திசைகாட்டி



வாசகர் கடிதம்

விண்வெளி அறிவியல் பற்றிய விவரத்துடன் கூடிய இளநிலைப் படிப்புகளின் இன்றைய அத்தியாவசியத்தை விவரித்திருக்கும் கட்டுரை அருமை. விண்வெளிப் படிப்புகளின் வகைகள், விண்ணப்பிக்கும் முறை என முழுமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளது மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்திருந்தது.
- எஸ்.கணேஷ்குமார், ஈரோடு.
 
மல்டிப்பிள் இன்டலிஜன்ஸ் எனும் பன்முகத் திறனறி நுட்பங்களை அறிமுகபடுத்தி அந்த நுட்பங்களை நடைமுறைப்படுத்தி வரும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்த ‘கற்பித்தலில் பன்முக நுட்பங்களைக் கையாளும் பள்ளி!’ என்ற கட்டுரை ஆசிரிய சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்தது. இம்முறையினால் மாணவர்களின்  கற்றல் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை விரிவாக  பட்டியலிட்டு திறனறி செயல்பாடுகளின் வெற்றியைக் கண்முன்னே காட்டியுள்ளது.
  - ஆர்.வீரபாண்டி,  திருச்செங்கோடு
 
வேலை தேடும் இளைஞர்கள் மட்டும் அல்ல தொழில் தொடங்க நினைக்கும் அத்தனை பேருக்கும் வழிகாட்டும் விதமாக உள்ளது சுயதொழில் தொடர்பான கட்டுரைகள். என்ன தொழில் தொடங்கலாம் என்று தவிப்பவர்களுக்கு திசை காட்டியாக உள்ளது கல்வி-வேலை வழிகாட்டியில் வரும் சுயதொழில் கட்டுரைகள். அதற்கு ஓர் உதாரணம், ‘சேமியா தயாரிப்பில் மாதம் ரூ.67,000 சம்பாதிக்கலாம்!’ என்ற கட்டுரை.
  - எம்.கண்ணப்பன், சென்னை-42.
 
 பெயருக்குத் தகுந்த செயல்பாடுகளைப் பதிவு செய்வதில் கல்வி-வேலை வழிகாட்டி ஒவ்வொரு இதழிலும் முத்திரை பதிக்கிறது. ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கான நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் இச்சமயத்தில் அதில் வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களை தெளிவாக, எளிமையாக கொடுத்தமைக்கு நன்றி. ஃபேஷன் டெக்னாலஜியின் உட்பிரிவுகளையும் விரிவாக விவரித்தது அற்புதம்.
  - கே.விஜயலட்சுமி, திருவாரூர்.