ஜோக்ஸ்
‘‘பட்டிமன்ற தலைப்பைக் கேட்டு தலைவர் ஏன் டென்ஷன் ஆகிட்டார்..?’’ ‘‘2016ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் தலைவர் ‘புகழ் பெறுவாரா... புழல் பெறுவாரா’ன்னு பேசப் போறாங்களாம்!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘யாருக்கு ஆரத்தி எடுக்க இப்படி வாசல்ல காத்திருக்கீங்க..?’’ ‘‘இன்னிக்கு புதுசா வேலைக்கு சேர்ற நர்சுக்குத்தான் டாக்டர்..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘சுத்தியும் தண்ணி... நடுவுல நாமிருக்கோம்னு சொன்னா தலைவருக்குப் புரிய மாட்டேங்குது...’’ ‘‘என்ன சொல்றாரு..?’’ ‘‘சைடுடிஷ் ஒண்ணுமில்லையான்னு கேக்கறாரு!’’ - சி.சாமிநாதன், கோவை.
‘‘பட்டப்பகல்ல வீடு புகுந்து திருடியிருக்கே நீ...’’ ‘‘இப்போ வர்ற பேய்ப் படங்களையெல்லாம் பார்த்ததுல இருட்டினதும் பயம் வந்துடுது எசமான்... அதான்!’’ - சரவணன், கொளக்குடி.
‘‘நீங்க ஏன் உங்க பொண்டாட்டிக்கு எல்லா விஷயத்தையும் எஸ்.எம்.எஸ் அனுப்பறீங்க..?’’ ‘‘அவ என் பேச்சைக் கேட்க மாட்டா... அதான்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
ஸ்பீக்கரு...
‘‘எங்கள் தலைவர் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்தான்... அதற்காக அவரை ‘மிரட்சித் திலகம்’ என்று நையாண்டியாய் அழைக்கும் எதிர்க்கட்சியினரை வன்மையாகக் கண்டிக்கக் கடமைப்பட்டுள்ளேன்...’’ - கே.ஆனந்தன், தர்மபுரி.
‘‘பெரியோர்களே... தாய்மார்களே... மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் அவர்களே..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
|