தல வாழை விருந்து!



நரம்பியல் நோய்க்காக ஐஸ் பக்கெட் குளியல் நடத்தி நிதி திரட்டுவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அதைவிட, நம்மூர் மஞ்சுலதா கலா
நிதியின் ‘ரைஸ் பக்கெட்’ அரிசி தானம்தான், நைஸ்!
 மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை18.

நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் தேசத்தி
லிருந்தே வந்து, இந்தியாவின் தேசப் பிதாவை சினிமா மூலம் உலகறியச் செய்த மாமனிதர் அட்டன்பரோவுக்கு உங்களின் சிறப்புக் கட்டுரையே சிறந்த அஞ்சலி!
 கவியகம் காஜூஸ், கோவை.

‘பெரிய ஹீரோவா இருந்தாலும் நோ கிளாமர்’ என ஸ்ரீதிவ்யா இப்போ சொல்வது நியாயம்தான். ‘கதைக்குத் தேவைப்பட்டா கிளாமரா நடிப்பதில் தப்பில்லை’ன்னு சொல்ல இன்னும் காலம் இருக்கு... அப்படித்தானே திவ்யா!?
 ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

இணையத்தை சரிவர முறைப்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கவே யாரும் இன்னும் முயலவில்லை. அதற்குள் இணையக் குற்றங்களுக்கு குண்டர் சட்டம் பாயும் என்பது கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியே!
 தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

சத்திராஜு சங்கரநாராயணாவின் பென்சிலால் வரைந்த ஓவியங்கள், வண்ணம் தீட்டும் ஓவியர்களின் தூரிகைகளை முறியடித்து விட்டன என்பது பேருண்மை!
 ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

தினமும் நூருக்கு முத்தம் கொடுத்து விட்டுதான் சமந்தா ஷூட்டிங் கிளம்புவதாக செய்தி போட்டுவிட்டு, நூர் என்பது அவர் வளர்க்கும் நாய் என போட்டு எங்களுக்கு பல்பு கொடுத்துட்டீங்களே பாஸ்!
 இரா.கணேசன், கோவை.

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் படத்தின் புத்தம்
புதிய ‘ஸ்டில்’களைப் பிரசுரித்தது, சும்மா ‘தல’வாழை இலை போட்டு விருந்து கொடுத்தது போலிருந்தது.
 ஆசை.மணிமாறன்,
திருவண்ணாமலை1.

பெப்பர் சால்ட் முடியுடன் ரசித்த அஜித்தை இவ்வளவு ட்ரிம்மாக அட்டையில் போட்டு அசத்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
 ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்

ஆர்யாவின் தம்பி நடித்திருக்கும் ‘அமரகாவிய’த்தை ஜீவா, விஷால், நயன் உள்ளிட்ட நண்பர்கள் குழு பார்த்தது, உலக மகா செய்தி! படம் முடிந்த பிறகு, எல்லோரும் ஆர்யா வீட்டில் பிரியாணி சாப்பிட்டார்கள் என்பது அதில் ஹைலைட்! உமது குசும்புத்தனத்திற்கு அளவே இல்லையா?
 ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

போட்டோவில் தமன்னாவின் ஸ்டைலிஷ் நடையைப் பார்த்து அசந்துட்டோம். அப்படியே கோலிவுட்டுக்கு வந்திடுங்க தமன்னா. பாலிவுட்டை நம்பாதீங்க, சொல்லிப்புட்டோம்!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.