ஜோக்ஸ்



‘‘தொண்டர்களை புரிஞ்சுக்கவே முடியலைன்னு தலைவர் புலம்பறாரே... ஏன்?’’
‘‘அதுவா... அவர் பேசினப்ப கை தட்டினவங்க, அவர் மேல அழுகிய முட்டை வீசினப்பவும் தட்டினாங்களாம்!’’
 பர்வீன் யூனுஸ், சென்னை44.

‘‘நம்ம தலைவரை ஏன் சி.பி.ஐ. போலீஸ்
கைது பண்றாங்க?’’
‘‘அளவுக்கு அதிகமா ‘குட்டி’க் கதைகள் ஸ்டாக் வச்சிருந்தாராம்..!’’
 வைகை ஆறுமுகம், வழுதூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

பார்வைக் கோளாறை சரி பண்ண முடியும்; ஆர்வக் கோளாறை சரி பண்ண முடியுமா?
 ஆர்வக்கோளாறால் அவதிப்படுவோர் சங்கம்
 எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

‘‘டாக்டர் ஏன் பேஷன்ட்டோட ஜாதகத்தைக் கேட்கறார்..?’’
‘‘நர்ஸுக்கும் பேஷன்ட்டுக்கும் பத்துப் பொருத்தம் பார்க்கணுமாம்..!’’
 அம்பை தேவா, சென்னை116.

‘‘விளம்பரப் படத்தில் நடிச்சவங்களை ஹீரோயினா போட்டது தப்பாப் போச்சே...’’
‘‘ஏன்... என்ன பிரச்னை?’’
‘‘எந்த சீன் எடுத்தாலும் ஒரு நிமிஷத்திற்கு மேல் நடிக்க மாட்டேன்னு கண்டிஷன்
போடுறாங்க!’’
 சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

பனைமரம் காய் காய்க்கும்; தென்னை மரம் காய் காய்க்கும்; புளிய மரமும் காய் காய்க்கும். ‘கட்டு மரம்’ காய்க்குமா?
 காய்க்கிற மரத்தில் கல்லடிப்போர் சங்கம்
 வி.எல்.என்.ராமமூர்த்தி, சென்னை64.

‘‘உயிருள்ளவரைக்கும் நர்ஸை மறக்க மாட்டேன்னு டாக்டர்கிட்ட சொன்னீங்களா..?’’
‘‘ஆமா... அதுக்கென்ன இப்போ?’’
‘‘நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்னு டாக்டர் அறிவிச்சுட்டார்!’’
 பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.