‘பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி’ என்ற தகவல் மட்டுமின்றி, அது எதற்கெல்லாம் பயன்படும் என்பது பற்றியும் குறிப்பிட்டு எழுதியது நிறைவாக இருந்தது. ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முடியும் என்ற தகவலும் பயனுள்ளது.
- எஸ்.கலாராணி, தேனி.

தைராய்டு பிரச்னை அதிகமாகி வரும் தருணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ள ஐந்தே நிமிடத்தில் தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளும் கருவி மிகவும் உபயோகமாக இருக்கும். மருத்துவமனைகள் கவனிக்க வேண்டும்.
- ஜி.பாரதி, புதுச்சேரி.
ஜிழிறிஷிசி குரூப் மிமி கி தேர்வுக்குத் தயாராவது எப்படி? என்ற கட்டுரை தகுந்த நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் பணம் கட்டி இன்ஸ்டிடியூட்களில் படிக்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு ‘குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி’தான் பாடப்புத்தகமாக இருக்கிறது.
- இரா.வடிவேலன், மதுரை.
‘ஏர் ஹோஸ்டஸ்’ வேலை என்பது நகர்ப்புறங்களில் இருக்கும் மேல்தட்டு மக்களுக்கானது என்று நினைத்திருந்தேன். ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான பெண்களும் ஏர்ஹோஸ்டஸ் ஆகமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் கல்வியாளர் ராஜராஜன். படிப்புகள், தகுதிகள், படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு என முழுமையான தந்தமைக்கு நன்றி.
- ஆர்.பரசுராமன், திண்டுக்கல்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வாங்குவதே பெரிய செலவு. அதற்கு எளிய தீர்வை சொல்லி அசத்தி விட்டீர்கள். இலவசமாகவும், குறைந்த வாடகைக்கும் பாடப்புத்தகங்களை வழங்கும் புத்தக வங்கிகள் பற்றிய செய்தி மாணவர்களுக்கு பயனளிக்கும்.
- ஐ.கந்தசாமி, காங்கேயம்.
காளான் வளர்ப்பு தெரியும் மருத்துவ காளான் வளர்ப்பு பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை. சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளீர்கள். நன்றி.
- சி.பி.சார்லஸ், கடலூர்.
வேளாண்மை என்றாலே முகம் சுளிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினையாக வெளிவந்திருக்கிறது ‘தோட்டக்கலை படித்தால் தேடாமலே வரும் வேலை’ கட்டுரை. எதிர்காலத்தில் விவசாயம்தான் பிரதான தொழிலாக இருக்கப்போகிறது.
- எஸ்.சங்கீதா, திருப்பூர்.