டிப்ளமோ எஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு கடலோரக் காவல் படையில் வேலை!வாய்ப்பு

இந்தியக் கடலோரக் காவல்படை என்பது இந்திய ஆயுதப்படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்படும் அமைப்பாகும்.

நம் நாட்டின் சர்வதேச நீர் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் படைதான் கடலோரக் காவல் படை எனப்படும் இந்தியன் கோஸ்ட் கார்டு ஆகும். ஒரு வருடத்தின் 365 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றும் பெருமைக்குரிய இந்தக் காவல்படை பல்வேறு கடமைகளை உள்ளடக்கியது. இந்தப் படைக்குக் கடல் சார்ந்த சேவைகள் மட்டுமின்றி நிலப்பரப்பிலும், ஆகாய மார்க்கமாகவும் பணியாற்றும் வசதிகள் உள்ளன.

பெருமைக்குரிய இந்தப் படையில் யாந்திரிக் பிரிவில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதன் பின்னர் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற மூன்று வருட எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பை எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள்
18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1.8.1997க்கு பின்னரும், 31.7.2001க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்த பணியிடங்
களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை  அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: மும்பை, சென்னை, கொல்கத்தா, நொய்டா ஆகிய மையங்
களில் இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான விவரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். ஆன்லைனில்
விண்ணப்பிக்க கடைசி நாள்  21.2.2019.
மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_41_1819b.pdf என்ற இணைய லிங்கை பார்க்கவும்.

- முத்து