தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கை!



அட்மிஷன்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி நிறுவனம் 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் இளநிலைப் பட்டப்படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன.

2019-2020 கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் தொலைநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை பட்டப்படிப்பு

* பி.ஏ. (தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்)
* பி.காம். (கார்பரேட் செக்ரட்ரிஷிப், பேங்க் மேனேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்)
* பி.பி.ஏ.- பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
* பி.சி.ஏ. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
* பி.எஸ்சி. (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி)
 முதுநிலைப் பட்டப்படிப்புகள்
* எம்.ஏ. (தமிழ், ஆங்கிலம்,
எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பொலிடிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ஹூமன் ரைட்ஸ் அண்ட் டியூடீஸ் எஜூகேஷன்)
* எம்.காம்.
* எம்.எஸ்சி. (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி, கவுன்சிலிங் சைக்காலஜி, சைபர் பாரன்சிக் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி)
*எம்.பி.ஏ. (பினான்ஸ் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், ஹூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்,
சிஸ்டம் மேனேஜ்மெண்ட்)
சான்றிதழ் மற்றும்
பட்டயப்படிப்பு
* எம்.சி.ஏ. டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்

தேவையான கல்வித்தகுதிகள்: ஒவ்வொரு நிலை படிப்புகளுக்கும் தனித் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த படிப்புகளுக்கு தேவைப்படும் தகுதிகளை பல்கலைக்கழக வலைத்தளத்தில் பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பப் பதிவை சென்னை பல்கலையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவோ அல்லது நேரடியாகப் பல்கலைக்கழகத்திற்கு சென்றோ மேற்கொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.3.2019
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முத்துமணி