ஜோக்ஸ்



தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் வான்கோழி யானாலும் அது முட்டை போடணும்னா பூமியில்தான் போட முடியும். வானத்தில்
எல்லாம் போட முடியாது!
- கணக்கு வாத்தியாரிடம் முட்டை வாங்கும் கூமுட்டைகள் சங்கம்
- என்.கஜேந்திரன், நிரவி.

‘‘அந்தக் கட்சி ஆபீஸ்ல ஏன் கவர்ச்சிப் படங்களா ஒட்டியிருக்கு..?’’
‘‘கவர்ச்சி அரசியல் பண்றது தலைவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்..!’’
- ம.நிவேதா, பொரவச்சேரி.

‘‘என்ன கபாலி... திடீர்னு அரசியல்ல இறங்கிட்டே?’’‘‘நானும் எத்தனை நாளைக்குத்தான் நடு ராத்திரியில போய் கடைகளைத் திறக்கிறது ஏட்டய்யா? ஒரு சேஞ்சுக்கு பகல்ல பொதுமக்கள் முன்னிலையில கடைகளைத் திறக்கணும்னு ஆசை. அதான்!’’
- சரவணன், கொளக்குடி.

‘‘தலைவரே... 2016ல் நாம கூட்டணி சேர முடியாது. தனிச்சுதான் நிக்கணும் போலிருக்கு!’’‘‘ஏன்யா?’’‘‘கட்சியில 234 கோஷ்டிகள் உருவாகிடுச்சி...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

‘‘நாளைக்கு அந்த பேஷன்ட்டுக்கு ஆபரேஷன் செய்யணுமே, ஏன் சிஸ்டர் வேண்டாம்ங்கறீங்க..?’’
‘‘அவர் ‘கருணை மனு’ கொடுத்துருக்கார் டாக்டர்!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘தலைவருக்குத் தனிமைன்னா ரொம்பப் பிடிக்கும்...’’‘‘அதுக்காக பொதுக்கூட்டம் போட்டுட்டு தனியா பேசறது நல்லாவா இருக்கு?’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

என்னதான் விஞ்ஞானி வீட்டுக் கிணறா இருந்தாலும் பக்கெட்டை உள்ளே விட்டுத்தான் தண்ணீர் எடுக்க முடியும்; ராக்கெட்டை விட்டுத்
தண்ணீர் எடுக்க முடியாது!
- வறட்சிக் காலத்திலும் பக்கெட் பக்கெட்டாக தத்துவத் தண்ணீர் வழங்குவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.