ஜோக்ஸ்



உங்களுக்குக் கொடுத்திருந்த குற்றப் பத்திரிகையை படிச்சீங்களா?’’
‘‘எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது யுவர் ஆனர்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘உங்க பொண்ணு என்ன பண்ணிட்டு இருக்கா..?’’
‘‘பக்கத்து வீட்டுப் பையனை காதலிச்சுக்கிட்டு இருக்கா!’’
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

பேஷன்ட் அபாயக் கட்டத்தை தாண்டிட்டார்னு எப்படிச் சொல்றீங்க?’’
‘‘அவர்தான் டாக்டருக்குத் தேவையான முழுப் பணத்தையும் கட்டிட்டாரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘என்னய்யா! என்னோட செக்யூரிட்டி ஆளுங்களுக்
கெல்லாம் தினமும் பிரியாணி வாங்கித் தர்றீங்க?’’
‘‘நீங்கதானே உங்க பாதுகாப்பை பலப்படுத்தச் சொன்னீங்க...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

என்னதான் பண்டிகைக்கு முறுக்கைச் சுடலாம்னாலும், அதை என்கவுன்ட்டர்ல எல்லாம் சுட முடியாது!
- சுடச்சுட செய்திகள் தருவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

தத்துவம் மச்சி தத்துவம்

நூற்றுக்கு நூறு மார்க் எடுத்தா எந்த ஆபீஸ்லயும் வேலை கிடைக்கும். சைபர் மார்க் எடுத்தா சைபர் கிரைம்ல ஆபீஸர் வேலை கிடைக்குமா?
- கனவுல ஆபீஸராகவும் நிஜத்துல அரியர்ஸோடும் வாழ்வோர் சங்கம்
- டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

உங்களை டிஸ்சார்ஜ் பண்ணப்போறேன்...’’
‘‘ஏன் டாக்டர்..?’’
‘‘எந்த நர்சுக்குமே உங்களைப் பிடிக்கலையாம்... அதான்!’’
- வைகை. ஆறுமுகம், திருப்பூர்.