TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்
 
முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வழிகாட்டும் விதமாக பாடத்திட்டங்கள் சார்ந்த பல தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துவருகிறோம். அதன்படி பொதுஅறிவு சார்ந்த ஒலி பரவுதல், அதிர்வு வகைகள், எதிரொலி, நிலையான அலைகள் போன்றவற்றை கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…

மீயொலிகள்

*மனிதன் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண்கொண்ட ஒலியை செவியால் கேட்க முடியும். இதுவே செவி உணர் ஒலி நெடுக்கம் எனப்படும்.

*ஒலியின்  அதிர்வெண் 20000 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருப்பின் அவை மீயொலி எனப்படும்.

*வௌவால், திமிங்கலம், டால்பின் போன்ற உயிரினங்கள் மீயொலியை எழுப்புகின்றன.

*யானை, சுறா ஆகிய விலங்கினங்கள் குற்றொலியை எழுப்புகின்றன.

 மீயொலிகளின் பயன்கள்

*வௌவால், டால்பின், திமிங்கலம் ஆகியவை மீயொலிகளை உற்பத்தி செய்து, அவற்றின் எதிரொலித்தல் காரணமாக தடைகளை உணர்ந்து, அவற்றின் மீது மோதாமல் கடந்து செல்கின்றன.

*SONAR மீயொலிகள் எதிரொலித்தலைப் பயன்படுத்தி கடலின் ஆழம் மற்றும் கடலின் தன்மை, கனிமவளம் ஆகியவற்றை அறியலாம்.

*உலோக வார்ப்பினால் செய்யப்பட்ட கருவிகளின் உட்பகுதியில் ஏற்படும் கீறல்களைக் கண்டறியப் பயன்படுகிறது.

*மீயொலி அழுக்கு நீக்கியாகப் பயன்படுகிறது.

*கருவில் குழந்தைகளின் வளர்ச்சியை அறியப் பயன்படுகிறது.

*சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்ற மற்றும் தசைப்பிடிப்பு, மூட்டு வலி நீக்க மருத்துவத்துறையில் பயன்படுகிறது.

ஒலி நாடா

*ஒலி நாடாவில் ஒலியைப் பதிவு செய்தல் முறையை அறிமுகப்படுத்தியவர் போல்சன்.

*ஒலி நாடா, இரும்பு ஆக்சைடு அல்லது குரோமியம் டை ஆக்சைடு ஆகியவற்றால் செய்யப்பட்டது.

*ஒலிப்பதிவு, ஒலி மீட்பு செய்தலை அறிமுகப்படுத்தியவர். தாமஸ் ஆல்வா எடிசன்.

டாப்ளர் விளைவு

*ஒலி மூலத்திற்கும், கேட்பவருக்கும் இடையே ஓர் ஒப்புமை இயக்கம் இருப்பின் ஒலியின் சுருதி அல்லது அதிர்வெண் மாறுவதாகத் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு ஆகும்.

டாப்ளர் விளைவு பயன்கள்

*டாப்ளர் விளைவு RADAR இல் பயன்படுகிறது. ஆகாய விமானம், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றின் திசைவேகம் மற்றும் இயக்கம் பற்றி  அறிய ரேடார்கள் பயன்படுகிறது.

*போக்குவரத்துக் கட்டுபாட்டுக் காவலரின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவியிலிருந்து, அதிக அதிர்வெண் கொண்ட நுண் அலைகள், வேகமாக வரும் வாகனத்தின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தைக் காணலாம்.

*விமான நிலையங்களில் ரேடார்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தை நோக்கி வருகின்ற விமானங்கள் பறக்கும் உயரம், வேகம், தொலைவு ஆகியவற்றைக் கண்டறியலாம்.

*விமான நிலையங்களில் ரேடார்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தை நோக்கி வருகின்ற விமானங்கள் பறக்கும் உயரம், வேகம், தொலைவு ஆகியவற்றைக் கண்டறியலாம்.அதிரொலிஒரு பொருள் ஒலியின் திசைவேகத்தை விட அதிகமாகச் செல்லும்போது ஏற்படும் அதிர்வின் ஒலி அதிரொலி எனப்படும்.

*ஒரு திடப்பொருள் பரும விரிவெண். அதன் நீள விரிவெண்ணின் மூன்று மடங்காகும். 

*சிவப்பு, பச்சை, நீலம் முதன்மை நிறங்கள்.

*காற்று ஊடகத்தின் ஒளிவிலகல் எண்.1

*DIFRACTION  என்ற சொல் லத்தீன் சொல்லிலிருந்து வந்தது.

*காற்றின் ஒளி விலகல் எண்-1,00029.

*பனிக்கட்டி - 1.30

*நீர்-1.33

*மண்ணெண்ணெய் - 1.44

*வைரம் - 2.42

*குடல் உள்நோக்குக் கருவியில் பயன்படுவது கண்ணாடி இழை.

*நீர்மூழ்கிக் கப்பலில், நீர்பரப்பின் மேல் உள்ள பொருளைக் காண  ‘பெரிஸ்கோப்’பயன்படுகிறது.

*கண் லென்சின் வளையும் வடிவத்தைக் கட்டுப்படுத்துவது சிலியரித் தசைகள்.

*விரிக்கும் லென்சு என்பது குழிலென்சு.

*எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தவர் ராண்ட்ஜன் (1896).

*நாட்பட்ட புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கவும், சில வகை தோல் நோய்களைக் குணப்படுத்தவும் எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன.

*டென்னிஸ் பந்து, ரப்பர் டயர்கள் போன்றவற்றிலும், ரத்தினக்கல் உண்மையானதா (அ) போலியானதா எனக் கண்டறியவும், கள்ள நோட்டுகளைக் கண்டறியவும் எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன.

*அகச்சிவப்புக் கதிரின் செயற்கை மூலம் - மின்விளக்கு.

*அகச்சிவப்புக் கதிரின் இயற்கை மூலம் - சூரியன்.

*இயன் மருத்துவமுறையில் பயன்படுவது - அகச்சிவப்புக் கதிர்கள்.

பொதுஅறிவுப் பகுதியில் இன்னும் நிறைய தகவல்களை அடுத்த இதழில் காண்போம்…