பெட்ரோ-கெமிக்கல் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை!



*அட்மிஷன்

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் 2008ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ஆரம்பிக்கப்பட்டது Rajiv Gandhi Institute of Petroleum Technology (RGIPT) என்ற கல்வி நிறுவனம். கெமிக்கல் மற்றும் பெட்ரோ-கெமிக்கல் துறைகளில் சர்வதேச தரத்தில் கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்கும் வகையிலும் அத்துறைகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதையும் நோக்கமாக கொண்டு இது தொடங்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வி நிறுவனமானது சர்வதேச கல்விநிறுவனங்களுடன் இணைந்து கெமிக்கல் மற்றும் பெட்ரோ-கெமிக்கல் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கி வருகிறது.

இக்கல்விநிறுவனத்தில் 2019ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

நான்கு வருட கால அளவிலான இளங்கலைப் படிப்புகளான B.Tech in Petroleum Engineering, B.Tech in Chemical Engineering, இரண்டு வருட கால அளவிலான M.Tech in Petroleum Engineering, M.Tech in Chemical Engineering மற்றும் Petroleum Engineering & Geological Science, Engineering Sciences, Basic Sciences and Humanities, Management போன்ற பிரிவுகளில்  ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி


இளங்கலைப் படிப்புகளை தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 60% மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். முதுகலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தேர்ந்தெடுத்த துறைகளுக்கு ஏற்ப 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்க விரும்புவோர் தேர்ந்தெடுக்க விரும்பும் துறைகளுக்கு ஏற்ப 60% மதிப்பெண்களுடன் B.Tech /B.E /M.Tech/Master Degree(துறைசார்ந்து) முடித்திருத்தல் அவசியம். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5% சதவீத சலுகை வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை முறை

2019 IIT JEE நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் இளங்கலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். GATE / NET தேர்வு, எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு களின்(5.7.2019) அடிப்படையில் முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இளங்கலை, முதுகலையில் எடுத்த மதிப்பெண்கள், GATE/NET/NBHM/CAT/GMAT/GRE நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகளின் (8.7.2019)அடிப்படையில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அரசு விதிகளின்படி எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு அனுசரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rgipt.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

இளங்கலைப் படிப்புகளை தேர்ந்தெடுக்கும் பொதுப்பிரிவினர் ரூ. 1416(வங்கி பரிவர்த்தனை வரி உட்பட), எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.708 (வங்கி பரிவர்த்தனை வரி உட்பட) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். முதுகலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொதுப்பிரிவினர் ரூ. 400 , எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முக்கிய தேதிகள்

இளங்கலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.7.2019. முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.6.2019.

மேலும் முழு விவரங்களை அறிய www.rgipt.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

-துருவா

உதவித்தொகையுடன் தமிழ் முதுகலை படிக்கலாம்!


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை மற்றும் எம்.பில். படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஜூன் 12 வரை வழங்கப்படும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 12-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 19-ல் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.