கம்பைண்ட் ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட் தேர்வுப் பாடத்திட்டம்!



உத்வேகத் தொடர் 24

வேலை வேண்டுமா?


“கம்பைண்ட் ஜியோ-சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட் எக்சாமினேஷன்” பணிகளுக்கான தேர்வில் கலந்துகொள்வோருக்கான அனைத்துத் தகவல்களையும் நாம் இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாகப் பாடத்திட்டம்... அதன் உட்பிரிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்.

பாடத்திட்டம் பொது ஆங்கிலம் (GENERAL ENGLISH)பொது ஆங்கிலம் (General English) பகுதியில் போட்டியாளரின் ஆங்கில அறிவை மதிப்பீடு செய்யும் வகையில் கேள்விகள் இடம்பெறும். இதேபோல் பணிபுரிவதற்குத் தேவையான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும் திறனை அளவீடு செய்யும் வகையிலும் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். விரிவான விளக்கம் அடங்கிய கட்டுரை வடிவிலான பதில்களை எதிர்பார்க்கும் விதத்தில் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பிரிவு-1 : ஜியாலஜிஸ்ட் பதவிக்கு

*ஜியாலஜி தாள்  1 [200 மதிப்பெண்கள்]
பிரிவு - A பகுதியில்  - Geomorphology and Remote Sensing, பிரிவு  B பகுதியில் Structural Geology, பிரிவு - C பகுதியில் Geodynamics, பிரிவு D பகுதியில் Stratigraphy, பிரிவு - E பகுதியில் Palaeontology ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.
*ஜியாலஜி தாள்  2 [200 மதிப்பெண்கள்]

பிரிவு - A-வில் Mineralogy and Geochemistry and Isotope Geology, பிரிவு - B-ல் Igneous Petrology, பிரிவு - C-ல் Metamorphic Petrology and Processes, பிரிவு -D-ல் Sedimentology, பிரிவு E-ல்  Environmental Geology and Natural Hazards ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.
*ஜியாலஜி தாள்  3 [200 மதிப்பெண்கள்]

பிரிவு - A வில் Indian Mineral deposits and Mineral Economics, பிரிவு - B ல் Ore genesis and Geophysics, பிரிவு - C ல் Mineral exploration, பிரிவு - D-ல்  Geology of fuels, பிரிவு - E ல் Engineering Geology ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

பிரிவு-2 : ஜியோபிசிஸிஸ்ட் பதவிக்கு
ஜியோபிசிக்ஸ் தாள் - 1
[200 மதிப்பெண்கள்]

*பகுதி - A  100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் (a) Solid Earth Geophysics, (b) Earthquake and Engineering Seismology, (c) Mathematical methods of Geophysics, (d) Geophysical Inversion ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*பகுதி - B 100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் (a) Mathematical Methods of Physics, Thermodynamics and Statistical Physics (b) Electrodynamics, (c) Introductory Atmospheric and Space Physics ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.
ஜியோபிசிக்ஸ் தாள் - 2
[200 மதிப்பெண்கள்]

*பகுதி - A  100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் (a) Geophysical Potential Fields (Gravity and Magnetic), (b) Electrical and Electromagnetic Methods, (c) Seismic Prospecting, (d) Borehole Geophysics (Principles of Well logging)  ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*பகுதி - B 100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் - (a) Atomic and Molecular Physics and Properties and Characterisation of materials, (b) Nuclear and Particle Physics, (c) Electromagnetic Theory, (d) Classical Mechanics ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில்
கேள்விகள் இடம்பெறும்.
ஜியோபிசிக்ஸ் தாள் - 3
[200 மதிப்பெண்கள்]

*பகுதி - A  100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் (a) Radiometric Exploration / Airborne Geophysical surveys for Geological Mapping, (b) Marine Geophysics, (c) Geophysical Signal Processing, (d) Remote Sensing and GIS applications ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*பகுதி  - B 100 மதிப்பெண்கள்
இந்தப் பகுதியில் - (a) Solid State Physics, (b) Laser systems, (c) Laser cavity modes, (d) Electronics and devices, (e) Digital electronics, Radar systems, Satellite communications, (f) Quantum Mechanics ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.
பிரிவு-3 : கெமிஸ்ட்  பதவிக்கு

*கெமிஸ்ட்ரி தாள் -1இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி[200 மதிப்பெண்கள்]
இந்தப் பகுதியில் - Chemical Periodicity  Chemical Bonding and structure  Chemistry of coordination compounds  Acid-Base reactions  Precipitation and Redox Reactions  Organo metallic compounds  Nuclear chemistry  s-Block Elements  p-Block Elements  Chemistry of d-and f-block elements ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*கெமிஸ்ட்ரி தாள் - 2 பிசிக்கல் கெமிஸ்ட்ரி[200 மதிப்பெண்கள்]
இந்தப் பகுதியில் - Kinetic theory and the gaseous state  Collision of gas moleculers, Real gases  Liquid state  Solids  Thermodynamics  Application of Second law of thermodynamics  Thermodynamics and Equilibrium  Acids-bases and solvents  Solutions of non-electrolytes  Chemical kinetics and catalysis  Adsorption and Surface Chemistry  Electrochemistry  Photochemistry  Quantum Chemistry  Basic principles and application of spectroscopy  UV Spectra  PMR Spectra ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*கெமிஸ்ட்ரி தாள் - 3 [200 மதிப்பெண்கள்]
பகுதி - A - அனாலிட்டிக்கல் கெமிஸ்ட்ரி
இந்தப் பகுதியில் - Theoretical basis of Quantitative inorganic analysis  Gravimetric Analysis  Sampling and treatment of samples for chemical analysis  Volumetric Analysis  Acid base titrations  Redox Titrations  Potentiometry  Complexometric titrations  Chromatographic methods of analysis  UV-Visible Spectroscopy  Flame photometry and Atomic absorption spectrometry  X-ray methods of Analysis  Inductively coupled plasma spectroscopy  Analysis of Minerals, Ores and Alloys  Analysis of Petroleum and petroleum products  Analysis of coal and coke ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

*பகுதி - B  ஆர்கானிக் கெமிஸ்ட்ரி
இந்தப் பகுதியில் - Basic Organic Chemistry  Organometallic compounds  Bonding and physical properties  AIdoL and related reactions  Mechanism of some name reactions  Electrocyclic Reactions  Organic Reaction Mechanisms  Organic Spectroscopy  ஆகிய பாடத் தலைப்புகள் உள்ளடக்கிய பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்.

பிரிவு-4 : ஜுனியர் ஹைட்ராலஜிஸ்ட் பதவிக்கு
ஹைட்ரோஜியாலஜி [200 மதிப்பெண்கள்]

பிரிவு  A:  இந்தப் பகுதியில் - Origin, occurrence and distribution of water  என்னும் பாடத் தலைப்பில் கேள்விகள் இடம்பெறும்.
பிரிவு  B: இந்தப் பகுதியில் - Groundwater Hydraulics - என்னும் பாடத் தலைப்பில் கேள்விகள் இடம்பெறும்.
பிரிவு  C: இந்தப் பகுதியில் - Groundwater Exploration and Water Well Construction என்னும் பாடத் தலைப்பில் கேள்விகள் இடம்பெறும்.
பிரிவு  D: இந்தப் பகுதியில் - Groundwater Quality  என்னும் பாடத் தலைப்பில் கேள்விகள் இடம்பெறும்.
2. பகுதி  II நேர்முகத் தேர்வு / ஆளுமைத்தேர்வு (Part  II  Interview /   Personality Test)

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு (Interview Test) எனப்படும் ஆளுமைத் தேர்வு (Personality Test) நடத்தப்படும். இந்தத் தேர்வில் போட்டியாளரின் தலைமைப்பண்பு (Leadership), தன் ஊக்கத்திறன் (Initiative), அறிவுசார் ஆர்வம் (Intellectual Curiosity), சமூகப் பண்புகள் (Social Qualities), மனம் மற்றும் உடல்சக்தி (Mental and Physical Energy), சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறன் (Adaptability), படித்தவற்றைச் செயலாக்கும் திறன் (Power of Practical Application), ஒருங்கிணைந்த செயல்பாடு (Integrity) ஆகிய பண்புகளையும், திறன்களையும் மதிப்பீடு செய்யும் விதத்தில் கேள்விகள் இடம்பெறும்.

மேலும் விவரங்களுக்கு“கம்பைண்ட் ஜியோ-சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட் எக்சாமினேஷன்” பற்றிய அதிகமான விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

- தொடரும்.

நெல்லை கவிநேசன்