தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT -2019 நுழைவுத் தேர்வு



நுழைவுத் தேர்வு

இந்தியாவில் உள்ள 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்ய, அகில இந்திய பொது நுழைவுத்தேர்வான ‘Common Law Admission Test - CLAT -2019’ தேர்வு நடத்தப்பட உள்ளது. Bengaluru, Hyderabad, Bhopal, Kolkata, Jodhpur, Raipur, Gandhinagar, Lucknow, Punjab, Patna,Kochi, Cuttack, Ranchi, Assam, Visakhapatnam, Tiruchirappalli, Mumbai, Nagpur, Shimla,Delhi, Jabalpur Aurangabad ஆகிய இடங்களில் தேசிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை ஒவ்வொரு பல்கலைக்கழகம் பொறுப்பேற்று நடத்திவருகிறது. அந்த வகையில் 2019-2020ம் கல்வியாண்டுக்கான ‘பொது நுழைவுத்தேர்வு -2019’ பற்றிய அறிவிப்பை ‘கன்சார்சியம் ஆஃப் நேஷனல் லா யுனிவர்சிட்டி’ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இத்தேர்வை ஒடிசா தேசிய சட்டப் பல்கலைக்கழம் நடத்துகிறது.

இந்நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதி, வயதுவரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி விவரமாகப் பார்ப்போம். இளநிலைப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க...

+2-ல் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில், பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், நான் ரெசிடென்ட் இந்தியர்கள், இந்திய பூர்வக்குடியினர், அயல்நாடுவாழ் இந்தியர்கள் குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்தது 40 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை. வரும் கல்வி ஆண்டின் அரசுத் தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க…

முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர LLB அல்லது அதற்கு சமமான இளநிலை சட்டப் படிப்பில் பொதுப் பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள் நான்  ரெசிடென்ட் இந்தியர்கள், இந்திய பூர்வக்குடியினர், அயல்நாடுவாழ் இந்தியர்கள் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பு இல்லை. இறுதி ஆண்டு தேர்வை எழுதவிருப்போரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க https://clatconsortiumofnlu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர், பிறபிற்படுத்தப்பட்டவர், மாற்றுத்திறனாளிகள், நான் ரெசிடென்ட் இந்தியர்கள், இந்திய பூர்வக்குடியினர், ஓவர்சிஸ் இந்தியர்கள் ரூ.4000, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ.3500 விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். கடந்த தேர்வுகளின் வினாத்தாள் வேண்டுபவர்களுக்கு இதைத் தவிர, ரூ.500 சேர்த்து செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.3.2019.

நுழைவுத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வு 12.5.2019 அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தேர்வு ஆஃப் லைனில்  எழுத்துத் தேர்வாக நடைபெறும். இளநிலை பட்டப்படிப்பிற்கான பொது காம்ப்ரிஹென்ஷன் உள்ளடக்கிய ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தற்கால நிகழ்வுகள், கணிதம், லீகல் ஆப்டிடியூட், லாஜிக்கல் ரீசனிங் ஆகிய பாடப் பகுதிகள் இடம்பெற்றிருக்கும்.

ஆங்கிலத்தில் ஆங்கிலத்திறனை சோதிக்க உதவும் வினாக்களும், காம்ப்ரிஹென்ஷன் இலக்கணம் இடம்பெறும். பொது அறிவில், தேசிய மற்றும் அயல்நாடு தொடர்பான பொது அறிவு, தற்கால பொதுஅறிவு தொடர்பான வினாக்கள் இடம்பெறும். 10ம் வகுப்பு அடிப்படையிலான கணிதம் சார்ந்த வினாக்கள் கணிதப் பிரிவில் இருக்கும்.

லீகல் ஆப்டிடியூட் பிரிவில், சட்டம், ஆய்வு நுண்ணறிவு, சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பான வினாக்கள் இருக்கும். லாஜிக்கல் ரீசனிங் பிரிவில் கண்டறிதல், லாஜிக்கல் லிங்க், லாஜிக் இல்லாத சொற்றொடர்களைக் கண்டறிதல், கிளாரிசம், லாஜிக்கல் சீக்குவன்ஸ் அனாலஜி ஆகியவை இருக்கும்.

இத்தேர்வு 200 மதிப்பெண்களுக்கான 2 மணி நேரத் தேர்வாகும். ஆங்கிலத்தில் 40, பொது அறிவில் 50, கணிதத்தில் 20, லீகல் ஆப்டிடியூட் 50, லாஜிக்கல் ரீசனிங் 40 என 200 வினாக்கள் உண்டு. ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.முதுநிலை படிப்பிற்கான 2 மணி நேரத் தேர்விற்கான மொத்த மதிப்பெண்கள் 150.

இத்தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு மதிப்பெண் உள்ள 100 ‘சரியான விடையைத் தேர்வு’’ செய்யும் வகை வினாக்கள் இருக்கும். சட்டப் பாடங்களிலிருந்து 50 மதிப்பெண்களுக்கான வினாக்கள் இடம்பெறும். இதில் தற்கால சட்டப் பாடங்களிலிருந்து இரண்டு வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

சரியான விடை தேர்வு செய்யும் 100 மதிப்பெண்களுக்கான வினாக்களில் கான்ஸ்ட்டிடியூஷனல் லா (Constitutional law) என்ற பிரிவிலிருந்தும், 50 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கான்ட்ராக்ட்ஸ்(Contracts), டார்ட்ஸ்(Torts), கிரிமினல் லா(Criminal), இன்டர்நேஷனல் லா(International law), ஜுரிஸ் புரூடன்ஸ்  (Juris produns), என்விரான்மென்ட் லா (Environment law), மனித உரிமைகள் (Human Rights) ஆகிய பாடங்களிலிருந்தும் கேட்கப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும்.மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://clat.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். தொடர்பிற்கு: clat2019@nls.ac.in, clatconsortiumofnlu.ac.in

  +91 97415 21069, 94825 67257 (Bengaluru)
  +91 84807 18979 (Odisha)
  10:00 am to 05:00 pm on all working days