டியர் டாக்டர்



எப்படியாவது நோயிலிருந்து மீண்டால் போதும் என்ற எண்ணத்தோடு தனியார் மருத்துவமனைகளை நாடிச் சென்றுவிட்டு, பிறகு ரத்தக் கண்ணீர் வடித்து வரும் அப்பாவிகள் ஏராளம். அவர்களது அபயக் குரலினை அப்படியே எதிரொலிப்பதாக இருந்தது தனியார் மருத்துவஅரசு மருத்துவமனைகள் மீதுள்ள நம்பகத்தன்மை இழந்ததுதான் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு மூல காரணம். இது அரசு கவனிக்க வேண்டிய அவசர அவசியம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி., ஆ.கண்ணன், அரவங்காடு., என்.சுமதி, ஏத்தாப்பூர் மற்றும் கே.வெங்கடேசன், கள்ளக்குறிச்சி.

டயாலிசிஸ் தகவல்கள் பயனுள்ளவை. வழிமுறைகளை அறியச் செய்ததோடு, வருமுன் காக்க வேண்டியது பற்றியும் அறிவுறுத்தி இருந்தது வெகு சிறப்பு.
 - பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி மற்றும்
கா.பொன்மணி, தேவகோட்டை.

புதிய (போ)பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ‘போக்கிமான்’ ஒரு எச்சரிக்கை மணி!அட... வேர்க்கடலையும் ஒரு மூலிகைப் பொருள் எனச் சொல்லிஇருப்பது வியப்புக்குரியது!உள் காய்ச்சல் பற்றி  டாக்டர் சிவராம் கண்ணன்  அருமையாக விளக்கிக் கூறியிருந்தார்.
- சுகந்தி நாராயண், சென்னை-39.

இயலாமை ஏற்படுகிறபோது ‘கை உடைஞ்ச மாதிரி இருக்கு’ என சொல்லும் நாம், அந்த கைகளுக்கு என்னென்ன பயிற்சி அளிக்க வேண்டும் என விளக்கிக் கூறியிருப்பது என்னைப் போன்று வேலை செய்யும்  நபர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அருமை.
- கு.கனகவேல், மல்லூர், சேலம்.

`இது வளர்ப்பு விஷயம்’ கட்டுரையில் அம்மா-அப்பாக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்திவிட்டீர்கள்!
- எல்.சரோஜா, புதுக்கோட்டை.

சுவைக்காக விரும்பி சாப்பிடும் மில்க் ஷேக்கில் இத்தனை விஷமா? ஆச்சரியமூட்டும் தகவல்கள். உண்மையை உணர
வைத்ததற்கு நன்றிகள் பல!
- சு.நாராயணசாமி, ஈரோடு.

‘அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா’ பகுதியில் டாக்டர் நிவேதிதா ஹார்மோன் மாறுதல்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்துமாவை விளக்கிக் கூறியிருந்தார். நீண்டகால குழப்பத்துக்கு விடை கிடைத்தது.
- வெ.கல்யாணி, மடிப்பாக்கம், சென்னை.