மறதியை விரட்டும் மஞ்சள்!
தினமும் ஒரே ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை உணவில் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறது ஓர் ஆராய்ச்சி. சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும் என்கிறீர்களா?
மஞ்சளின் முக்கிய சாராம்சமான Curcumin, உங்கள் புத்திசாலித்தனத்தைப் பத்திரப்படுத்த உதவுமாம். அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டோரின் மூளையில் படிகிற புரதச் சேர்க்கையை சுருங்கச் செய்வதாகவும், அதனால் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவதாகவும் சொல்கிறார்கள் UCLA ஆராய்ச்சியாளர்கள். மறதி நோயைத் தீவிரம் ஆக்காமலும் காக்குமாம் மஞ்சள். மாமஞ்சள்!
|