பொருளியல் படித்தால் பொன்னான எதிர்காலம்



பொருட்களின் உற்பத்தி (Production), நுகர்வு (consumption) மற்றும் அவற்றின் இடப்பெயர்வு (Transfer) குறித்த படிப்பே பொருளியல்   (Economics). ஒருவர் தான் சம்பாதிக்கும் பணத்தைத் திட்டமிட்டு செலவிடுதல், எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைத்தல் போன்ற இன்றியமையாத செயல்களுக்கு அடிப்படைத் தேவை பொருளாதாரத் திட்டமிடல். பொருளியல் துறை, உற்பத்தியாளர்கள், நுகர்வோர்,

முதலாளிகள், தொழிலாளர்கள், தலைவர்கள், நிதித் துறையினர், பன்னாட்டு வணிகர்கள் மற்றும் தனி மனிதர்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றக்கூடிய துறையாகும். இத்துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள், ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் சர்வதேச நிறுவனங்கள், சிறப்பான துறைகளைக் கொண்ட கல்வி நிறுவனங்கள், சாதனையாளர்கள், கௌரவங்கள் பற்றி விளக்குகிறார் ''இன்ஸ்பையர் ஃபெல்லோ'' முனைவர் உதயகுமார்.

நாட்டின் அச்சாணியே பொருளாதாரம்தான். மொத்த வருவாய், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட தொகை தேவையை நிறைவேற்றியதா? இல்லையா? என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை நிலைகளுக்கு ஆதாரமாக விளங்குவது பொருளியல் துறை. உலகம் முழுவதும் மதிப்பு மிக்க வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள பொருளியல் துறையை மாணவர்கள் தாராளமாகத் தேர்வு செய்து படிக்கலாம். உலகில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிக மிக உயர்ந்த நிலைகளை, பொருளியல் துறையைப் படிப்பதன் மூலம் பெற முடியும். இந்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணையம் பொருளியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு IES என்ற தேர்வை நடத்துகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மிகிஷி பணித் தகுதிக்கு இணையான பணியில் சேர முடியும்.

பொருளியல் துறை சார்ந்த படிப்புகள்
B.A.  Economics , M.A .Economics, M.Phil.Economics
Ph.D. Economics, B.Sc. Economics, M.Sc. Economics
D.Phil.Economics, B.Tech. Economic Management Analysis, B.S. Economics, M.S. Economics , B.B.A.Economics , M.B.A. Economics
  பொருளியல் துறை சார்ந்த பிரிவுகளுள் சில...
* பயோ எகனாமிக்ஸ்- உயிரி பொருளாதாரவியல்
* டெவலப்மென்ட் எகனாமிக்ஸ் - வளர்ச்சிப் பொருளியல்
* எக்னோமெட்ரிக்ஸ் - பொருளாதார புள்ளியியல்
* எகனாமிக் ஹிஸ்ட்ரி - பொருளாதார வரலாறு
* எகனாமிக் சோஷியாலஜி - பொருளாதார சமூகவியல்
* எஜுகேஷன் எகனாமிக்ஸ் - கல்விப் பொருளாதாரவியல்
* எனர்ஜி எகனாமிக்ஸ் - ஆற்றல் பொருளாதாரவியல்
* என்விரோன்மென்ட்டல் எகனாமிக்ஸ் - சுற்றுச்சூழல் பொருளியல்
* இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் - பன்னாட்டு பொருளியல்
* மேனேஜெரியல் எகனாமிக்ஸ் - மேலாண்மைப் பொருளியல்
* பப்ளிக் எகனாமிக்ஸ் - பொது பொருளியல்
* பப்ளிக் ஃபைனான்ஸ்  - பொது நிதியியல்
* இஸ்லாமிக் எகனாமிக்ஸ் - இஸ்லாமியப் பொருளியல்
* கம்ப்யூட்டேஷனல் எகனாமிக்ஸ் - கணினிப் பொருளியல்
* எக்ஸ்பெரிமென்டல் எகனாமிக்ஸ் - சோதனைப் பொருளியல்
தமிழகத்தில் சிறந்த பொருளியல் துறைகளைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...
* மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்,         சென்னை
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபைனான்ஷியல்             மேனேஜ்மென்ட், சென்னை
* எத்திராஜ் காலேஜ் ஃபார் உமன், சென்னை
* விவேகானந்தா கல்லூரி, சென்னை
* லயோலா கல்லூரி, சென்னை
* மாநிலக் கல்லூரி, சென்னை
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* பச்சையப்பன் கல்லூரி, சென்னை
இந்தியாவிலுள்ள சிறந்த பொருளியல்
ஆய்வு நிறுவனங்கள் சில...
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக்ஸ், ஐதராபாத்
* இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக் க்ரோத், டெல்லி
* இன்ஸ்டிடியூட் ஃபார் சோஷியல் அண்டு எகனாமிக் சேஞ்ச், பெங்களூரு
* மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், சென்னை
* கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிட்டிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ், புனே.
* சென்டர் ஃபார் எகனாமிக் அண்டு சோஷியல் ஸ்டடீஸ், ஐதராபாத்
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எகனாமிக்
ஸ்டடீஸ், புது டெல்லி.
* அக்ரோ எகனாமிக் ரிசர்ச் சென்டர்,
இமாசலப் பிரதேசம்
* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி, புதுடெல்லி
* சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்,
திருவனந்தபுரம்.
 உலகின் சிறந்த பொருளியல் துறைகளைக் கொண்ட கல்வி நிறுவனங்கள்
*ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.harvard.edu)
*சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.uchicago.edu)
*ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.stanford.edu)
*கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.berkeley.edu) 
*கொலம்பியா பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.columbia.edu)
*நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.northwestern.edu)
* நியூயார்க் பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.nyu.edu)
*யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.yale.edu)
*பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா (www.upenn.edu)
*லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் சயின்ஸ், இங்கிலாந்து (www.lse.ac.uk)
 உலக அளவில் புகழ்பெற்ற இந்தியப்
பொருளாதார வல்லுநர்கள் சிலர்...
* அமர்த்யா குமார் சென் (பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்-1998)
* சங்கர் ஆச்சார்யா
* கௌஷிக் பாசு
* சந்தோஷ் பட்டாச்சார்யா
* வி.வி.சாரி
* பத்மா தேசாய்
* ஹரிஹரன் சந்திரசேகர்
* தேவகி ஜெயின்
* அமிர் உல்லாஹ் கான்
* ஜே.சி.குமரப்பா
* சி.டி.குரியன்
* ஆர்.கே.பச்சௌரி
* நானாபாய் பல்கிவாலா
* ஈஸ்வர் பிரசாத்
* ரகுராம் ராஜன்
உலக அளவில் சிறந்த
பொருளாதார நிபுணர்கள் சிலர்...
* கார்ல் மார்க்ஸ்
* ஆடம் ஸ்மித்
* தாமஸ் மால்த்தூஸ்
* ஜான் மேனார்டு கேய்னெஸ்
* மில்டன் ஃப்ரீட்மேன்
* க்ரிகோரி மேன்கிவ்
* கென்னத் ஆர்ரோ
* ரெக்னார் ஃப்ரிஸ்க்
* ஃப்ரடெரிக் ஹாயெக்
* ஹரோல்டு ஹோட்டலிங்
* ஜாக்கப் மார்ஸ்சாக்
* ஜான் வோன் நியுமன்
* டேவிட் ரிகார்டோ
* பால் சாமுவேல்சன்
* அமர்த்யா குமார் சென்
பொருளாதாரம் சார்ந்த ஆய்வுகளை
மேற்கொள்ளவும், ஆய்வு மேற்கொள்பவர்களை அங்கீகரிக்கவும் இந்தியாவில்
தொடங்கப்பட்டுள்ள அமைப்புகள் சில...
* அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் ரிசர்ச் அசோசியேஷன் (www.aeraindia.in)
* இண்டியன் சொசைட்டி ஆஃப் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் (www.isaeindia.org)
* இண்டியன் எகனாமிக் அசோசியேஷன் (www.indianeconomicjournal.org)
* ஹெல்த் எகனாமிக் அசோசியேஷன் ஆஃப் இண்டியா (www.heai.org.in)
* அசோசியேஷன் ஆஃப் இண்டியன் எகனாமிக்ஸ் அண்டு ஃபினான்சியல் ஸ்டடீஸ் (http://www.aiefs.org/)
* இண்டியன் ஹெல்த் எகனாமிக்ஸ் அண்டு பாலிஸி அசோசியேஷன் (www.ihepa.in)
* இண்டியன் எகனாமிக் டெவலப்மென்ட் அண்டு ரிசர்ச் அசோசியேஷன் (www.iedra.org)
* இண்டியன் லேபர் எகனாமிக்ஸ் அசோசியேஷன் (www.isleijle.org)
* இண்டியன் அசோசியேஷன் ஃபார் இஸ்லாமிக் எகனாமிக்ஸ் (www.iafie.net)
* தி இண்டியன் எகனோமெட்ரிக் சொசைட்டி (www.tiesindia.net)
உலக அளவில் பொருளாதாரத்துறை
மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் செயல்படும் அமைப்புகள் சில...
*எகனாமிக்ஸ் அசோசியேஷன் ஆஃப் ஜாம்பியா (www.eaz.org.zm)
*கனடியன் எகனாமிக்ஸ் அசோசியேஷன் (www.economics.ca/en/)
*இன்டர்நேஷனல் எகனாமிக் அசோசியேஷன் (www.ieaworld.org)
*வேர்ல்டு எகனாமிக்ஸ் அசோசியேஷன் (www.worldeconomicsassociation.org)
*தி அமெரிக்கன் எகனாமிக் அசோசியேஷன் (www.aeaweb.org)
*வெஸ்டர்ன் எகனாமிக் அசோசியேஷன் இண்டர்நேஷனல் (www.weai.org)
*சதர்ன் எகனாமிக் அசோசியேஷன் (http://southernecho.org/s/)
*அமெரிக்கன் லா அண்டு எகனாமிக்ஸ் அசோசியேஷன் (www.amlecon.org)
*இண்டர்நேஷனல் ஹெல்த் எகனாமிக்ஸ் அசோசியேஷன் (www.healtheconomics.org)
*அசோசியேஷன் ஆஃப் சோஷியல் எகனாமிக்ஸ் (www.socialeconomics.org)
பொருளியல் துறை ஆய்வுகளில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் சில...
* நோபல் பரிசு -ராயல் ஸ்வீடிஷ் அகாடமி, ஸ்வீடன்.
* ஜான் பேட்ஸ் க்ளார்க் மெடல்- தி அமெரிக்கன் எகனாமிக் அசோசியேஷன், அமெரிக்கா
* செரீனா மெடல் - பிரிட்டிஷ் அகாடெமி, இங்கிலாந்து
* வைலி ப்ரைஸ் இன் எகனாமிக்ஸ் - பிரிட்டிஷ் அகாடெமி, இங்கிலாந்து
* ஆர்த்தர் ஸ்னீடர்மேன் ஸ்காலர்ஷிப் - குயின்ஸ் யுனிவர்சிட்டி, கனடா
* ஜேம்ஸ் போக்கிங் ப்ரைஸ் - குயின்ஸ் யுனிவர்சிட்டி, கனடா
* ஜான் வோன் நியுமென் அவார்டு - ஹங்கேரி
* இன்ஃபோசிஸ் ப்ரைஸ் இன் சோஷியல் சயின்ஸ் - இன்ஃபோசிஸ் சயின்ஸ்
ஃபவுண்டேஷன், இந்தியா
* நக்கஹரா ப்ரைஸ் - ஜப்பானீஸ் எகனாமிக்
அசோசியேஷன், ஜப்பான்
* தி கோஸ்ஸன் ப்ரைஸ் - வோரின்ஃபர் சோஷியல் பொலிடிக், ஜெர்மனி
பொருளியல் படித்தவர்களுக்கு
வேலைவாய்ப்புகளை வழங்கும்
நிறுவனங்கள் சில...
*  மினிஸ்ட்ரி ஆஃப் பைனான்ஸ் அண்ட் கம்பெனி அஃபயர்ஸ், மத்திய அரசு.
* மினிஸ்ட்ரி ஆஃப் லேபர், மத்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் ரூரல் டெவலப்மென்ட், மத்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்டு ப்ரோக்ராம் இம்ப்ளிமென்டேஷன், மத்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் அர்பன் டெவலப்மென்ட்,
மத்திய அரசு
* ப்ளானிங் கமிஷன், மத்திய அரசு
* இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசு
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், அகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ
* அரசு மற்றும் தனியார் வங்கிகள்
* மாநில, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள்
* இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனங்கள்

உலகில் ஒரு மனிதன்
பெறக்கூடிய மிக மிக
உயர்ந்த நிலைகளை,
பொருளியல்
துறையைப்
படிப்பதன் மூலம்
பெற முடியும்

(அடுத்த இதழில் நானோ
தொழில்நுட்பம் (Nano Technology)
தொகுப்பு: வெ.நீலகண்டன்