TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல பிரிவுகளில் போட்டித்தேர்வுகளை நடத்திவருகிறது. அந்தப் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு வெற்றிப் பாதையை காட்டும் விதமாக அனைத்துப் போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு பாடத்திட்டங்களில் இருந்தும் குறிப்புகளை இப்பகுதியில் வழங்கிவருகிறோம். கடந்த ஜூலை 16 இதழில் பார்த்த இந்திய அரசியல் அமைப்பின் தொடர்ச்சியை இனி பார்ப்போம். பகுதிகளும்,  பட்டியல்களும்: உலகிலேயே மிக நீளமான, விரிவான அரசியல் சட்டம் நம்முடையதே. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடக்கத்தில் 395 விதிகளும், 22 பகுதிகள், 8 பட்டியல்களும் கொண்டதாக இருந்தது. தற்போது 450 விதிகளுக்கு மேல், 24 பகுதிகள் மற்றும் 12 பட்டியல்கள் கொண்டுள்ளது.

முக்கியமான பகுதிகள்
பகுதி - l    மத்திய, மாநில அரசுகளின் பெயர்கள், எல்லைகள்
பகுதி - II    குடியுரிமை                                                                                                                         
பகுதி - III    அடிப்படை உரிமைகள்                                                                         
பகுதி - IV    அரசு வழிகாட்டி நெறிகள்
பகுதி - IV-A    அடிப்படை கடமைகள்                                                                            
பகுதி - VI    மைய அரசு                                                                                                                          
பகுதி - V    மாநிலங்கள்
பகுதி - VIII    யூனியன் பிரதேசங்கள்                                                                                          
பகுதி - IX    பஞ்சாயத்துகள்                                                                                               
பகுதி -IX-A    நகராட்சிகள்
பகுதி - X    The Scheduled - Tribal areas                                                                            
பகுதி - XI    மத்திய - மாநில உறவுகள்
பகுதி -XII    மத்திய - மாநில நிதியுறவு
பகுதி - XIV    மத்திய - மாநில அரசுப் பணிகள்
பகுதி - XV    தேர்தல்கள்                                                                                                                        
பகுதி -XVI    SC, ST, OBC - ஆங்கிலோ இந்தியர்                                
பகுதி -XVII    ஆட்சிமொழி                                                                                                      
பகுதி -XVIII    நெருக்கடி நிலை                                                                                                           
பகுதி -XX    அரசியல் சட்ட திருத்தம்                                                                                        
பகுதி -XXI    ஜம்மு -  காஷ்மீர்

தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பட்டியல்கள் 12 அவற்றுள் முக்கியமானவை.
1-வது பட்டியல் -    மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்                         
7-வது பட்டியல் -    மத்திய, மாநில, பொது அதிகாரப்பட்டியல்                                                                                           (மத்திய 97, மாநில 66, பொது 47)                             
8-வது பட்டியல் -    மாநிலங்கள், அங்கீகரிக்கப்பட்ட (Recognised)                                                                                         மொழிகள் 22                                                                                             
10-வது பட்டியல் -    கட்சித்தாவல் தடைச்சட்டம்                                                  
11-வது பட்டியல் -    பஞ்சாயத்து அமைப்பு களின் 29 அதிகாரங்கள்     
12-வது பட்டியல் -    நகராட்சிகளின் 18 அதிகாரங்கள் யாரிடம் இருந்து என்ன வாங்கினோம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75% பகுதிகள் 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின் அடிப்படையை பின்பற்றியது. நம் அரசியலமைப்புச் சட்டம் பல அம்சங்களில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகளைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது.
பிரிட்டன்: பொதுவாக ஆட்சி அரசாங்க அமைப்பு முழுதும், பெயரளவில் அதிகாரம் உள்ள ஜனாதிபதி, காபினெட் மந்திரி சபை, பிரதமர், இருசபை உள்ள பாராளுமன்றம், அதிக அதிகாரங்களுள்ள கீழ் சபை, கீழ் சபைக்கு (மக்களவை) பொறுப்புள்ள மந்திரி சபை, சபாநாயகர், எம்.பி-க்களின் உரிமைகள், ஒற்றைக் குடியுரிமை, நாடாளுமன்ற அமைப்பு உரிமைகள்.
அமெரிக்கா: அடிப்படை உரிமைகள், உச்சநீதி மன்றம், நீதிமன்றங்களுக்குத் தன்னாட்சியும், நீதிமன்றப் பரிசீலனையும், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்துக்கு ராஜ்யசபா, ஜனாதிபதி, ஸ்டேட் என்ற பெயர்கள், முகப்புரை, ஜனாதிபதி பதவி நீக்க முறை, எழுதப்பட்ட அரசியலமைப்பு.

கனடா: கூட்டாட்சி அமைப்பு, நமது நாடு ‘பல மாநிலங்களின் கூட்டிணைவு’ என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படுவது கனடாவைப் பின்பற்றியது.

அயர்லாந்து: அரசுக்கு வழிகாட்டி முறைகள், ஜனாதிபதி தேர்தல் முறை, ராஜ்யசபை நியமன உறுப்பினர். ரஷ்யா: அடிப்படைக் கடமைகள், ரஷ்யாவின் ‘ஏழு ஆண்டு’திட்டத்தைப் பின்பற்ற நாம் ஐந்து ஆண்டு திட்டம் வகுத்துள்ளோம்.

பிரான்ஸ்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (முகவுரையில் உள்ள சொற்கள்) குடியரசு

ஜெர்மனி: நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யும் அதிகாரம்.

தென் ஆப்பிரிக்கா: அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள்   

1935 இந்திய அரசு சட்டம்: Office of Governor அவசரநிலை பிரகடனம்

ஆஸ்திரேலியா: பொதுப் பட்டியல், கூட்டு கூட்டத்தொடர் இந்திய அரசியலமைப்பு பற்றி தொடர்ந்து அடுத்த இதழில் பார்ப்போம்.