அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Sentence Pattern Group IV  (SVOCA) Part 4


ஆழ்ந்த சிந்தனையோடு ஃபைலை புரட்டிக்கொண்டிருந்த ரகுவின் எதிரில் வந்து நின்ற ரவி, “She (subject) selected (verb) the leader (object). She (subject) was selected,(verb) the leader.(complement)… கரெக்ட்டுங்களா சார்?” என்றான். ரவியை நிமிர்ந்து பார்த்த ரகு, “சூப்பர் ரவி! யார்? அல்லது எது? என்ற கேள்வியின் பதில் சப்ஜக்ட். யாரை? அல்லது எதை? என்ற கேள்வியின் பதில் ஆப்ஜக்ட். அதேமாதிரி How?/ Where?/ When? என்ற கேள்வியின் பதில்தான் Adjunct. உதாரணமாக, ‘SPB sang all songs melodiously in the auditorium yesterday’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.

1) Who sang? யார் பாடியது? (SPB- SUBJECT) 2) What did SPB do? எஸ்பிபீ என்ன செய்தார்? (sang VERB) 3) sang what? பாடியது என்ன? (all songs Object) 4) sang how? பாடியது எப்படி? (melodiously - Adjunct) 5. sang where? (பாடியது எங்கே? (in the auditorium  Adjunct) 6. sang when? பாடியது எப்போ (yesterday Adjunct) அவ்வளவுதான். இதுல முக்கியம் என்னென்னா… Verb… இந்த Verb தான் சென்டர். இதச் சுத்தி தான் எல்லாமே.

1) What/Who + Verb = Subject, 2) Verb + what/whom = Object, 3) Verb + how/where/when = Adjunct” என்றார் ரகு.“புரியுதுங்க சார்… complement பத்தியும் கொஞ்சம் comment பண்ணுங்க சார்” என்றவனைப் பார்த்த ரகு, “subject and verb மட்டும் இருந்தாலே போதும். அதை ஒரு வாக்கியம் எனச் சொல்லலாம். உதாரணமாக, My name is. இதில் subject and verb இருக்கின்றன. ஆனால், வாக்கியம் முழுமை பெறவில்லை.

ஆனாலும் வாக்கியம்தான். அடுத்து My name is Raghu. (என் பெயர் ரகு (வாகஇருக்கிறது) இப்பதான் வாக்கியத்தின் பொருள் முழுமையடைகிறது. இது
மாதிரி பொருள் முழுமையடைவதற்காக (to complete the meaning) வரக்கூடிய வார்த்தைகளைத் தான் COMPLEMENT என்கிறோம். உதாரணமாக, We are pupils. You are tall. He is hungry. She is adamant. My teacher has head ache. My teacher has written a letter. They have some work. They have done some work. போல்ட் லெட்டர்ஸ்ல இருக்கிற வார்த்தைகளெல்லாம் complement தான்.

பொதுவா ‘be’ form verbs என்ற (am, is, was, are, were, will be, have, has, had)main verbஆக வந்தால், அதனுடன் வருவது complement தான். இது தவிர விதிவிலக்காய் He became a police man. She was (s)elected President. இப்படிப்பட்ட Complementகளும் உண்டு. நல்லா செஞ்சா Complimentம் கிடைக்கும். Compliment வேணும்னா Complement-ஐ நல்லா புரிஞ்சுக்கோ” என்றார் ரகு.

உடனே ரவி, “நீங்க சொன்னது நல்லா புரிஞ்சிடிச்சி சார். கட்டாயம் Complimentம் வாங்குவேன் சார்” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றான். ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com                  

சேலம் ப.சுந்தர்ராஜ்