பாபா அணு ஆய்வு மையம் வழங்கும் கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு!



அட்மிஷன்

இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் (Department of Atomic Energy) கீழ் மும்பையில் செயல்பட்டு வருகிறது பாபா அணு ஆய்வு மையம் (Bhabha Atomic Research Centre). இங்கு உள்ள ஒரு வருட கால அளவிலான கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு (Diploma in Radiological Physics - Dip. R.P) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒரு வருட கால அளவிலான கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்புச் (Diploma in Radiological Physics - Dip. R.P)  சேர்க்கைக்குப் பரிந்துரையில்லா இடங்கள் 25, அரசு அமைப்பில் கதிரியக்கச்சிகிச்சைத் துறையில் (Radiotherapy) பணியாற்றுபவர்களுக்கான பரிந்துரை இடங்கள் 5 என்று மொத்தம் 30 இடங்கள் இருக்கின்றன. கல்வித்தகுதி: இப்படிப்புக்கு இயற்பியல் (Physics) பாடத்தினை முதன்மைப் பாடமாகக்கொண்டு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) மற்றும் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண்கள் புள்ளிக்கணக்கில் கணக்கிடப்பட்டிருந்தால், மேற்காணும் மதிப்பெண்களுக்கு இணையான  புள்ளியினைப் பெற்றிருக்க வேண்டும். பரிந்துரைக்கான இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கதிரியக்கச் சிகிச்சைத் துறையிலான பணியில் குறைந்தது ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்படிப்பிற்கு விண்ணப்பிப்போருக்கு 1.10.2017 அன்று பொதுப் பிரிவினர்  26, இதர பிற்பட்ட வகுப்பினர் 29, எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு 31 வயது நிறைவடைந்திருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. பரிந்துரைக்கப்படும் இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 40 வயது
நிறைவடைந்திருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப் புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://recruit.barc.gov.in அல்லது http://barc.gov.in ஆகிய ஏதாவது ஒரு இணையதளத்திற்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதன் பிறகு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.8.2017.

பொது நுழைவுத்தேர்வு: விண்ணப் பித்தவர்கள் அனைவருக்கும் 3.9.2017 அன்று பொது நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப் படும். இப்படிப்புக்குச் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 1.10.2017 முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இப்பயிற்சிக் காலத்தில் பரிந்துரையில்லாப் பட்டியலில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.9300 உதவித்தொகையாக அளிக்கப் படும். மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளங்களைப் பார்வையிடலாம் அல்லது இந்நிறுவனத்தின் 022-25505050 / 25592000 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

  -  முத்துக்கமலம்