தத்துவம் மச்சி தத்துவம்





எந்தப் பாறையில வேணும்னாலும் சிற்பம் செதுக்க முடியும். ஆனா கடப்பாறையில சிற்பம் செதுக்க முடியுமா?
- உளி கொண்டு தத்துவங்களை செதுக்கி ஊர் முழுக்க பரப்புவோர் சங்கம்
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘தலைவரே... மக்கள்கிட்ட விழிப்புணர்ச்சி இல்லைன்னு எதை வச்சு சொல்றீங்க?’’
‘‘மீட்டிங்ல நான் பேச ஆரம்பிச்சதும், எல்லோரும் தூங்க ஆரம்பிச்சிடறாங்களே..!’’
 - அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘ஆபரேஷனுக்கு அந்த பேஷன்ட் எப்படி உடனே ஒத்துக்கிட்டார்..?’’
‘‘அவர் வாழ்க்கையில நிறைய முறை தற்கொலைக்கு முயற்சி செஞ்சு தோற்றுப் போனவராம்...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஆனாலும் நம்ம தலைவர் பத்திரிகையில இப்படியா விளம்பரம் கொடுப்பார்..?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘கட்சி தாவாத நிரந்தரத் தொண்டர்கள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்காரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

பெரிய பெரிய அரண்மனை பங்களாவை ‘செட்’ போட்டு உருவாக்கலாம். ஆனால் சின்ன வீட்டை ‘செட்டப்’ செஞ்சுதான் உருவாக்க முடியும்!
- சின்ன வீட்டுக்குக்கூட கரெக்டா ஸ்கெட்ச் போடுவோர் சங்கம்
- ஆர்.சுதர்ஸன், பூனாம்பாளையம்.

‘‘என் புதுப் படத்துல ஹீரோ, ஆயுள் தண்டனைக்கு எதிரா போராடறார்...’’
‘‘அப்புறம்..?’’
‘‘கடைசியில் போராட்டத்தை கை விட்டுட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சிடறார்!’’
- சரவணன், கொளக்குடி.