லேடி சூப்பர் ஸ்டார்!



அழியாத கோலங்கள் தொடரில் சாருஹாசன் பகிர்ந்து கொண்ட உரத்த சிந்தனைகள், சுவையான செய்திகள் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தி விருந்து படைத்தது நிஜம்!
- மேட்டுப்பாளையம் மனோகர்,
சென்னை-18.

ரஜினி பற்றி அனுஷ்கா சொன்ன யோகா சீக்ரெட்ஸ் ஆஹா. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டதாகச் சொல்லும் அனுஷ்கா, விரைவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆவது உறுதி!
- மு.மதிவாணன், அரூர்.

கொழுப்பை சாப்பிட்டால் உடம்பு குறையும் எனப் படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. முழுவதும் படித்ததும்தான் விபரம் புரிந்தது. மிகவும் பயனுள்ள கட்டுரை!
- கோ.சு.சுரேஷ், கோவை.

இன்றைய கால பித்தலாட்டங்களை படம் பிடித்தும் சிலசமயம் தோலுரித்தும் காட்டுகிறது எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ‘கைம்மண் அளவு’ பகுதி.
- கோ.பகவான், பொம்மராஜுப்பேட்டை.

மனோபாலாவின் தொடரில் விறுவிறுப்பு எகிறுது! ஒல்லி மனிதரின் மனதுக்குள் இவ்வளவு சரக்கா! சும்மாவா? ‘பா’னா டைரக்டர்களுடன் பழகி அனுபவம் பெற்றவராச்சே!
- சிவமைந்தன், சென்னை-78.

நச்சுக் காற்று சூழ்ந்த உலகில் வாழ்கிறோம். உணவிலாவது ஆரோக்கியம் பேண வேண்டும் என சிந்திக்க வைத்தது எண்ணெய் கலப்படம் பற்றிய கட்டுரை!
- கே.எஸ்.குமார், விழுப்புரம்.

ஏ.எம் (காலை) வேளையில் பலரையும் கவர்ந்த ‘சூரிய நமஸ்காரம்’ பற்றி சிறந்ததொரு தொடர் தந்த ஏயெம்க்கு நன்றி!
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

திருப்பதி கோயிலில் சில கடைநிலை ஊழியர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரை பக்தர்களைத் துச்சமாக மதிக்கும் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும் ‘தெலங்கானாவில் ஒரு திருப்பதி’!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

ஒல்லி உடம்போடு பல படங்களில் ரசிக்க வைத்தவரின் பெயர் கோவை செந்திலா? இவர் ஊரும் பேரும் உங்கள் மூலமாகத்தான் தெரிந்தது. நன்றியும் பாராட்டுகளும்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

காவல்துறையில் மகளிர் படும் துயரங்களை வெளிச்சப்படுத்தியது உங்களின் அதிரடி கட்டுரை. காவல்துறை பெண்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி இதற்குத் தீர்வு காண வேண்டும்!
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்-2