மார்க் குறைந்தாலும் மார்க்கமுண்டு!



 விரிந்திருக்கும் கல்வி வாய்ப்புகள்

‘‘இப்போதெல்லாம் +2 தேர்வில் தோல்வி கண்டவர்களின் கவலையை விட, நூலிழையில் மருத்துவம், பொறியியல் சீட்டுகளைக் கோட்டை விட்டவர்களின் கவலைதான் பெரிதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கவலை தேவையே இல்லை. மதிப்பெண் குறைவானதால் வாழ்வே அஸ்தமித்து விடாது’’ - வார்த்தைகளில் நம்பிக்கை வார்க்கிறார் ஸ்டடி இண்டியா நிறுவனத்தின் சிணிளி ச.பார்த்த சாரதி. கொட்டிக் கிடக்கும் பல்வேறு கல்வி வாய்ப்புகளை அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் எடுத்துக் கூறி வழிகாட்டி வருகிறது இந்த ஸ்டடி இண்டியா.

‘‘எவ்வளவு அதிகம் மதிப்பெண் பெற்றாலும் கட் ஆஃப் தாண்டி மருத்துவம், பொறியியல் போன்ற சீட்டுகளை கவர்ந்து போகிறவர்கள் சிலரே. மற்றவர்கள் ‘அச்சோ... கிடைக்கவில்லையே’ என சோர்ந்து போகிறார்கள். உண்மையில் இந்த இரண்டு துறைகளில் மட்டும்தான் சாதிக்க முடியுமா என்ன? இன்று மிகப் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் பலரும், +2வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள்தான். அதன் பிறகுள்ள கல்லூரிப் படிப்பை சரியாகத் திட்டமிட்டு முறையாக உழைத்து நல்ல இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள் அவர்கள்’’
 என்கிறவர், அப்படியான படிப்புகள் சிலவற்றையும் இங்கே பட்டியலிடுகிறார்...

1. தொழிற்கல்வி:

பொறியியல் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்த மாணவர்கள் அதில் சேர இயலாவிட்டால், 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம். இதிலும் ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங், டெக்ஸ்டைல், கணினி, Instrument, Commercial, Practice, Computer Hardware, Telecommunication Technology, Automobile, Biomedical , Polymer Technology, Information Technology   எனப் பல பாடப் பிரிவுகள் உள்ளன.

இது மூன்று வருட படிப்பாகும். பாலிடெக்னிக் படித்தவர்கள் உடனடியாக வேலைக்குச் செல்ல அந்தந்த துறைகளில் வாய்ப்புகள் அதிகம். வேலை பார்த்தபடியே பகுதி நேரமாக   ஙி.ணி படிக்கலாம். அப்படியே இல்லாவிட்டாலும் இவர்கள் சொந்தத் தொழிலும் நடத்த முடியும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. உதாரணமாக, சென்னையில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஓட்டேரி வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் எனப் பல்வேறு அரசு மற்றும் தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன. எந்தக் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும், எந்தத் துறையை தேர்வு செய்ய வேண்டும் என்பதெல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது.  

2. AMIE படிக்கலாம்:

AMIE என்ற கல்வியை Institute of Engineers (India) எனும் நிறுவனம் வழங்குகிறது. இது 15 பொறியியல் துறைகளை உள்ளடக்கிய தேசிய அமைப்பாகும். ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்புக்கு, இந்தியா மற்றும் அயல்நாடுகளில் 99 மையங்கள் உள்ளன. கிவிமிணி (Associate Member of the Institute of Engineers of India) என்பது இந்தியப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஙி.ஜிமீநீலீ பட்டத்திற்கு இணையானதாகும். இது முறையாகக் கல்லூரி சென்று படிப்பதாகவும், பணியில் உள்ளவர்கள் பகுதி நேரமாகப் படிப்பதாகவும் அமையும்.

பொறியியல் படிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் மிணி நடத்தும் தகுதித் தேர்வில் வென்று, section A, Section B, Project Work மற்றும் Laboratory Experiment தேர்வு இவற்றில் தேர்ச்சியடைய வேண்டும். இதற்கு, +2வில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் எடுத்து குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும். 3 ஆண்டு டிப்ளமோ படித்து முடித்தவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு:Email: chapters@ieindia.org Web: www.ieindia.org

3. பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள்:

பாலிடெக்னிக் படிக்க விருப்பம் இல்லாதவர்களும், மேற்கொண்டு நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் உள்ளவர்களும் அவர்களுக்குப் பிடித்த இளநிலை பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். நேரடியாக நான்கு வருடத்தில் இளநிலை - முதுநிலை பட்டப்படிப்புகளை முடித்துவிடும் இன்டகிரேடட் வகுப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம். முடிந்தவரை இளநிலை (Under graduate) படிப்புகளை கல்லூரியில் சென்று படிப்பது அவசியம். காரணம், பகுதி நேர இளநிலைப் பட்டம் படித்தவர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கொடுப்பதில்லை. ஆனால், ஒரு அடிப்படை இளநிலை பட்டத்தை முழுநேரத்தில் பெற்று பின்பு முதுநிலை படிப்பை தொலைதூரக்கல்வியில் படிப்பதால் எவ்வித பாதிப்பும் இருக்காது.

4. மற்ற வாய்ப்புகள்:

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளிலேயே எக்கச்சக்க ஆப்ஷன்கள் உள்ளன. உங்களுக்கேற்ற படிப்புகள் கீழ்க்காணும் பல்வேறு படிப்புகளில் ஒன்றாகவும் இருக்கலாம். இவற்றில் பெரும்பாலானவை படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகளாகும்.
பாரா மெடிக்கல் துறைகள்:

B.P.T., B.O.T, B.Pharm/D.Pharm   
B.S. Optometry, DMLT   
 B.Sc. Nursing,  Diploma Nursing   
Medical Lab Technician
B.Sc/ Diploma Nutrition  Dietics   
Speech Hearing Therapy   
Dental Hygienist, Dental Mechanic   
ECG, Medical Radiation, Radiology    
Orthopist   

Anathesian   
Medical Transcription         
விவசாயம் மற்றும் கால்நடைப் படிப்புகள்:
B.Sc. Home Science, Agri, Horticulture
B.F.Sc. Fishing   

B.Sc. Hotel Management, Catering
B.Sc. Dairy Technology, Dairy Farming, Poultry
Farming
மற்ற இளநிலை படிப்புகள்:
B.Sc. Maths, Physics, Chemistry, Botany, Zoology, Statistics   
B.Com, ICWAI, ACS, CA   
Journalism   
Photography   

Fashion - Designing   
Fine Arts
Environment   
Plastics   
Footwear   
Astronomy       
Librarian       
Insurance

 ஆக, என்ன படிக்கிறோம் என்பதை விட, எடுத்துக் கொண்ட துறையை எப்படிப் படிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி நம்பிக்கையுடன் வாழ்வில் வெல்லுங்கள்!
- எம்.நாகமணி