அடங்கியிருக்கின்றன...’’ - வித்தியாசம் உணர்த்திப் பேசுகிறார் இதய நோய் நிபுணர் ஜாய் தாமஸ்.
‘‘கொழுப்பு என்றவுடனே அது ஆபத்து என்ற தவறான கருத்து நம்மிடையே இருக்கிறது. உண்மையில் தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ அதேபோல்தான் கொழுப்பு சத்தும் நமக்குத் தேவை. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பை ஹெச்.டி.எல். கொழுப்பு என்கிறோம். 30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு சேதமடையும் செல்களை சரி செய்வதற்கும், ஹார்மோன்களின் இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்புச் சத்து அவசியம்.
எல்.டி.எல்., வி.எல்.டி.எல். மற்றும் ட்ரைகிளிசராய்ட் கொழுப்புகளிடம்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த கெட்ட கொழுப்புகளே மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகள், புற்றுநோய், பருமன் போன்ற பிரச்னைகளை உண்டாக்குகின்றன. இறைச்சி மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் நெய், வெண்ணெய் போன்றவற்றிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் இது அதிகம் இருக்கிறது.
ட்ரைகிளிசராய்ட் கொழுப்புகள் எண்ணெய் உணவுகளிலும், மதுபானங்களிலும், இனிப்பு வகைகளிலும் அதிகம் இருக்கிறது. மன அழுத்தமும் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் ஒரு காரணிதான். நல்ல கொழுப்பு காட்லிவர் எண்ணெய், மீன் மற்றும் கடல் உணவுகளில் அதிகம் இருக்கிறது. நல்ல கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக்கொண்டு, கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்த்தால் பிரச்னை இல்லை.நம் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவைத் தெரிந்துகொள்ள, ரத்தப் பரிசோதனையே (ஃபாஸ்ட்டிங்) போதுமானது...’’
- எஸ்.கே.பார்த்தசாரதி