தளபதி மந்திரி!



பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டில் ‘உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்’ என்ற பட்டத்தை பெற்று, உலகக் கோப்பையையும் தட்டி வந்திருக்கும் ரமேஷ், கொண்டாடப்பட வேண்டியவரே!
- என்.சண்முகம், திருவண்ணாமலை.

‘இது நம்ம ஆளு’ படம், முன்பு சிம்புவிற்காகக் காத்திருந்தது... இப்போ தம்பி குறளரசனின் பாடல்களுக்காக காத்திருக்கிறதா? தாமதப்படுத்து வதில் இவர்கள் அபூர்வ சகோதரர்கள்தானய்யா!
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.

அட, உடலில் RS3334 என்ற மரபணு இருப்பதால்தான் ஆண்கள் ‘சின்ன வீடு’ வைத்துக்கொள்கிறார்களா? ‘அப்பாவி’ ஆண்கள் எல்லோரும் வீட்டில் ஃப்ரேம் போட்டு மாட்ட வேண்டிய மேட்டர் பாஸ் இது!
- கன்யாரி, நாகர்கோவில்.

மின்சாரக் கட்டணம் உயர்ந்து ‘ஷாக்’ தந்திருக்கும் வேளையில், வீடுகளில் மின்சாரம் எப்படியெல்லாம் விரயமாகிறது எனக் குறிப்பிட்டு, அதை மிச்சப்படுத்தும் வழிகளை விளக்கியிருந்த விதம் அருமை!
- எஸ்.ஹமீது பாட்சா, ஆனைக்குளம்.

‘சீஸன் சாரலில்’ நனைந்தோம். சுதா ரகுநாதன், ஓ.எஸ்.அருண், சிக்கில் குருசரண், அனன்யா அசோக் எனப் பல சபாக்களில் பாடியவர்களை எங்கள் வீட்டுக்குள்ளேயே அழைத்து வந்துவிட்டீர்கள்... பலே!
- மயிலை.கோபி, சென்னை-83.

ரசிகர்களுக்காக மூன்று மணி நேரம் முகம் சுளிக்காமல் போட்டோ எடுத்துக்கொண்ட விஜய்யின் பொறுமை வியக்க வைத்தது. தளபதி கொஞ்சம் மந்திரியாகவும் மாறுகிறார் போல!
- திவ்யா, அம்பாசமுத்திரம்

‘ஆர்யாவோட எனக்கு ரொமான்ஸ்!’ என ஆரம்பித்தாலும் படத்தில் வாள் சண்டை போடுகிற விஷயத்தைச் சொல்லி மிரட்டிட்டாங்க தமன்னா. பூவின் கையில் வாளா த‘மன்னா?’?
- ஜெ.வில்லியம், நாகை.

மனமொத்த தம்பதிகள் விஜயன்-மோகனாவின் டூர் ஆர்வம் சிலிர்க்க வைத்தது. கடுமையாக உழைத்த பணத்தில் ‘உலகம் சுற்றும்’ இவர்களை நாமும் சுற்றி வணங்குவோம்!
- வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி.

ஒவ்வொரு வாரமும் அறிவுமதியின் ‘மழைத்தும்பிகள்’ ரசிக்கவைக்கின்றன.
இத்தனை மறைவாகவும் ரசனையாகவும் அகவாழ்வை அழகுபடச் சொல்லும் அறிவுமதிக்கு பாராட்டுகள்!
- எஸ்.வசந்தா குமார், புதுச்சேரி.

‘சகுனியின் தாயம்’ தொடர், ரொம்பவே ஹை ஸ்பீடு கேம். ஐம்பது வாரம் என்றாலும் முற்றுப்பெற்றவுடன் அவ்வளவுதானா என்றிருந்தது!
- பி.கே.குணசேகரன், சேலம்.