மழைத்தும்பிகள்




*அசைந்து கொடுக்கும்
அலைகளில்
பதுங்குகிறது
கட்டுமரம்

*தேநீர் குவளையை வைக்கும்
சப்தத்தின்
அதிர்வில்
மதிப்பெண்
போட்டுவிடுகிறாள்

*பக்கத்தில் படுப்பதுஎளிது

*பாறையைக் கடந்தது
மழைக்காற்று
கையளவு நீரில்
சிறகடித்துக்
குளிக்கிறது
குருவி

*போன பிறகும்
இரு
போகாமல்

*கை நீட்டி மழை வாங்கல்
இல்லை
விரல் நீட்டி
மழை வாங்கல்

*மூழ்கிய மீன்களுக்கே
வாய்க்கிறது
வானத்தின்
பெருமூச்சு

*அது
இருவருமாக எரிந்து
சாம்பல் கண்ட
பொழுது

அறிவுமதி