ஆகச் சிறந்த சேவை!* தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டதின் அவசியம், வழங்கப்படும் படிப்புகள், கல்வித் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை என கட்டுரை முழுமையாகவும் விண்ணப்பித்தலுக்கு வழிகாட்டும் விதமாகவும் அமைந்தது. மேலும் TANCET, NATA நுழைவுத் தேர்வுகளைப் பற்றிய கட்டுரைகளும் தெளிவாகவும் முழுமையாகவும் இருந்தன. -வி.செல்வராஜ், சிவகாசி.
 
* சர்வதேச அளவில் ஃபேஷன் டிசைன் படிப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வருங்கால வேலைவாய்ப்புகள் மற்றும் அத்துறை சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள் என ஃபேஷன் டிசைன் துறை பற்றி A to Z அலசும் கட்டுரை உயர்கல்விக்கான தேடலை பூர்த்தி செய்வதாக இருந்தது. +2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம் என மாணவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கும்போது இதுபோன்ற கட்டுரைகள் இடம்பெறுவது சிறப்பு.   -தி.ஜனனி, மயிலாப்பூர்.
 
* உடல் அசைவுகள் எவ்வாறு நம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன என்பது போன்ற உடல்மொழி ரகசியங்களையும் மற்றும் உடல் மொழியின் குணாதிசயங்களையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து விளக்கும் நடை உடை பாவனை தொடர் அற்புதம். மேலும் பாக்ஸ் செய்திகளில் தரப்படும் டை போன்ற உடைகள் குறித்த தகவல்களும் பயனுள்ளவையாக உள்ளன.   -எம். சேக் ராவுத்தர், ராமநாதபுரம்.
 
புதர்கள் மண்டி வறண்டும், தனியார் ஆக்கிரமிப்பிலும் கிடக்கும் நீராதாரங்களைத் தனி ஒரு மனிதனாக மீட்கப் போராடும் ஓய்வுபெற்ற ஆசிரியர் தியாகராஜனின் முயற்சி பாராட்டத்தக்கது. நீராதாரங்களை தூர்வாரும் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்களைக் கடந்து, தனது சொந்த செலவில் நான்கு ஏரிகளைப் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஆகச்சிறந்த சேவை செய்துள்ளார் தியாகராஜன். அவருக்கு ஒரு கிரேட் சல்யூட். -இரா. மதிவாணன், தேனி.