‘‘தலைவர் ஏன் தனக்கு வந்த பாராட்டுக் கடிதத்தை பார்த்துட்டு
கோபமாகிட்டார்?”
‘‘யாரோ ஒரு தொண்டர் ‘உத்தம வில்லன்’னு அவரைப் புகழ்ந்திருக்காராம்..!’’
- சி.கார்த்திகேயன்,
சாத்தூர்.
‘‘2016ல ஆட்சியைப் பிடிப்போம்...’’
‘‘அதுவரைக்கும் நாம பிடிபடாம இருப்போமா தலைவரே..?’’
- கே.ஆனந்தன்,
தர்மபுரி.
‘‘அடுத்த வாரமும் ஆஸ்பத்திரியில் தங்கிட்டுப் போங்கன்னு சொல்றீங்களே... மருந்தை சேஞ்ச் பண்ணப் போறீங்களா டாக்டர்?’’
‘‘ம்ஹும்... நர்ஸை சேஞ்ச் பண்ணப் போறோம்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.
எல்லாக் கோயில் அர்ச்சகரும் எல்லா நட்சத்திரத்துக்கும் அர்ச்சனை பண்ண முடியும். ஆனால் எரிநட்சத்திரம், வால் நட்சத்திரத்துக்கெல்லாம் அர்ச்சனை
பண்ண முடியாது!
- ஸ்டார் தத்துவம் சொல்லி சூப்பர் ஸ்டாராவோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தன்,
ஒளவையார்
பாளையம்.
என்னதான் ஒரு மீன் வியாபாரி மீனோட சேர்ந்து ‘செல்ஃபி’ எடுத்தாலும் அவரை ‘ஃபிஷர்மேன்’னுதான் சொல்வாங்களே தவிர, யாரும் ‘செல்ஃபிஷ்மேன்’னு சொல்ல மாட்டாங்க!
- ஜாமீன் வாங்க ஜாம்பஜார் மார்க்கெட்டில் அலைவோர் சங்கம்
- பாலா சரவணன்,
சென்னை.
தத்துவம் மச்சி தத்துவம்
‘‘கைரேகையைப் பதிவு பண்ணணும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘பக்கத்துல இருந்தவர்
கன்னத்துல பதிச்சுக் காட்டிட்டாரே!’’
- சீர்காழி ஆர்.சீதாராமன்
‘‘சம்மருக்கு குடும்பத்தோட ஊருக்கு எங்கேயும் போறீங்களா?’’
‘‘ஏன் கேட்கறீங்க?’’
‘‘உங்க வீட்டுக்குத் திருட வரணும்... அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.