வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

இந்திய உருக்கு ஆணையத்தில் வேலை!

நிறுவனம்: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப்
இந்தியா(sail) எனும் மத்திய அரசின் இந்திய உருக்கு ஆணையத்தில் ரா மெட்டீரியல் டிவிஷனில் வேலை
வேலை: மெடிக்கல் ஆஃபிசர் உட்பட பல்வேறு துறைகளில்
காலியிடங்கள்: மொத்தம் 148. இதில் எக்சிகியூட்டிவ் பதவியில் மெடிக்கல் ஆஃபிசர் 1 காலியிடமும், நான் எக்சிகியூட்டிவ் அடிப்படையில் மைனிங் ஃபோர்மேன் 40, மைனிங் மேட் 51 மற்றும் சர்வேயர் 9 இடங்கள், ஆப்பரேட்டர் கம் டெக்னீஷியன்(டிரெயினி) எலக்ட்ரிக்கல் 13, ஆப்பரேட்டர் கம் டெக்னீஷியன்(டிரெயினி) கெமிக்கல் 4, அட்டண்டண்ட் கம் டெக்னீஷியன்(டிரெயினி) 20, நர்சிங் சிஸ்டர்(டிரெயினி) 10 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: 10வது, டிப்ளமோ, பி.எஸ்சி.
மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் தேர்ச்சிபெற்றிருப்பவர்கள் அந்தந்த படிப்புக்கேற்ற வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: மெடிக்கல் ஆஃபிசர் வேலைக்கு 30-க்குள்ளும் மற்ற வேலைகளுக்கு 28-க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.sail.co

தமிழக தபால்துறையில் போஸ்டல் அசிஸ்டன்ட் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் தமிழ்நாடு போஸ்டல் சர்க்கிளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: போஸ்டல் அசிஸ்டன்ட் உட்பட
3 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 231. இதில் போஸ்டல் அசிஸ்டன்ட் 89, போஸ்ட்மேன் 65 மற்றும் மல்டி டாஸ்கிங் சர்வீஸ் 77 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி
வயது வரம்பு: முதல் இரண்டு வேலைகளுக்கு 18 முதல் 27 வரையும் எம்.டி.எஸ் வேலைக்கு 18 முதல் 25 வரையும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, நேர்முகம் மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.tamilnadupost.nic.in

மத்திய அரசுத் துறையில் ப்ராஜக்ட் எஞ்சினியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆஃப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் எனும் கணினித் துறையில் வேலை
வேலை: ப்ராஜக்ட் எஞ்சினியர் மற்றும் ப்ராஜக்ட் மேனேஜர் எனும் இருபிரிவுகளின்கீழ் பல்வேறு வேலைகள்
காலியிடங்கள்: 102. இதில் எஞ்சினியர்
பிரிவில் 94 மற்றும் மேனேஜர் பிரிவில்
8 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு கணினித் தொடர்பான படிப்புகளான பி.இ., பி.டெக்., ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ், நெட்வொர்க்கிங் போன்ற படிப்புகளும் இரண்டாம் வேலைக்கு எம்.இ., எம்.டெக்., பி.இ., பி.டெக்., பிஎச்.டி போன்ற படிப்புகள் அவசியம்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 37-க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 50-க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு. இந்த வேலைகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடப்பதால் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து ஆஜராகவேண்டும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: டிசம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு உள்ளதால் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
மேலதிக தகவல்களுக்கு: www.cdac.in

மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் நர்சிங் ஆஃபிசர் பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தின் ரிஷிகேஷ் கிளையில் வேலை
வேலை: நர்சிங் ஆஃபிசர்
காலியிடங்கள்: மொத்தம் 372
கல்வித் தகுதி: பி.எஸ்சி நர்சிங்
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் பயிற்சியுடன் வேலை!

நிறுவனம்: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை
வேலை: கால்நடை ஆய்வாளர் (‘கிரேடு-2’) பதவிக்கு பயிற்சிக்குப் பின் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 583
கல்வித் தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 30, பி.சி./
எம்.பி.சி./ டி.என்.சி. 32, எஸ்.சி./எஸ்.சி.(ஏ)/எஸ்.டி. மற்றும் விதவைகள் 35, எஸ்.சி.ஏ./
எஸ்.சி./எஸ்.டி./எம்.பி.சி./பி.சி./பி.சி.எம்.
பிரிவில் ‘டிகிரி’ முடித்தவர்களுக்கு 46 வயது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.12.2019
மேலதிக தகவல்களுக்கு: https://www.tn.gov.in/job_opportunity

எய்ம்ஸ் மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட் பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ
ஆய்வுக்கான நிறுவனத்தின் ஜோத்பூர் கிளை
வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் வேலையின்கீழ் பல்வேறு மருத்துவத் துறை
களில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 112
கல்வித் தகுதி: குறிப்பிட்ட துறைகளில்
முதுகலைத் தேர்ச்சி
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 40-க்குள் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: கல்வித் தேர்ச்சி, எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.12.19
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்