நீங்களும் தயாரிக்கலாம் வுட்டன் டூத் பிக் ஸ்டிக்!



சுயதொழில்
 
மாதம் 1,75,000 சம்பாதிக்கலாம்!


உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவுப் பிரியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். மூக்கு முட்ட அசைவ உணவைச் சாப்பிட்டு முடித்ததும் முதலில் தேடுவது பீடாவாக இருந்தாலும் அதற்கு அடுத்ததாக பல் குத்தும் குச்சியைத்தான் பெரும்பாலானவர்கள் தேடுவார்கள். அசைவ உணவு உண்பவர்களும், வெற்றிலை பாக்கு மற்றும் பீடா போன்றவை உபயோகிப்பவர்களுக்கும் பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் மாட்டிக்கொள்வது இயல்பு.

இந்தத் துகள்களை வெளியே எடுக்க மூங்கில் மற்றும் மரத்திலான கூர்மையான பல்குச்சிகள் தேவை. இதை வுட்டன் டூத் பிக் ஸ்டிக் (Wooden Tooth Pick Stick) என்பார்கள். உணவு விடுதிகளில் மற்றும் அசைவ விருந்துகளில் கட்டாயமாக இடம்பெற்றிருக்கும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது.

இந்த வுட்டன் டூத் பிக் மரத்தினால் செய்வதால் இவை பல் மற்றும் அதன் ஈறுகளைப் பாதிக்காது. இதனை ஒருமுறை பயன்படுத்திய பிறகு மீண்டும் மறுமுறை பயன்படுத்த முடியாது. இதனைத் தூய்மையாகவும் நல்ல தரமானதாகவும் தயாரித்தல் அவசியம். ஒரு சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட டூத் பிக்கை உபயோகிப்பார்கள்.

இவை ஒரு குறிப்பிட்ட எடை குறைவான மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. டூத் பிக் ஸ்டிக் தயாரிக்க பெரிய மரங்கள் தேவையில்லை. மரம் அறுக்கும் ஆலைகளில் உதிரியாக விழும் மரக்கழிவுகளில் ஒரு குறிப்பிட்ட துண்டுகளாக எடுத்து பிரத்யேகமான இயந்திரங்களில் இட்டு, இந்த பல்குத்தும் குச்சிகளைத் தயாரிக்கலாம்.

இதற்கான மரங்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. ஒரு கன அடி மரத்தில் பல ஆயிரம் குச்சிகளைத் தயாரிக்கலாம். இதன் மூலப்பொருள் மிகவும் குறைவான விலையில் வாங்கலாம். தயாரிப்பும் மிக எளிது. இதன் தேவையும் அதிகம்.
 
சிறப்பம்சங்கள்

*அசைவ உணவு உண்பவர்களுக்கு
இதன் தேவை அவசியம். எல்லா உணவு விடுதிகள், வீடுகள் விருந்துகளில்
பயன்படுத்துவார்கள்.
*இவை பெரிய ஹோட்டல்கள் மற்றும் காக்டைல் பார்டிகளில் உணவுத்
துண்டுகள் மற்றும் ஃப்ரூட் சாலட்களைக் குத்தி எடுத்து சாப்பிடவும் உதவுகிறது.
*கம்பி மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தினால் அவை பல்லின் ஈறுகளை பாதிக்கும். எனவே, மரத்தினால் ஆன இந்த டூத் பிக்கிற்கு வரவேற்பு அதிகம்.
*ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறிவதால் இதன் தேவை அதிகமாக உள்ளது.
*இதன் மூலப்பொருளான மரம் எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

திட்ட அறிக்கை
 
தயாரிப்பு முறை

 இந்த டூத் பிக் 2.00mm மற்றும் 2.2mm அளவில் இருக்கும். மிகவும் எடை குறைவான மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தினை 2 ½ சதுர அங்குலம் மற்றும் 12 ½ அங்குலம் மரத் துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். 2mm தடிமனில் 15 கட்டையாக இதை வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு 15 குச்சிகளாக வெட்ட வேண்டும். இதன் மூலம் 2 ½ X 2 ½ X 2 ½ என்ற அளவில் கட்டைகளில் இருந்து 15 X 15 = 225 நீளக் குச்சிகள் கிடைக்கும். இந்தக் குச்சியை 12 ½  X 5 குச்சிகளாக வெட்ட வேண்டும். அதன்படி ஒரு கட்டையில் 225 X 5 = 1125 குச்சிகள் கிடைக்கும். இந்தக் குச்சிகளை உருண்டையாக்க உருட்டு இயந்திரத்தில் இட்டு உருண்டையாக்க வேண்டும்.

பின்னர் குச்சிகளை வரிசையாக அடுக்கும் இயந்திரத்தில் இட்டு அடுக்கிக்கொள்ள வேண்டும். குச்சிகளைக் கூர்மையாக்கும் இயந்திரத்தில் இட்டு அதன் ஒரு பகுதியைக் கூர்மையாக்க வேண்டும். பின் வெளிவரும் குச்சிகளை ஒரு பாக்கெட்டுக்கு 100 குச்சிகள் என இட்டு
10 முதல் 20 பாக்கெட்டுகள் சேர்த்து ஒரு பெட்டியில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

தேவையான இயந்திரங்கள்

* Cutting Machine 1 No.
* Stick Forming
* Machine 1 No.
* Short Stick  Cutting Machine 1 No.
* Stick Polishing  Machine    1 No.
* Stick Shorting  Machine    1 No.
* Tip Sharpener  Machine    1 No.
* Multi Functional  Cutter Sharpener 1 No.

மூலப் பொருட்கள்

* மரம் 
* பேக்கிங் மெட்டீரியல் அடிப்படை விவரங்கள்
*ஒரு க்யூபிக் மரத்தின் விலை ரூ.650லிருந்து ரூ.700-வரை கிடைக்கிறது. நாம் ரூ.750-க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
*12.5 x 12.5 x 12.5 = 1.13 க்யூபிக் மரத்திலிருந்து 2,800 குச்சிகள் தயாரிக்கலாம்.
*இந்த இயந்திரத்தின் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 5 லட்சம் குச்சிகள். நாம் ஒரு நாளைக்கு 3 லட்சம் குச்சிகள் தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம்.
*ஒரு மாதத்திற்கு 75 லட்சம் குச்சிகள் உற்பத்தி செய்யலாம்.
*ஒவ்வொரு பெட்டியிலும் 100 குச்சிகள் வைத்து 10 பெட்டிகள் சேர்த்து ஒரு கார்டன் பெட்டியில் வைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.
*ஒரு பெட்டியின் விலை ரூ.18 to ரூ.20 வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நாம் ரூ.10 to ரூ.12 விற்பனை செய்வதாக வைத்துக்கொள்வோம்.
* ஒரு மாதத்திற்கு மூன்று லட்சம் குச்சிகள் எனில் 10,000 பெட்டிகள் தயாரிக்கலாம்.

மூலப்பொருட்களின் தேவை

* 1.3 க்யூபிக் மரத்திருந்து 28,000 குச்சிகள் கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.
*3 லட்சம் குச்சிகள் தயாரிக்க 10.72 க்யூபிக் மரம் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
*ஒரு க்யூபிக் மரத்தின் விலை ரூ.700- என வைத்துக்கொள்வோம்.
*10.72 X ரூ.700- = ரூ.7504
*ஒரு மாதத்திற்கு ரூ.7500 X 25 = ரூ.1,87,500/-
* ஒரு மாதத்திற்குத் தேவையான மரம் வாங்க தேவையான பணம் ரூ.2.00 லட்சம்.

உற்பத்தி மற்றும் விற்பனை வரவு
 
  * கு100 குச்சிகள் விலை - ரூ.10/-
 
 * கு3,000 பெட்டிகள்  - ரூ.30,000/-
 
ஒரு மாதத்திற்கு ரூ.7.50 லட்சம் வருமானம் கிடைக்கும்.
 
பேக்கிங் செலவு
 
* பாலிதீன் பாக்கிங் செலவு கார்டன் பெட்டியுடன் சேர்த்து ரூ.3.00 என வைத்துக்கொள்வோம்.
நமக்கு ஒரு நாளைக்கு பேக்கிங் 3,000
பேக்கிங் பெட்டிகள் தேவைப்படும்.
ஒரு நாளைக்கு 3000 X 3 = ரூ.9,000
ஒரு மாதத்திற்கு ரூ.2.25 லட்சம்.
  
வேலையாட்கள் சம்பளம்

* சூப்பர்வைசர்           
1 X 10,000:    ரூ.10,000
* பணியாளர்                
8 X 5,000: ரூ.40,000
* தொழில்நுட்பப் பணியாளர்
2 X 7500: ரூ.15,000
* விற்பனையாளர்
1 X 10,000: ரூ.10,000
மொத்த சம்பளம்:ரூ.75,000

மொத்த செலவு

மூலப்பொருட்கள்    ரூ.2,00,000
பேக்கிங் மெட்டீரியல்    ரூ.2,25,000
மின்சாரம்    ரூ.5,000
சம்பளம்    ரூ.75,000
இயந்திரப் பராமரிப்பு    ரூ.10,000

மேலாண்மை
செலவு    ரூ.05,000
 விற்பனை செலவு    ரூ.10,000
தேய்மானம் 15%     ரூ.15,000
      கடன் வட்டி        ரூ.10,000
      கடன் தவணை
(60 தவணை)ரூ.16,000

      மொத்தம்    ரூ.5,75,000

லாப விவரம்

மொத்த வரவு  :    ரூ.7,50,000

மொத்த செலவு:    ரூ.5,75,000
லாபம்:        ரூ.1,75,000
சென்னை போன்ற பெருநகரங்களில் ஏராளமான அசைவ உணவு விடுதிகளும், அடிக்கடி விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இருப்பதால் வுட்டன் டூத் பிக் ஸ்டிக்கின் தேவை அதிகமாக இருக்கும். இதன் தேவை இருந்துகொண்டே இருக்கும் என்பதால் விற்பனை செய்வதும் சுலபம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சி.ஆர்.பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி)