| வேலை ரெடி! 
 
 
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...
 இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வேலை!
 
 நிறுவனம்: இந்திய ராணுவம்
 
 வேலை: மிலிட்டரி போலீஸ்(சோல்ஜர் ஜி.டி பதவி)
 
 காலியிடங்கள்: 100க்கும் மேல்
 
 கல்வித் தகுதி: 10வது படிப்பு தேர்ச்சி
 
  வயது வரம்பு: 17 ½ முதல் 21 வரை
 
 உடல் தகுதி: உயரம் 142 செ.மீ
 
 தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் சோதனை மற்றும் மருத்துவ சோதனை
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in
 
 NLC-யில் டெக்னீஷியன் அப்ரெண்டீஸ் பணி!
 
 நிறுவனம்: என்.எல்.சி. எனப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
 
 வேலை: டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டீஸ்
 
  காலியிடங்கள்: மொத்தம் 170. கெமிக்கல் 12, சிவில் 4, கம்ப்யூட்டர் 15, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 48, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோலில் 4, மெக்கானிக்கல் 73, மைனிங் 7ம் சேர்த்து 170 இடங்கள் உள்ளன.
 
 கல்வித் தகுதி: தொடர்புடைய எஞ்சினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
 
 வயது வரம்பு: அப்ரெண்டீஸ்ஷிப் விதிகளின்
 
 படியான வயது நிர்ணயங்கள் இருக்கும்.
 
 தேர்வு முறை: ஆன்லைனில் வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2019/05/NLC.pdf
 
 +2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் ராணுவ அதிகாரி பணி
 
 நிறுவனம்: இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன்கூடிய டெக்னிக்கல் எண்ட்ரி ஸ்கீம்(42) அடிப்படையில் +2 படித்தவர்களுக்கு வேலை
 
 வேலை: அதிகாரி வேலை
 
 காலியிடங்கள்: மொத்தம் 90
 
 கல்வித் தகுதி: அறிவியல் பாடங்களை எடுத்து +2-வில் தேர்ச்சி
 
 வயது வரம்பு: 16 ½ முதல் 19 ½ வரை
 
 தேர்வு முறை: நேர்முகம், உடல்திறன் தேர்ச்சி மற்றும் மருத்துவ சோதனை
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in
 
 சென்னை  உயர்நீதிமன்றத்தில் வேலை
 
 நிறுவனம்: சென்னை உயர்நீதி மன்றம்
 
  வேலை: ரெசிடெண்ஷியல் அசிஸ்டென்ட் எனும் அலுவலக உதவியாளர் பணியின் புதுப் பிரிவு
 
 காலியிடங்கள்: மொத்தம் 180
 
 கல்வித் தகுதி: 8வது படிப்பு
 
 வயது வரம்பு: 18 முதல் 30 வரை
 
 தேர்வுமுறை: எழுத்து, செயல்முறை மற்றும் நேர்முகம்
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.mhc.tn.gov.in
 
 தென்னக ரயில்வேயில் எஞ்சினியர் வேலை
 
 நிறுவனம்: மத்திய அரசின்கீழ் இயங்கும் தென்னக ரயில்வேயில் வேலை
 
 வேலை: ஜூனியர் எஞ்சினியர் வேலை
 
 காலியிடங்கள்: மொத்தம் 142. இதில் ஜூனியர் எஞ்சினியர்(பி.வே) 84 மற்றும் ஜூனியர் எஞ்சினியர்(ட்ராக் மெஷின்)58 இடங்கள் காலியாக உள்ளன
 
 கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் டிப்ளமோ படிப்பு
 
 வயது வரம்பு: 42க்குள்
 
 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.rrcmas.in
 
 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அதிகாரி பணி
 
 நிறுவனம்: பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
 
 வேலை: ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் எனும்
 
 பதவியில் 7 சிறப்புத் துறைகளில் வேலை
 
 காலியிடங்கள்: மொத்தம் 579. இதில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் வேலையில் மட்டுமே 506 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது
 
 கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
 
 வயது வரம்பு: 20 முதல் 50 வரை
 
 தேர்வு முறை: நேர்முகம்
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.sbi.co.in
 
 இந்திய ராணுவத்தில் பல் மருத்துவர் பணி!
 
 நிறுவனம்: இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ஆர்மி டெண்டல் கார்ப்ஸ்
 
 வேலை: பல் மருத்துவர்
 
 காலியிடங்கள்: மொத்தம் 65. இதில் ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
 
 கல்வித் தகுதி: பி.டி.எஸ் மற்றும் எம்.டி.எஸ்
 
 வயது வரம்பு: 45க்குள்
 
 தேர்வு முறை: உடல் திறன் சோதனை, நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
 
 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.6.19
 
 மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in
 
 
    தொகுப்பு: டி.ரஞ்சித் 
 
 |