வேலை ரெடி!
வாய்ப்புகள்
வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...
எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்குக் கடற்படையில் வேலை
நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்தியக் கடற்படையின் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் மற்றும் பெர்மனென்ட் கமிஷன் வேலைகள். பயிற்சிகள் கேரளாவின் எழிமலாவில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் வழங்கப்படும். வேலை: ஷார்ட் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் பெர்மனென்ட் கமிஷன் அதிகாரிகள். ஷார்ட் சர்வீஸ் கமிஷன் வேலையில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் எனும் இரு பிரிவுகள் உள்ளன. எக்ஸிகியூட்டிவ் துறையில் ஜெனரல் சர்வீஸ் அல்லது ஹைட்ரோகிராஃபி மற்றும் நேவல் ஆர்மெமன்ட் இன்ஸ்பெக்டர் கேடர் வேலைகளும், டெக்னிக்கல் பிரிவில் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் நேவல் ஆர்கிடெக்சர் வேலைகளும் இருக்கும். பெர்மனென்ட் கமிஷன் பதவியில் நேவல் ஆமர்மெமன்ட் இன்ஸ்பெக்டர் கேடர் எனும் ஒரு துறை மட்டுமே இருக்கும். காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை கல்வித்தகுதி: இரு வேலைகளுக்கும் தொடர்புள்ள துறைகளில் எஞ்சினியரிங் படிப்பு படித்திருக்கவேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு: 2.7.93 முதல் 1.1.99 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை: நுண்ணறிவுச் சோதனை, விவாத சோதனை, உளவியல் சோதனை மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in மத்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அறிவியலாளர் பணி! நிறுவனம்: புதுடெல்லியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (nielit) எனும் தகவல் தொழில்நுட்பத்துக்கான நிறுவனம்.
வேலை: சயின்டிஸ்ட்(B), மற்றும் சயின்டிஃபிக் அண்டு டெக்னிக்கல் அசிஸ்டென்ட்(A) வேலைகள் காலியிடங்கள்: மொத்தம் 340. இதில் முதல் வேலையில் 81, இரண்டாம் வேலையில் 259 இடங்கள் காலியாக உள்ளது கல்வித்தகுதி: முதல் வேலைக்கு கம்ப்யூட்டர் எஞ்சினியர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, இ.சி., எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேஷன் அல்லது ஃபிசிக்சில் எம்.எஸ்சி படிப்பு. இரண்டாவது வேலைக்கு எம்.எஸ்சி, எம்.எஸ், எம்.சி.ஏ மற்றும் பி.இ/பி.டெக் படிப்பு வயது வரம்பு: 30க்குள் தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.nielit.gov.in
டிகிரி படிப்புக்கு பாராளு மன்ற செயலகத்தில் வேலை நிறுவனம்: ராஜ்யசபா செக்ரட்டேரியன் எனும் இந்திய பாராளு மன்றத்தின் மக்கள் அவை. வேலை: செக்யூரிட்டி மற்றும் செக்ரட்டேரியேட் உதவியாளர் வேலை காலியிடங்கள்: மொத்தம் 115. இதில் செக்யூரிட்டி உதவியாளர் வேலைக்கு 21, செக்ரட் டேரியேட் உதவியாளர் வேலையில் 39 இடங்கள் அதிகபட்சமாக காலியாக உள்ளது கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. இரண்டாவது வேலைக்குக் கூடுதலாக தட்டச்சுத் திறன் அவசியம் வயது வரம்பு: 18 - 35 வரை தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.rajyasabha.nic.in
தமிழக அரசு மருத்துவத் துறையில் அதிகாரி பணி! நிறுவனம்: தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டில் மருத்துவ அதிகாரி வேலை வேலை: சித்த மருத்துவத் துறையில் அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆஃபீசர் வேலை. இது ஒரு தற்காலிகமான வேலை. காலியிடங்கள்: மொத்தம் 106 கல்வித்தகுதி: சித்த மருத்துவப் படிப்பு வயது வரம்பு: எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி மற்றும் பி.சி. பிரிவினருக்கு 57க்குள்ளும், மற்ற பிரிவினர் 48க்குள்ளும் இருத்தல் வேண்டும் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in
நிதி ஆயோக்கில் சீனியர் அட்வைசர் பணி! நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூஷன் ஃபார் டிரான்ஸ்ஃபார்மிங் இண்டியா ஆயோக் எனும் நிதி ஆயோக் தொடர்பான மத்திய அரசுத் துறை. வேலை: அட்வைசர், சீனியர் அட்வைசர், ரிசர்ச் ஆபீசர் உட்பட 7 பிரிவுகளில் வேலை காலியிடங்கள்: மொத்தம் 173 கல்வித்தகுதி: முதுகலைப் பட்டப்படிப்பு வயது வரம்பு: 26 - 50 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.niti.gov.in
10வது படிப்புக்கு துணை ராணுவப்படையில் வேலை நிறுவனம்: இந்திய துணை ராணுவப்படையின் ஒரு பிரிவான அசாம் ரைஃபில்ஸ் எனும் துப்பாக்கிப் படைப் பிரிவு. வேலை: விளையாட்டில் தேர்ச்சிபெற்ற ஆண்கள், பெண்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்: மொத்தம் 65 கல்வித்தகுதி: 10வது படிப்பு வயது வரம்பு: 18 - 23 தேர்வு முறை: உடற் தகுதி மற்றும் மருத்துவச் சோதனை விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணி! நிறுவனம்: சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். வேலை: அசிஸ்டென்ட் காலியிடங்கள்: மொத்தம் 696 கல்வித்தகுதி: டிகிரி வயது வரம்பு: 18 - 28 தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு போன்ற எழுத்துத் தேர்வுகள் ஆன்லைனிலும், நேர்முகமும் உண்டு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.8.17 மேலதிக தகவல்களுக்கு: www.uiic.co.in
தொகுப்பு: டி.ரஞ்சித்
|