

பரீட்சை நெருங்கற நேரத்துல ஆரம்பிச்சு, பசங்களைப் படிக்க விடாம படுத்தறாங்க ளேன்னு கடுப்புல இருக்கோம். நீர் என்னடான்னா, ‘சண்டைக் கோழிகள் சிலிர்க்க ஆடுகளம் தயார்’னு உம்ம பங்குக்கு உசுப்பேத்தி விடுறீர். இதெல்லாம் நல்லா இல்ல!
ஆர்.தனபால், சென்னை.

தலபுராணம் படிச்சா பக்தி மணம் கமழும்னு கேள்விப்பட்டிருக்கோம். பிரியாணி மணமில்ல வந்திச்சு ‘மங்காத்தா’ தல புராணம்... ஷூட்டிங் ஸ்டோரியைத்தான் சொல்றோம்.
எம்.சம்பத், கரூர்.

செல்வராகவன் நிச்சயதார்த்தத்தையே திருமண ரேஞ்சுக்கு ஆல்பமா காட்டி அசத்திட்டீங்க. சோனியா அகர்வால் வந்தாரான்னு சொல்லாம விட்டுட்டீங்களே...
எல்.எம்.அபிதாக்குட்டி, திருவண்ணாமலை.

‘காதல் வங்கி’ எல்லோரும் அக்கவுன்ட் ஆரம்பிக்க வேண்டிய கட்டாய வங்கி.
பி.முத்துகிருஷ்ணன், திருச்சி.

பிள்ளைகள் கையில் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்றாலும், தேவைக்குக் கட்டாயம் காசு இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோருக்கு உணர்த்தியது ‘பாக்கெட் மணிக்காகத் திருட்டு’ கட்டுரை.
அ.இராஜப்பன், கருத்தம்பட்டி.

ஆர்.செல்வராஜின் சினிமா பயணம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. வளரும் இளம் இயக்குனர்கள் இவர்போன்ற திறமைசாலிகளைப் பயன்படுத்தலாமே?
ம.கிரிஜா, புதுச்சத்திரம்.

கிரிக்கெட் ஜுரத்துல இருந்து தப்பிக்க, டிப்ஸ் தந்து மாணவர்களை ஊக்கப்படுத்தற உம்ம ஸ்டைல்கூட நல்லாத்தான் இருக்கு. +2 வேதியியல் குறிப்புகள் பயனளித்தன.
கே.ஜி.ஸ்ரீராம், பெங்களூரு.

சகுனம் சம்பந்தப்பட்ட மேலும் சில பழமொழிகளையும் ரசிக்கத்தக்க புதுக்கவிதைகளையும் தந்து சென்றது ‘எனப்படுவது’ பகுதி.
டி.கோவிந்தன், திருச்சி.

கௌதம் மேனன் ஹீரோக்களுக்காக கதை பண்ண வேண்டாம். ஆனால், அவர் சொல்ல நினைப்பதை நடித்துக் கொடுக்க ஒரு ஹீரோதானே தேவைப்படுகிறார்!
சந்தானகிருஷ்ணன், காரைக்கால்.

வெளிநாட்டு வங்கிகளின் மறைந்திருக்கும் நமது பணத்தை கவுண்ட் பண்றதுக்கே நாலு நாள் ஆகும் போல தெரியுதே... தலை சுத்துதுய்யா!
அ.குணசேகரன், புவனகிரி.

‘குங்குமம் ஜங்ஷன்’ பகுதி பலதரப்பட்ட சுவாரசிய சங்கதிகளை சுவையோட தருது நைனா.
ராமசாமி, வத்திராயிருப்பு.

இந்த வாரம் இடம்பெற்ற அத்தனை ஜோக்குகளும் கலக்கல்தான். நல்லாவே சிரிக்க வைக்கிறப்பு!
மோகன், தேனி.