ஜோக்ஸ்



‘‘மாப்பிள்ளை முடி
அநியாயத்துக்கு
வெளுத்திருக்கே..?’’
‘‘நீங்கதானே அஜித் மாதிரி மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்க..!’’
- சிக்ஸ் முகம்,
கள்ளியம்புதூர்.

‘‘தலைவர் காலத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாத்திப்பாரு...’’‘‘எப்படி?’’
‘‘செம்மரம் நடும் விழா நடத்தப் போறாராம்..!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘இந்த ஜோசியர் காலத்திற்கு ஏற்ற ஹைடெக் பரிகாரம் சொல்றாரா..?’’
‘‘ஆமாம்... என்னை எல்லோரும் வெறுக்கிறாங்கன்னு சொன்னவுடன், ‘ஃபேஸ்புக்கில் 1008 லைக் போடுங்க... சரியாயிடும்’னு சொல்றாரே!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘ஸ்டோரி டிஸ்கஷன்ல ஏன்
எல்லோரும் நடுங்கறாங்க..?’’
‘‘பேய்ப்படத்துக்கு கதை டிஸ்கஸ் பண்ணும்போது, ஒரு நிஜமான பேயும் டிஸ்கஷனுக்கு வந்துருக்கு!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘நம்ம கட்சியில தொண்டர்கள் ரொம்பக் குறைவு...’’
‘‘அதுக்காக தலைவர் பிறந்தநாள் போஸ்டர்ல ‘வாழ்த்த ஆள்
இல்லை’ன்னா போடுவீங்க?’’
- கே.ஆனந்தன், பே.தாதம்பட்டி.

என்னதான் வெயில் மண்டையைப் பொளந்தாலும், அதுக்காக சூரியன் மேல கேஸ் எல்லாம் போட முடியாது!
- சூரியனுக்கே டார்ச்
அடித்து டார்ச்சர்
செய்வோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

என்னதான் பொது அறிவுல ஒருத்தர் புலியா இருந்தாலும், வியர்க்
‘குரு’வோட சிஷ்யன் யார்னு அவரால பதில் சொல்ல முடியுமா?
- விடை சொல்ல முடியாத கேள்வி
களாய் கேட்போர்
சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.