அறிவியல் உலகம்!



பொது அறிவு

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் பனிப்பாறை!

விண்வெளி ஆய்வாளர்கள் சூரிய மண்டலத்திற்குள் 900 அடி நீளமுள்ள பனிப்பாறை வருவதை கண்டுபிடித்துள்ளனர். பூமியின் சூரிய மண்டலத்தை கடந்து செல்லும் முதல் அறியப்பட்ட விண் பொருளான ஓமுவாமுவா ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிலர் இதை வால்மீன் என்றும், சிலர் சிறுகோள் என்றும், நீள்வடிவ விண்கலம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இப்போது  இதற்கு  ஒரு  புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இது ஒரு ஹைட்ரஜன் பனிப்பாறை என்று கூறுகிறார்கள். இதற்கு ஒமுவாமுவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பாறையில் ஹைட்ரஜன் வாயு நிரம்பியிருப்பதாகக் கூறியுள்ள ஆய்வாளர்கள், இயற்கையில் இது மிகவும் அரிதான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒமூவாமூவா பனிப்பாறை தற்போது சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இதுபோன்ற ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள பனிப்பாறை அதனைக் கடந்து செல்ல 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

காட்டுச் செடியால் உருவான வெல்க்குரோ ஜிப்

இறுக்கமாக மூடவோ, வெல்க்குரோ விளைவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது வெல்க்குரோ ஜிப்.  நம் அன்றாட வாழ்வில் வெல்க்குரோ ஜிப்பினை நாம் பலபொருட்களில் பயன்படுத்துகின்றோம். இதில் ஒரு பக்கம் குட்டி குட்டி வளையங்களையும் எதிர்ப்பக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளையும் கொண்டுள்ளது. வளையமும் கொக்கியும் ஒன்றையொன்று அழுத்தும்போது இணைந்து சிக்கிக்கொள்கிறது. பின்னர் அவற்றை இழுக்கும் போது பிரிந்துவிடுகின்றது. கைப்பைகள், காலணிப்பட்டை, புத்தகப்பை, கோப்புகள், கேமரா உறை எனப் பல பொருள்களிலும் இணைப்பானாக வெல்க்குரோ ஜிப் பயன் படுகிறது.

ஜியார்ஜ் டீ மெஸ்ட்ரால் என்ற சுவிட்சர்லாந்தை சேர்ந்த எஞ்சினியர் காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியது. செடியின் விதைகளை நுண்ணோக்கியின் உதவியால் உற்று நோக்கினார். நுண்ணோக்கியில் பார்க்கும்போது செடியின் விதையின் முனைகளில் தெரிந்த கொக்கி போன்ற பகுதியைக் கூர்ந்து நோக்கினார்.


இந்த கொக்கி போன்ற அமைப்பே தன் உடைகளின் நூலிழைகளுடனும் மாட்டிக்கொண்டது என்று உணர்ந்தார் அதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார். 1978-ல் மெஸ்ட்ரலின் காப்புரிமம் காலாவதி ஆனபின், தைவான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் மலிவாக இவற்றை செய்து விற்பனை செய்கின்றன.

இரண்டு பிரெஞ்சு மொழிச் சொற்களின் கூட்டுதான் வெல்க்ரோ என்னும் பெயர். ‘’velours’’ என்றால் நெருக்கமான முடிகள் போலுள்ள ‘வெல்வெட்டு’, இரண்டாவது சொல் நூலிழைப் பின்னல் தொழிலில் பயன்படும் ‘குரோசே’ (crochet) என்னும் கொக்கிக்கம்பி. ஆகவே, இரண்டு சொற்களிலும் உள்ள முதல் மூன்று எழுத்துகளைக்கொண்டு Vel+Cro = Velcro என ஆயிற்று.

பெட்ரோலின் தரத்தை அறிவதற்கான சில வழிகள்!

உணவுப் பொருள் முதல் எரிபொருள் வரை எங்கும் எதிலும் கலப்படம் என்ற நிலைதான் உள்ளது. உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களில் சிலவற்றை கண்டுபிடிக்க முடியும், சிலவற்றை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தயாரித்திருப்பார்கள். அதேபோல எரிபொருட்களிலும் பல இடங்களில் கலப்படம் செய்யப்படுவது ஊடகங்கள் மூலம் அவ்வப்போது செய்தியாக வந்துகொண்டுதான் இருக்கிறது. எரிபொருட்களில் நாம் அன்றாடம் வாகனங்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல் பிரதானமானது.

பெட்ரோலில் கலப்படம் இருந்தால் அதை கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன. ஒரு Filter Paper-ஐ எடுத்து அதன் மீது சில துளிகள் Petrol-ஐ விடவும். சிறிது நேரத்தில் பெட்ரோல் அனைத்தும் ஆவி ஆகவேண்டும். அப்படி இல்லாமல் Paper-ல் தங்கிவிட்டால் அது தரமற்றது.அடுத்து ஒரு Thermometer மீது சில துளி Petrol-ஐ இடும்போது Petrol-ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் Petrol-ன் சராசரி வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலை Thermometer-ல் பதிவாகும்.

அதேபோல சிறிதளவு Petrol-ஐ Copper gauze மீது வைத்து எரிக்கும்போது Petrol-ல் மண்ணெண்ணெய் கலந்திருந்தால் அது எரிந்து ஒருவித வாடையுடன் கூடிய கரும்புகையை உருவாக்கும். அப்போது தெரிந்துகொள்ளலாம் அது கலப்பட பெட்ரோல் என்பதை.