‘‘தலைவர் எதையுமே திருந்தச் செய்வார்..!’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘ரயில் மறியல் முடிஞ்சு, ரயிலுக்கு பச்சைக் கொடியும் காட்டுறாரே!’’
- அ.ரியாஸ், சேலம்.
‘‘நம்ம தலைவர் ஓவரா குடிச்சிருக்காருன்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘பின்னே... குற்றப் பத்திரிகையோட ஆசிரியர் யாருன்னு கேட்கிறாரே!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.
‘‘தூக்கத்திலே கனவு தொடர்ச்சியா வராம, அங்கங்க பிரேக் ஆகி வருது டாக்டர்...’’
‘‘சென்சார் போர்டுல கட் பண்ணியிருப்பாங்க. அங்கே போய்க் கேளுங்க!’’
- எல்.மூர்த்தி,
பி.மணியட்டி.
‘‘எனக்கு பொய் பேசினால் பிடிக்காது...’’
‘‘அப்புறம் எப்படி மன்னா நாங்களெல்லாம்
தங்களை வாழ்த்திக் கவிதை பாடுவது..?’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.
‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தீங்களா..?’’
‘‘இதையே கேளுங்க... சேர்த்ததை விட நாலு மடங்கு அதிகமா கேஸ் நடத்த செலவு செஞ்சிருக்கோம். அதைக் கண்டுக்காதீங்க!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.
தத்துவம் மச்சி தத்துவம்
செம காதல் ஃபீலிங்!
‘‘மோகனா, நான் உன்னைக் காதலிக்
கிறேன்...’’
‘‘நான் மறுத்தா என்ன பண்ணுவே?’’
‘‘இப்படியே பஸ் பிடிச்சு தியேட்டருக்குப் போய் ஒரு தமிழ்ப்படம் பார்ப்பேன்!’’
‘‘எப்போ நீ எனக்காக உயிரையே விட துணிஞ்சியோ, அப்பவே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். ஐ லவ் யூ!’’
- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
எலெக்ட்ரிக் ஹோல்டர்ல பல்பு மாட்டி எரிய வைக்க முடியும்; டிகிரி ஹோல்டருக்கு பல்பு மாட்டி எரிய வைக்க முடியுமா?
- காலேஜில் வாங்கிய டிகிரியில் பட்டம் விடுவோர் சங்கம்
- வைகை. ஆறுமுகம், வழுதூர்.