மருத்துவப் பட்டம் படிக்க NEET (UG) - 2020 நுழைவுத் தேர்வு!



நுழைவுத் தேர்வு

தேசிய தேர்வு முகமை (National Testing Agency - NTA) மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியா முழுவதிலுமுள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களில் அனைத்து இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய அகில இந்திய அளவிலான ‘தேசிய தகுதி நுழைவுத் தேர்வை’ (National Eligibility Entrance Test - NEET) நடத்துகிறது.

NEET தேர்வு எந்த மருத்துவப் படிப்புகளுக்காக?

1) M.B.B.S - பொது மருத்துவம்
2) B.D.S - பல் மருத்துவம்
3) B.A.M.S - ஆயுர்வேதம்
4) B.S.M.S - சித்த மருத்துவம்
5) B.U.M.S - யுனானி மருத்துவம்

எந்தெந்த கல்வி நிறுவனங்களின் இடங்கள்?

(1) இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் அகில இந்திய இடங்கள்
(2) மாநிலங்களிலுள்ள கல்லூரிகளின் மாநில இடங்கள்
(3) தனியார் மருத்துவக் கல்லூரிகளின் N.R.I இடங்கள், மாநிலம் மற்றும் மேனேஜ்மென்ட் இடங்கள் (எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவம்)
(4) நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள்
(5) மத்திய அரசின் இடங்கள்
(6) என்.ஆர்.ஐ. மேனேஜ்மென்ட், நிதி பெறாத தனியார் நிதி பெறும் சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத கல்லூரி இடங்கள்
(7) அயல்நாடுகளில் படிக்க விரும்புவோர் (இந்திய குடிமக்கள்/ அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள்)

AIIMS (All India Institute of Medical Science), JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research), AFMC (Armed Forces Medical College) அகில இந்திய 15 விழுக்காடு உள்ளிட்ட அனைத்து இடங்கள். ESIC (Employes Sku Insurance Corporation), டெல்லி பல்கலைக்கழகம், AMU (Aligarh Muslim University) இடங்கள்.

யார் விண்ணப்பிக்கலாம்?

கல்வித் தகுதி

1) பன்னிரண்டாம் வகுப்பில் (State, CBSE) ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றோர், +2 பொதுத் தேர்வு எழுதவிருப்போர் விண்ணப்பிக்கலாம்.

2) +2 Indian School Certificate அல்லது அதற்குச் சமமான படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது) உயிர் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் அல்லது வேறு பாடம் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3) a) 10+2 தேசிய திறந்த நிலைப் பள்ளி (National Institute of Open School), மாநில திறந்தநிலைப் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தனித்தேர்வர்கள் என்ற நிலையில் தனியாக ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றவர்கள்.

b) இதே நிலையில் உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பம் என்ற பாடங்களை அடிஷனல் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்
கலாம்.

இந்தத் தகுதி நீதிமன்ற உத்தரவிற்கும் இவை தொடர்பான நிபந்தனைக்கும் உட்பட்டது.
இண்டர் மீடியட்/ பிரி-புக்ரி என்ற படிப்புகளை ஆங்கிலம், இயற்பியல்/வேதியியல்/உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் என்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள்.

+2-க்குப் பின் பிரி- புரொஃபெஷனல் (Pre-Professional), பிரி-மெடிக்கல் (Pre-Medical) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மூன்று வருடப் பட்டப்படிப்பில் இதே பாடங்களுடன் முதலாம் ஆண்டு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Sc. பட்டப்படிப்பை இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) இவற்றில் ஏதேனும் இரண்டு பாடங்கள் எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள், +2-ல் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

இதே பாடங்களுடன், இந்தியப் பல்கலைக்கழகம், கல்வி வாரியத்தில் (10+2) படிப்பிற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

பொதுப்பிரிவினர், பொதுப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (General  UR, General EWS) ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST), நான்கிரிமி பிற்படுத்தப்பட்டவர் (OBC- NCL), மாற்றுத்திறனாளிகள் 31.12.2003 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்திருக்கவேண்டும். உச்ச வயது வரம்பு 25. இந்த வயது வரம்பில் SC, ST, OBC, NCL, PWD இவர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்த்தப்படும்என்ன மொழிகளில் வினாத்தாள்?

ஆங்கிலம், ஹிந்தி, அசாம்ஸ், குஜராத்தி, கனடா, மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழி
களில் வினாத்தாள் இருக்கும். மொழி மாற்றத்தில் சிக்கல் வரும்போது NTA-வின் ஆங்கில வடிவம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

* ஹிந்தி, ஆங்கில வினாத்தாள் - எல்லா மையங்களிலும்
* ஆங்கிலம், அசாம் - அசாம் மையங்களிலும்
* ஆங்கிலம், பெங்காலி - மேற்கு வங்கம், திரிபுரா மையங்களிலும்
* ஆங்கிலம், குஜராத்தி - குஜராத், டாமன் & டையு, டாட்ரா, நாகர் ஹவேலி மையங்களிலும்
* ஆங்கிலம், கனடா - கர்நாடகா மையங்களிலும்
* ஆங்கிலம், மராத்தி - மகாராஷ்டிராவிலும்
* ஆங்கிலம், ஒடியா - ஒரிசாவிலும்
* ஆங்கிலம், தமிழ் - தமிழ்நாட்டிலும், ஆந்திரம், தெலுங்கானாவிலும் வழங்கப்படும்

தேர்வின் அமைப்பு எப்படி இருக்கும்?

இந்த மூன்று மணிநேரத் தேர்வில், கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான ஒரே விடையைத் தேர்வு செய்தல் அல்லது மிகச்சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் இருக்கும். தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். இயற்பியல் (45 வினாக்கள்), வேதியியல் (45 வினாக்கள்), உயிரியல் தாவரவியல், விலங்கியல் (90 வினாக்கள்) என்றபடி 180 வினாக்கள் இருக்கும்.

ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் என்றால் 180 X 4 மொத்த மதிப்பெண்கள் 720. தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறையும். விடையளிக்காத வினாவிற்கு மதிப்பெண் குறையாது. ஏதேனும் வினாக்கள் பின்னர் NTA-வால் தவிர்க்கப்பட்டால், விடை அளித்திருந்தாலும், இல்லையென்றாலும், எல்லா மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.

இத்தேர்வு OMR தாளில் எழுதக்கூடிய எழுத்துத் தேர்வாகும். ஆன்லைன் தேர்வு அல்ல.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

நுழைவுத்தேர்வு எழுத விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ntaneet-nic-in என்ற இணையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்

* இந்தியக் குடிமக்கள்- ஆதார் எண், +2 Roll No, வாக்காளர் அட்டை, (EPIC No), ரேஷன் கார்டு, வங்கி எண், பாஸ்போர்ட்

* என்.ஆர்.ஐ. - பாஸ்போர்ட் எண்/ ஆதார் எண்

* அயல்நாட்டினர் - OCI/PIO - பாஸ்போர்ட் எண்/ ஆதார் எண்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பிப்பவர்கள் தங்கள் அல்லது பெற்றோரின் மொபைல் எண்ணைக் குறிப்பிடவேண்டும். முகவரியை பின்கோடுடன் தரவேண்டும்.புகைப்படம் 10kb-200kb அளவிலும், போஸ்ட் கார்டு போட்டோ 4``X6” (300kb) என்ற அளவிலும் இருக்கவேண்டும்.

இந்தப் புகைப்படங்கள் 01.09.2019 அன்று அல்லது அதற்குப்பின் எடுக்கப்பட வேண்டும்.புகைப்படம் 80 விழுக்காடு முகமும், காதுகளும் தெரியுமாறு, வெள்ளை பின்புலத்தில் இருக்கவேண்டும்.கையெழுத்து கறுப்பு மையால் வெள்ளைத்தாளில் இடப்பட்டு ஸ்கேன் செய்யவேண்டும். இவை சிறிய எழுத்து
களில் 4kb to 30kb-க்குள் இருக்கவேண்டும். இடதுகை கட்டை விரல் பதிவு இருக்கவேண்டும்.

இது 10kb to 50kb அளவில் இருக்கவேண்டும். இடதுகை கட்டை விரல் பதிவு எடுக்க இயலா நிலை இருப்பின், வலதுகை கட்டை விரல் பதிவு எடுக்கலாம்.விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1500, பொது-பொருளாதாரத்தில் பின்தங்கியவர், பிற பிற்படுத்தப்பட்ட நான்கிரிமி லேயர் ரூ.1400, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.800 என டெபிட், கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், UPI வழியாகச் செலுத்தலாம்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.12.2019 (11.50 மணி வரை)
கட்டணம் செலுத்த: 01.01.2020 வரை
திருத்தம் செய்ய: 15.01.2020 முதல் 31.01.2020 வரை
அட்மிட் கார்டு பெற: 27.03.2020
தேர்வு நாள்: 03.05.2020/ 2PM to 5PM
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்: 04.06.2020
மேலும் விரிவான விவரங்களுக்கு https://www.nita.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களைப் பார்க்கவும்.

எஞ்சினியரிங் படித்தவர்களும் அரசுப் பள்ளி ஆசிரியராகலாம்!

2020 டெட் தேர்வு… முக்கிய அறிவிப்பு

தமிழகப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligiblity Test - TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எட் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆசிரியராகப் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.  முன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20சதவீத இடங்கள், எஞ்சினியரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால், 4 ஆண்டுகள் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வமில்லாமல் இருந்தது. இதனால், பி.எட் கல்லூரிகளில் பி.இ முடித்தவர்களுக்கான இடஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், எஞ்சினியரிங் படிப்பு சமநிலை அந்தஸ்து பெறாமல் இருந்ததால், அவ்வாறு பி.எட் முடித்தவர்களும் டெட் தேர்வு எழுத முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், தற்போது எஞ்சினியரிங் படிப்புக்குச் சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இனி வரும் காலங்களில் பி.இ எஞ்சினியரிங் படிப்பு முடித்தவர்களும் டெட் தேர்வு எழுதி, ஆசிரியர் பணியில் சேரலாம். அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் கணிதம் பாடம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தோ.திருத்துவராஜ்