லவ்



‘‘என்னடா, தரணி! நீ லதாவை ஒன் சைடா லவ் பண்றதா சொன்னே... ஆனா, எப்பவும் ஸ்கூல், படிப்புன்னே சுத்திட்டு இருக்கே? அவ பின்னாடியே சுத்தினாதானே சரியான சமயத்துல ‘ஐ லவ் யூ’ சொல்ல முடியும்?’’ - என் அட்வைஸைக் கேட்டு தரணி ஒன்றுமே சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான்.

நாங்கள் +2 முடித்தபோது தரணி நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது லதா அவள் வகுப்புத் தோழன் ஒருவனைக் காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை தரணியிடம் சொன்னபோதும் சிரிப்புதான் பதில். கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான் தரணி. சில மாதங்களிலேயே கல்யாணப் பத்திரிகையோடு வந்தான். கூடவே லதாவும். அவள்தான் மணப்பெண்ணாம்.

‘‘எப்படிடா?’’ - ரகசியமாய்க் கேட்டேன். ‘‘மச்சி, நீ சொன்ன மாதிரி ஸ்கூல்லயே நான் லதா பின்னாடி அலைஞ்சிருந்தா நிச்சயமா படிப்புல கோட்டை விட்டிருப்பேன். பொண்ணுங்களுக்கு படிக்கவும் செய்யணும், தெருத்தெருவா அவங்க பின்னாடியும் வரணும். ப்ராக்டிகலா ரெண்டும் ஒண்ணா செய்யறது சாத்தியமில்லை. அவளை லவ் பண்ண பையன் வாழ்க்கையைக் கோட்டை விட்டுடுவான்னு எனக்குத் தெரியும். அதான் விட்டுப் பிடிச்சேன்!’’ என்றான் தரணி. இது அல்லவா தெளிவு! 


ஸ்ரீராம்