பிளாஸ்டிக் தொழில்நுட்பம் படிக்க விண்ணப்பிக்கலாம்!*அட்மிஷன்

பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த தொழில்துறைகளில், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நவீன தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் ரசாயன மற்றும் உர அமைச்சகத்தால் 1968ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது Central Institute of Plastic Engineering & Technology (CIPET). அதை தொடர்ந்து அஹமதாபாத், புபனேஷ்வர், சென்னை, லக்னோ, கொச்சின் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்ட இக்கல்விநிறுவனங்கள் மாநில அரசின் கல்விநிறுவனங்களுடன் இணைந்து   பிளாஸ்டிக் எஞ்சினியரிங் மற்றும் அதுசார்ந்த டிப்ளமோ படிப்புகள், குறுகிய கால சான்றிதழ் படிப்புகள், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்கிவருகிறது. புபனேஷ்வரில் இயங்கிவரும் CIPET:IPT கல்வி நிறுவனத்தில் 2019 கல்வி ஆண்டுக்கான டிப்ளோமா மற்றும் முதுகலைப்  படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள் டிப்ளமோ: பதினெட்டு மாத கால அளவு கொண்ட Postgaraduate Diploma in Plastic Processing & Testing (PGD-PPT) மற்றும் Post Diploma in Plastics mould Design with CAD/ CAM (PD-PMD with CAD/ CAM ), மூன்று வருட கால அளவு கொண்ட Diploma in Plastics Mould Technology (DPMT) மற்றும் Diploma in Plastic Technology (DPT) போன்ற டிப்ளோமா படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

முதுகலை: இரண்டு வருட கால அளவிலான M.Tech (Plastics Engineering), M.Tech (Polymer Nanotechnology) மற்றும் M.Sc (Polymer Science) போன்ற முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி : அந்தந்த படிப்புகளுக்கும் தேவையான கல்வித் தகுதி குறித்த விவரங்களை விருப்பமுள்ளவர்கள் www.cipet.gov.in என்ற இணையதளம் சென்று தேர்ந்தெடுக்கப் போகும் படிப்புகளுக்கு உண்டான கல்வித் தகுதியை அறிந்துகொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை : டிப்ளமோ படிப்புகளுக்கு கல்வி நிறுவனத்தால் 7.7.2019 அன்று நடத்தப்படும்  Computer Based Test (CBT) JEE 2019 நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையிலும், முதுகலை படிப்புகளுக்கு 6.7.2019 அன்று நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையிலும், இளங்கலையில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : டிப்ளமோ படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் https://eadmission.cipet.gov.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் https://www.cipet.gov.in/centres/hlc-cipet-bhubaneswar/introduction.php என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும்.

படிவத்தை பூர்த்தி செய்து பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.250-க்கு வரைவோலை எடுத்து இணைத்து ‘ The Principle Director, CIPET, B-25, CNI Complex, Patia, P.O: KIIT, Bhubaneswar, Odisha - 751024 ’ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai - 600 032’ என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும். இருவேறு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.6.2019.

-துருவா