facebook வலைப்பேச்சு



@mekala pugazh
வருடக் கணக்கைச் சரி பார்த்து, பெரும் சாதனையாளர்களைத் தன்னோடு அழைத்துக்கொள்ளும் போல இந்த இயற்கை...

@kattathora 
 ஒரு நாளின் முதல் சிக்கல், ஹெட் ஃபோன் சிக்கெடுப்பதிலிருந்து துவங்குகின்றது...

@Baashhu 
தேடி ஃபிகர் நிதம் பார்த்து, பல சின்னஞ் சிறு கடலை வறுத்து, பல வேடிக்கை மனிதர் போல் நானும் உன்னிடம் வழிவேனென்று நினைத்தாயோ!

@naiyandi
காதலிக்க ஆரம்பித்து விட்டால் முயலுக்கு மட்டுமல்ல, காதலிக்கும் மூன்று கால்தான்... வலது கால், இடது கால், மிஸ்டு கால்!

@Koothaadi 
எழுதிவிட்டு பேப்பரில் வைக்கப்பட்ட பென்சில் ஏதோ உருண்டு பேசிக்கொண்டிருக்கிறது பேப்பரிடம். ஒரே வன மரங்களாய் இருக்கலாம்!

@senthilcp
இன்று அகில உலக இசை தினம். எனவே வீட்டில் உன் சம்சாரத்துக்கும், ஆபீசில் உன் உயர் அதிகாரிக்கும் ‘ஜிங் ஜக்’ அடி. வாழ்வில் முன்னேறுவாய்!

@gurussiva   
‘‘கடவுளே! நாட்டு மக்களை நீதான் காப்பாத்தணும்’’னு வேண்டிக்கிட்டு வெளிய வந்தா, செருப்ப காணோம். என் செருப்ப போட்டுக்கிட்டு காப்பாத்த கிளம்பிட்டாரு போல!

@thoatta
பெண்களைப் பொறுத்தவரை சிறந்த புடவை என்பது அடுத்தவங்க கட்டியிருக்கிறதுதான்.

@udanpirappe
மீனுக்கு செல்லப் பேர் வைக்கல்லாம்னு யோசிக்கக் கிளம்பிட்டாய்ங்க... நாம ‘மீன்’னு பேர் வச்சதே அதுக்குத் தெரியாதுடா, இதுல இன்னொரு பேரா?

@kumarfaculty
பெண்களின் கண்கள் எப்போதும் நகைக்கடை, துணிக்கடைகள் மேலேயே பதிந்து இருப்பதால்தான் அவர்களின் பார்வை ‘கடைக்கண் பார்வை’!

@nithu_ji   
சர்வீசுக்கு போயிட்டு வந்த 'தீவீளீமீ'கும், அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த 'ஷ்வீயீமீ'ம் 4 நாளைக்கு நம்ம கண்ட்ரோல்லயே இருக்காது.

@writercsk 
‘முடியாது’ என்பதைக் கூட இழுத்தடிக்காமல் உடனடியாகச் சொல்லி விடுபவனைப் பிடித்துப் போகிறது!

@indirajithguru 
அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடிப்பதுதான், குழந்தைகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

@urs_priya 
நம் உதவி தேவைப்படுபவர்களிடம் ஒரு உதவி கேட்பது கொஞ்சம் எளிதாக இருக்கிறது.

@Vinuthaas   
படம் எப்போ ரிலீஸாகும்’னு ரசிகர்கள் வெய்ட் பண்ணா நம்ம சூப்பர் ஸ்டார். ‘படம் எப்போ ரிலீஸாகும்’னு அவரே வெய்ட் பண்ணா லிட்டில் சூப்பர் ஸ்டார்.

@bri2o
வாழ்க்கை ஒண்ணும் அனுஷ்கா அல்ல... எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகாகத் தெரிய!

twitter


நாட்களை இனிமையாக துவக்க வானம் திறப்பதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. இனிய புன்னகைகள் போதும்!

சென்ற ஆண்டு என்னிடமிருந்தநான் வேறு!
இதோ இப்போது என்னிடமிருக்கும்நான் வேறு!
அந்த நான் இளமையோடும்விசுவாசத்தோடுமிருந்தது
இன்றைய இந்த நானைப் போலவே!
நாளைய நான் எப்படியிருக்குமோ?
 அந்தியூரன் பழமைபேசி

‘‘ஹலோ... வண்டியில போயிட்டு இருக்கேன். அப்புறமா பேசுறேன்...’’
‘‘முக்கியமான விஷயம்...
வண்டிய ஓரம் கட்டுங்க தம்பி!’’
# இப்படி ஆட்கள வச்சிட்டு நான் எப்படி சமாளிக்கறது? கவருமெண்டு பஸ்ச நான் எப்படிப்பா ஓரம் கட்ட முடியும்?
- கார்ட்டூனிஸ்ட் முருகு

மனுஷனுக்கு பன்றிக் காய்ச்சல் வந்த அப்புறம் பன்றிக்கு என்ன காய்ச்சல் வரும்?
- பாசமலர் சாவித்திரி

சுத்தம் செய்வதென்று முடிவெடுத்தால், மனதிலிருந்துதான் தொடங்கவேண்டும். பேசாமல், அடுத்த வீட்டுக் குப்பையைக் கவனிப்போம்.
- விக்னேஸ்வரி சுரேஷ்

கவலையற்று இருப்பதற்கான ஒரு எளிய வழி, கவலைப்படுவதற்கு அவகாசம் தராமல் ‘பிஸி’யாக இருப்பது.
- ஈரோடு கதிர்

இணையத்துல என்னென்ன வசதிகள் இருக்கோ, எல்லாத்தையும் பயன்படுத்தி தமிழன் செய்ற முதல் காரியம்... சினிமா விமர்சனம் எழுதறது!
- அதிஷா அதிஷா

அவள் வந்து சென்றதென்னவோ மின்னற் சிறு பொழுதுதான்.
நான்தான் கடந்து செல்ல சிரமப்படுகிறேன் மின்னலின் முழு நீளத்தை..
- கடங்கநேரி யான்

தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை வந்தா ‘‘நீ என்ன இன்னும் சின்னப்புள்ளயா’’ன்னு எனக்குத்தான் திட்டு விழுது...
- தோழி ஹாஜிரா

உலகின் அத்தனை துக்கத்தையும் அது நடந்து முடிந்த நொடி முடிவதற்குள் அறிந்து வைத்திருக்கும் இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை வெறுக்கிறேன்.
- தமிழ்ப்பெண் விலாசினி

“இன்று தேர்தல் நடந்தாலும் ஜெயலலிதா வெல்வார்”
- வைகோ இன்னும் எவ்வளவு தூரம் நடந்தாலும் நீங்க மட்டும் வெல்லவே முடியாது...
- சித்தன் கோவை

பிளட் பிரஷர் அதிகரிக்கும்போது ஒரு ரூமில் பூட்டிக்கொண்டு சாவியை ஜன்னல் வழியே எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பலரையும் காயப்படுத்தி, நம்மையும் காயப்படுத்திக்கொள்ள நேரிடுகிறது.
 மனுஷ்ய புத்திரன்