சென்னை எழும்பூரில் உள்ள ‘நம்மவீடு வசந்த பவன்’ ஓட்டலில் சர்வராக வேலை பார்த்தவர் காமெடி நடிகர் வையாபுரி. இப்போதும் அங்கு சென்று பழைய நட்புகளைப் பார்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்து, தனது ‘லொடுக்கு பாண்டி

மெஸ்’ஸின் இரண்டாவது கிளையை கரூரில் தொடங்கியிருக்கிறார் நடிகர் கருணாஸ். ஏழு வகை கிராமிய அசைவ உணவுகள் இங்கு கிடைக்குமாம்.
ஜெனிலியாவுக்கு அம்மா சமைத்த பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். கொஞ்சமாய் எண்ணெய் விட்டு மணக்க மணக்க செய்வாராம் அம்மா. ஸ்வீட் அழகிக்கு ஸ்வீட்ஸ் சுத்தமாக பிடிக்காது. எப்போதாவது குலாப் ஜாமூன் சாப்பிடுவார்.
விருதுநகர் பரோட்டாதான் இயக்குநர் வசந்தபாலனின் இஷ்ட உணவு. ஊருக்குச் செல்லும்போதெல்லாம் பரோட்டா சால்னாவை தவற விடுவதில்லை.
கரீனா கபூரின் ஜீரோ சைஸ் ரகசியம்... காபியோ, டீயோ குடிப்பதில்லை. பால் கலக்காத புதினா டீ மட்டும் குடிக்கிறார்.
நகைச்சுவை நடிகர் பாஸ்கி ஒரு ஓட்டல் தொடங்க முடிந்தால் ‘பொங்கல்’ என்றுதான் பெயர் வைப்பாராம். ‘தீபாவளி, கிறிஸ்துமஸ் என்றெல்லாம் பெயர் வைக்க முடியாதே. அதனால்தான்’ என்கிறார்!
அவித்த வேர்க்கடலையை உண்டு, உடற்பயிற்சியும் செய்வது மிஸ்கினின் அன்றாட வாடிக்கை.
இயக்குநர் ஜனநாதனுக்கு மிகவும் பிடித்தது வஞ்சிரம் மீன்
வறுவல். இன்னமும் பேச்சுலராக வாழும் ஜனநாதன் உதவியாளர்களோடு விடுமுறை நாட்களில் கூடிச் சமைக்கிறார்.
ஷில்பா ஷெட்டிக்கு தினமும் நான்வெஜ் இல்லையென்றால் இறங்காது. சிக்கன் ரொம்ப பிடிக்கும். நிறைய சுடுதண்ணீர் குடித்து கொழுப்பைக் கரைத்துவிடுவதாக சொல்கிறார்.
பாரதிராஜா தேனிக்குச் சென்றால் செனக் கெழுத்தி மீன் குழம்பு கேட்டு வாங்கி ருசித்து மகிழ்வார்.