IFSC ... ஆன்லைன் மூலம் யாருக்காவது நீங்கள் பணம் போடும்போதோ அல்லது யாராவது உங்களுக்கு பணம் அனுப்பும்போதோ இந்த சொல்லை உச்சரித்திருப்பீர்கள். ‘பேங்க் பேரும் அக்கவுன்ட் நம்பரும் இருந்தா போதுமா?
எந்த பிராஞ்ச்? ஐ.எஃப்.எஸ்.சி கோட் என்ன?’ எனப் புதியவர்களை சிலர் மிரட்டுவதும் உண்டு. ‘அதான் பிராஞ்ச் அட்ரஸையே சொல்றோம்... அப்புறம் எதுக்கு இந்த கோட் கீடெல்லாம்?’ - ஊர்ப் பக்கம் ஒலிக்கும் இந்தக் கேள்வியை, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான ரகுநாதன் முன் அப்படியே வைத்தோம். ‘Indian Financial System Code’ என்பதன் சுருக்கமான மிதிஷிசி பற்றி விரிவாகப் பேசினார் அவர்.
ஒவ்வொரு வங்கிக் கிளையின் தனிப்பட்ட அடையாளத்தை ஒரு குறியீட்டின் மூலம் ஒருங்கிணைத்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. இதைத்தான் மிதிஷிசி கோட் என்கிறோம். இந்தியாவில் இயங்கும் சுமார் 63 ஆயிரம் வங்கிக் கிளை ஒவ்வொன்றுக்கும் ஒரு மிதிஷிசி கோட் இருக்கிறது. இது 11 எழுத்துகள் கொண்ட ஒரு குறியீடு. முதல் நான்கு ஆங்கில எழுத்துகளும் வங்கியின் பெயரைக் குறிக்கும். அடுத்ததாக வரும் பூஜ்ஜியம் எண், ரிசர்வ் வங்கியின் வருங்காலப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கடைசி 6 எண்கள் அந்த வங்கிக் கிளையின் குறியீட்டு எண் ஆகும்! எதற்காக இந்தக் குறியீடு?
முன்பெல்லாம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு ‘செக்’ டிரான்ஸ்ஃபர்தான் செய்ய முடியும். அதற்கு, முதலில் உங்கள் செக்கை வங்கியில் போட வேண்டும். பிறகு, அந்த ‘செக்’ ரிசர்வ் வங்கியின் ‘கிளியரிங் ஹவுஸு’க்குப் போய்விட்டு உங்களுக்கு கிரெடிட் ஆகும். இதில் காலதாமதம் ஆனது. மேலும் பணத்தை அனுப்ப வங்கிக்குச் சென்று செக்கை சமர்ப்பித்தாக வேண்டிய கட்டாயமும் இருந்தது.
இன்டர்நெட்டின் பயன்பாடு பரவலான பிறகு இந்தத் தாமதத்தை தவிர்க்கவே NEFT, RTGS என இரண்டு முறைகளைக் கொண்டு வந்தனர். அதன் வழியே பணத்தை பாதுகாப்பாக அனுப்ப ஒரு குறியீட்டை உருவாக்கினர்.
ஐ.எப்.எஸ்.சி எனப்படும் இந்தக் குறியீடு மூலம், யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் பணம் போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பக்கூடிய நபரின் பெயரையோ, அக்கவுன்ட் எண்ணையோ தவறாகப் பதிவு செய்துவிட்டாலும் கூட, வேறு நபர் யாருக்கும் அந்தப் பணம் போய்ச் சேராது. உங்கள் அக்கவுன்ட்டுக்கே திரும்ப வந்துவிடும்.
NEFT*National Electronic Funds Transfer எனப்படும் இது, பணத்தை இன்டர்நெட் வழியே அனுப்பும் முறை. இதன் மூலம், இந்தியாவில் ரிசர்வ் வங்கி அங்கீகரித்து, ழிணிதிஜி வசதி உள்ள எந்த வங்கியிலிருந்தும் எந்த ஒரு வங்கிக்கும் பணத்தை உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து பரிமாற்றம் செய்ய முடியும்.
நீங்கள் பணத்தை நெட் பேங்கிங் வசதி வழியே அனுப்பியதும், அது மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கியின் தேசிய கிளியரிங் சென்டருக்குச் செல்லும். பிறகு அங்கிருந்து யாருக்கு பணம் அனுப்பினீர்களோ அவர்களின் வங்கிக் கணக்கிற்கு சென்றுவிடும். இதனால், வங்கிக்கு செல்ல வேண்டிய அலைச்சல் மிச்சம். பணம் போய்ச் சேர்ந்ததும், இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் வழியே தகவலும் வந்துவிடும்.
* ஒருவருக்கு நெட் வசதியில்லை; அவர் பணம் அனுப்ப வேண்டிய வங்கியின் கிளையும் அந்த ஊரில் இல்லை. என்ன செய்வது? அந்த ஊரில் செயல்படும் எந்தவொரு வங்கிக்கும் சென்று ழிணிதிஜி செலான் நிரப்பி பணத்தை அனுப்ப முடியும்.
* இதில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஒரு பரிமாற்றத்தின் வழியே மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம். இதற்காக சிறிய கட்டணம் சர்வீஸ் சார்ஜ் என்கிற வகையில் பிடிப்பார்கள். சுமார் ஐந்து ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பிடிக்கப்படுகிறது.
* இந்த முறை மூலம் நேபாளம் தவிர மற்ற வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப முடியாது. இந்திய-நேபாளம் பணம் அனுப்பும் திட்டம் இருப்பதால் நேபாளம் சாத்தியமாகியிருக்கிறது.
* வேலை நாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 7 மணி வரையும், சனிக்கிழமையில் காலை 8 மணியிலிருந்து ஒரு மணி வரையும் இந்த டிரான்ஸாக்ஷன் நடக்கும். ஒரு நாளைக்கு 12 பேட்ச்களாக பணத்தை அனுப்புகிறார்கள். நீங்கள் இரவில் பணம் அனுப்பி னால், மறுநாள் காலை முதல் பேட்ச் பரிமாற்றம் வழியே அந்தப் பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்.
RTGSReal Time Gross Settlement எனப்படும் இந்த ஆப்ஷன் வழியே 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை டிரான்ஸ்பர் செய்யலாம். ரியல் டைம் செட்டில்மென்ட் என்பதன் அர்த்தமே, பெரிய தொகை தாமதங்கள் தவிர்க்கப்பட்டு உடனே அனுப்பப்படுகிறது என்பதுதான்! NEFT அளவுக்குக் கூட இதில் கால தாமதம் ஆகாது. ஆக, பெரிய நிறுவனங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி பணத்தை உடனடியாக டிரான்ஸ்பர் செய்கின்றன. இதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் உண்டு.
- பேராச்சி கண்ணன்