தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அசிஸ்டென்ட் எஞ்சினியர் பணி!



வாய்ப்புகள்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 700 டெக்னிக்கல் அசிஸ்டென்ட்  மற்றும் எலக்ட்ரிக்கல், 250 ஜூனியர் அசிஸ்டென்ட், 325 அசிஸ்டென்ட் எஞ்சினியர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) என மொத்தம் 1275 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளது. நேரடி நியமனம்: மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படு கிறார்கள். அந்த வகையில், 1275 பணியிடங்களும் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளது.

விரைவில் அறிவிப்பு: இந்தப் பணியிடங்களுக்குரிய தேர்வுக்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in) அறிவிப்பு வெளியாகும். மேலும் விவரங்கள் அறிய http://www.tangedco.gov.in/linkpdf/BPTA.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தொழிலாளர் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை! தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள, தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பல்வேறு பிரிவுகளில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், பிளஸ் 1 முதல், முதுகலைப் பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பாடநூல் உதவி, மேல்நிலைக் கல்வி படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 10 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை; மருத்துவம், எஞ்சினியரிங், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் படிப்புகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, 31.10.2017 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, ‘செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்.718, தேனாம்பேட்டை’ என்ற முகவரியிலோ; 044- 2432 1542 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.