வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...
கல்பாக்கம் அணு உலையில் வேலைநிறுவனம்: பாவினி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பாரதிய நபிகியா வித்யூத் நிகம் லிமிடெட். மத்திய அரசின் அணுசக்தி வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட இத்துறை, தனது
கட்டுப்பாட்டில் இயங்கும் கல்பாக்கம் அணு உலை நிறுவனத்துக்கான பணியாளர்களைத் தற்போது தேர்ந்தெடுக்கிறது.
வேலை: மெடிக்கல் ஆபீஸர், டெக்னிக்கல் ஆபீஸர், சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் மற்றும் அசிஸ்டென்ட் எனும் நான்கு முக்கிய பிரிவின் கீழ் பல்வேறு வேலைகள்.
காலியிடங்கள்: மொத்தம் 54. இதில் மெடிக்கல் ஆபீஸர் - 1, டெக்னிக்கல் ஆபீஸர் - 14, சயின்டிஃபிக் அசிஸ்டென்ட் - 20, அசிஸ்டெண்ட் - 19 என காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகப் பிரிவுக்கேற்ப இதில் இட ஒதுக்கீடும் உண்டு.
கல்வித் தகுதி: 4 பிரிவுகளில் முதல் பிரிவுக்கு எம்.டி பட்டமும், இரண்டாம் பிரிவுக்கு பி.இ மற்றும் பி.டெக் படிப்பும், மூன்றாம் பிரிவுக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும், இறுதிப் பிரிவுக்கு டிகிரி படிப்பும் அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 4.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.bhavini.nic.in
மத்திய அரசுப் பணிகள்
நிறுவனம்: மத்திய அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு தேர்வாணையக் குழு
வேலை: லேடி மெடிக்கல் ஆபீஸர், இன்ஃபர்மேஷன் சர்வீஸ், கிரேடு 2 மெடிக்கல் ஆபீஸர், அசிஸ்டென்ட் எஞ்சினியர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 77
கல்வித் தகுதி: வேலைப்பிரிவுகளுக்கு ஏற்ப எம்.டி படிப்பிலிருந்து எஞ்சினியரிங் டிகிரி, டிகிரி படிப்புகள் கேட்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: வேலை பிரிவுகளுக்கு ஏற்ப 20 முதல் 48 வரை.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.upsconline.nic.in
டிப்ளமோ படித்தவர்களுக்கு ஸ்டீல் துறையில் வேலைநிறுவனம்: மத்திய அரசின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனும் உருக்குத் துறை
வேலை: பல்வேறு துறைகளில் டெக்னீஷியன் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 473. இதில் நேரடி வேலை, பயிற்சிக்குப் பிறகான வேலை என இரு பிரிவு உள்ளது. ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் பிரிவில் 9 பணியிடங்களும் அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பிரிவில் 5 பணியிடங்களும் மட்டுமே நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
பயிற்சிக்குப் பிறகான வேலையில்தான் அதிகபட்ச பணியிடங்கள். (ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் - 290, அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் - 169)
கல்வித் தகுதி: இதில் ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் பணிக்கு பத்தாம் வகுப்புடன் வேலை பிரிவுக்கு ஏற்ப 3 வருட எஞ்சினியரிங் டிப்ளமோவும் தேவை. அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு பத்தாம் வகுப்புடன் ஐ.டி.ஐ படிப்பும் அவசியம். இதனோடு குறிப்பிட்ட உடற்தகுதியும் எதிர்பார்க்கப்படுகிறது.
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 28 முதல் 35 வரை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 5.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.sail.co.in
பெண் பட்டதாரிகளுக்கு விமானப்படை வேலைநிறுவனம்: இந்திய விமானப்படை. ('ஏர்ஃபோர்ஸ் காமன் அட்மிஷன் டெஸ்ட்’ எனும் ஏ.எஃப்.சி.ஏ.டி தேர்வு மூலம் பெண்களை வேலைக்கு சேர்க்கும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வு இது.)
வேலை: ஃபிளையிங், டெக்னிக்கல் மற்றும் கிரவுண்ட் டியூட்டி பிரிவுகளில் பணிகள்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு கமர்ஷியல் பைலட் உரிமமும் +2வில் அறிவியல் பாடங்களைப் படித்து ஏதேனும் டிகிரியில் 60 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் வேலைக்கு பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் ஏரோநாட்டிகல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்றாம் வேலைக்கு இளங்கலை, முதுகலை, பிஎச்.டி, சி.ஏ போன்ற படிப்புகள் தேவை. இதனோடு உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: முதல் வேலைக்கு 19 முதல் 23 வரை, இரண்டாம் வேலைக்கு 18 முதல் 28 வரை, மூன்றாம் வேலைக்கு படிப்புக்கு ஏற்ற வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.careerairforce.nic.in
அரசு கால்நடைத் துறையில் வேலைநிறுவனம்: டி.என்.பி.எஸ்.சி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
வேலை: தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்பெக்டர் எனும் புள்ளிவிவர ஆய்வாளர் பணி.
காலியிடங்கள்: மொத்தம் 6 (வகுப்புவாரியாக ஒதுக்கப்பட்டுள்ளது).
கல்வித்தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்தில் டிகிரி
வயது வரம்பு: குறைந்த வயது 18. அதிகபட்ச வயது, வகுப்புவாரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 16.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.tnpscexams.net
கிராம வங்கியில் வேலைநிறுவனம்: வங்கி வேலைகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ் அமைப்பு, சேலத்தில் உள்ள பல்லவன் வங்கி மற்றும் விருதுநகரில் உள்ள பாண்டியன் வங்கிகளுக்காக பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. ஐ.பி.பி.எஸ் தேர்வை மட்டும் நடத்த, கிராம வங்கிகள்தான் தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து இறுதி அறிவிப்பைச் செய்யும்.
வேலை: ஆபீஸர்ஸ் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் எனும் இரண்டு வகையான பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு இது. முதல் வேலை, ஸ்கேல் 1, ஸ்கேல் 2, ஸ்கேல் 3 என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஸ்கேல் 2 பிரிவானது ஜெனரல் பேங்கிங், ஸ்பெஷலைஸ்டு ஆபீஸர் என மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை.
கல்வித் தகுதி: இரண்டு பிரிவு வேலைகளுக்கும் டிகிரி அவசியம். ஸ்கேல் 1 வேலைக்கு விவசாயம், கால்நடை போன்ற படிப்பிலும், ஸ்கேல் 2 இன் ஜெனரல் பிரிவில் வங்கி, பைனான்ஸ் போன்ற படிப்பிலும், ஸ்பெஷலைஸ்டு பிரிவில் கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சி.ஏ, சட்டம், மார்க்கெட்டிங் படிப்பிலும், ஸ்கேல் 3க்கு வங்கி, பைனான்ஸ், விவசாயம், கால்நடை போன்றவற்றிலும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: முதல் பிரிவில் உள்ள ஸ்கேல் 1 வேலைக்கு 18 - 28, ஸ்கேல் 2க்கு 21 - 32, ஸ்கேல் 3 க்கு 21 - 40. மேலும், அசிஸ்டென்ட் வேலைக்கு 18 - 28 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்கு வயது தளர்ச்சி உண்டு)
பிற தகுதிகள்: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி அறிவு அவசியம். இத்தோடு எல்லா பிரிவு வேலைக்கும் அனுபவம், கம்ப்யூட்டர் அறிவுத்திறன் முக்கியம்.
தேர்வு நாள்: உத்தேசமாக செப்டம்பர் 2014.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 9.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.ibps.in
பாதுகாப்புப் படையில் நர்ஸ் வேலைநிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ்
வேலை: மோட்டார் ஒர்க் ஷாப் பணிகள் மற்றும் ஸ்டாஃப் நர்ஸ், ஃபார்மசிஸ்ட் பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 55. இதில் மோட்டார் ஒர்க்ஷாப் பணிக்கு 18 ஆண்களும், ஸ்டாஃப் நர்ஸ், ஃபார்மசிஸ்ட் பணிக்கு 37 ஆண்கள் மற்றும் பெண்களும் தேவைப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் வேலைக்கு நர்சிங், ஃபார்மசியில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 14.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.bsf.nic.in
பாதுகாப்புப் படையில் ஐ.டி வேலைநிறுவனம்: பி.எஸ்.எஃப் எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸின் கம்யூனிகேஷன் மற்றும் ஐ.டி துறை.
வேலை: அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் பதவிகளில் பல்வேறு வேலைகள். இதில் ஆண்கள், பெண்கள் இரு தரப்பினரும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: மொத்தம் 317
கல்வித் தகுதி: இந்தப் பல்வேறு வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப, பத்தாம் வகுப்பு முதல் டிப்ளமோ வரை கேட்கப்படுகிறது. டெலிகம்யூனிகேஷன் துறை என்பதால் அது சார்ந்த படிப்புகளில் டிப்ளமோவோ அல்லது ஐ.டி.ஐ படிப்போ இருப்பது அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 25க்குள். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் 18 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.7.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.bsf.nic.in