facebook வலைப்பேச்சு




தொடு வானில்
கண் முட்டும் இடத்தில்
துவங்குகிறது
தண்டவாளமும் வானவில்லும்
ரயிலுக்குக் காத்திருக்கும்
குழந்தையொன்று சொல்கிறது
அப்பா, ரயில் வானவில்லில்
ஏறிப் போய் விட்டால்
என்ன செய்யறது
கலாப்ரியா

திரும்பி வரும்
வசந்தகாலப் பறவைகள்
அப்படியே மரம்.
 கி.சார்லஸ்

அப்பா தூக்கிப்
போட்டுப் பிடித்து விளையாடும் குழந்தைக்கு வானம் தலையில் இடிக்கும் தூரம்தான்...
 சுந்தரி விஸ்வநாதன்

என் துயரக் காலங்கள் முழுக்க அவள் என்னோடு இருந்தாள்; நீங்கள் என்னில் வியக்கும் கம்பீரமெல்லாம் அவளாலானது!
 இயக்குநர் தாமிரா

திருமணச் சடங்கில் பட்டப்பகலில் அம்மி மிதித்த பிறகு ‘அதோ அருந்ததி தெரிகிறதா’ என்று கேட்டு ‘தெரிகிறது’ என்று ஒரு பொய்யைச் சொல்ல வைக்கிறாங்க பாருங்கள்... அங்கேயே புரோகிதத்தின் பொய்யும் புரட்டும் துவங்கி விடுகிறது.
 யுவான் சுவாங்

‘‘நீ இல்லன்னா செத்துருவேன்’’னு சொன்னவங்கல்லாம் செத்திருந்தா கூட இந்நேரத்துக்கு மக்கள்தொகை கொஞ்சமாச்சும் குறைஞ்சிருக்கும்...
 அம்புஜா சிமி

எல்லாராலும்
எல்லாருக்கும்
நல்லவராக
இருக்க முடியாது.
எல்லாராலும்
எல்லாருக்கும்
கெட்டவராக
இருக்க
முடியாது.
க்ருஷ்ண லக்ஷ்மி

ஒரு கபேயின் நோட்டீஸ் போர்டில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது... ‘எங்களிடம் கீமிதிமி கிடையாது. உங்களுடன் வந்திருக்கும் உங்கள் அன்புத்
துணையுடன் உரையாடுங்கள்!’
# எவ்வளவு உண்மையான வார்த்தைகள்
 வசந்த் குமார்

எவ்வளவுதான் ஓட வேண்டியிருக்கு... மரணம் எனும் வெற்றிக்கோப்பையைப் பெறுவதற்கு!
 அம்புஜா சிமி

வேர்வை சிந்தாத வாழ்க்கையில் கடைசியில் கண்ணீர்தான் சிந்த வேண்டும்...
 சங்கர் கிருஷ்ணமூர்த்தி

கடல் அலைகள் போல நண்பர்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கின்றனர்.
 மு.கௌதம்ராஜ்

twitter வலைப்பேச்சு

@udanpirappe
அம்மா அறிவித்த திட்டங்களிலே கடைக்கோடி சாமானியனுக்கும் சென்று சேர்ந்த திட்டம் ஒன்றுதான்...
# அம்மா பவர்கட் திட்டம்!

@VignaSuresh   
பேச்சு, மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதை விட, மனதில் இருப்பதை மறைப்பதற்கு பேருதவியாக இருக்கிறது!

@ priya1subramani   
மனதில் அமைதியின்றி
வாய் மட்டும் மூடியிருப்பது
மௌனமென்றாகிவிடாது!!

@karuthujay
பெரும்பான்மையான சோகங்கள் பாட்டிலும், பாட்டிலிலும் சிறிது நேரம் காணாமல் போகின்றது!

@BharathiBigB   
நேரத்த காட்டுறதுக்கு 300 ரூபாய் வாட்ச்சே போதுமானது; ஆனா நம்ம கௌரவத்த காட்டத்தான் 3000 ரூபா வாட்ச் தேவைப்படுது!

@DisIsVki
பேச்சுலர் ரூம்ல முடியப் போற டூத் பேஸ்ட்டை யுனெஸ்கோவின் அழிந்து வரும் பாரம்பரியச் சின்னமா அறிவிக்கலாம்...

@thannivandi
இருக்கும் சக்தியைத் திரட்டி, பெருஞ்சத்தமிட்டுக் கதறும்போது... ‘‘எவனோ விசில் அடிக்கிறான்’’ என்றவாறு கடந்து விடுகிறார் கடவுள்!

@Priyaa_S
குறை சொல்லி, குத்திப் பேசு, தப்பேயில்லை. நீ குண்டூசியால் குத்தும்போது, எதிரில் இருப்பவன் கூர் வாளால் குத்தக் கூடும்.

@writernaayon 
முழங்கால் வலியோடு காலம் தள்ளும் முதியவர்களைக் கேளுங்கள், ‘நடக்காமலிருப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பார்கள்.

@writernaayon 
முழங்கால் வலியோடு காலம் தள்ளும் முதியவர்களைக் கேளுங்கள், ‘நடக்காமலிருப்பதெல்லாம் நன்மைக்கே’ என்பார்கள்.

@manipmp
காணிக்கை செலுத்த காசில்லாதபோது, குருக்கள் கடக்கும் வரை மனம் கண்ணை மூடி இன்னும் கொஞ்சம் வேண்டிக் கொள்கிறது!

@manipmp   
உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பது ஆண்ட்ராய்ட் சார்ஜை விட சீக்கிரம் தீர்ந்து போகும் பொருள்!

@Alexxious
கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து விடுவது எளிதாய் இருக்கிறது, வாழ்வதுதான் கஷ்டமாய் இருக்கிறது!

@Iamfakeid   
ஒரு காதலையேனும் சுகிக்காமல், ஒரு துரோகத்தையேனும் அனுபவிக்காமல், ஒரு தோல்வியையேனும் தழுவாமல் அண்ட விடாதீர்கள் மரணத்தை; அது பிணமாய் வாழ்ந்த தடம்!

@manipmp   
விற்கப்படாத பலூனில் நிறைந்திருப்பது பலூன் விற்பவனின் பெருமூச்சே...

@thoatta   
பெண்களால் ஒரு நொடியில் அள்ளிக் கொட்டக் கூடியது கண்ணீர்; ஒரு ஜென்மமானாலும் அடக்கி வைக்கக்கூடியது காதல்:)