அஜித், ஆர்யா இணைந்து நடிக்க, விஷ்ணுவர்தன் பரபரப்பாக இயக்கிக்கொண்டிருக்கும் படத்திற்கு ‘தல’ என பெயர் வைக்க பிரியப்பட்டார்கள். ஆனால் அஜித் இந்த யோசனைக்கு மறுத்துவிட்டார். இப்போது ‘வலை’ என பெயர் முடிவாகி இருக்கிறது. அஜித் ஏன் ‘தல’ என்ற பெயருக்கு மறுப்பு சொன்னார் என்பதற்கான விடை அடுத்து...
ஏ.ஆர்.முருகதாஸ் - அஜித் கூட்டணி ரெடியாகி விட்டது. கதையின் ஒன்லைன் அஜித்திற்கு சொல்லப்பட்டு விட்டது. ரொம்பவும் பிடித்துப் போய் டபுள் ஓகே சொல்லி விட்டார் தல. ‘தீனா’விற்குப் பிறகு இரண்டு பேரும் இதில்தான் சேர்கிறார்கள். படத்திற்கு ‘இரட்டைத்தல’ என பெயர் வைத்துவிட்டார்கள். காரணம், அஜித்திற்கு இதில் மாறுபட்ட இரட்டை வேடமாம். விஷ்ணுவிற்கு மறுத்த காரணம் தெரிகிறதா?
அலகாபாத் கும்பமேளாவுக்கு வருகிறார் ஹாலிவுட் நடிகை கேத்தரீன் ஜீடா ஜோன்ஸ். பைபோலார் டிஸார்டர் பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக அவதிப்படும் அவர், யோகாவில்தான் நிம்மதி
தேடுகிறார். அந்த யோகாவே அவரை இந்தியா பற்றிய தேடுதலில் இறக்கிவிட்டு, இப்போது கும்பமேளாவுக்கும் வர வைத்திருக்கிறது.
டபுள், ட்ரிபிள் ஹீரோ சப்ஜெக்ட்டில் ஆர்வம் காட்டுகிறார் சந்தானம். இயக்குனர் ராஜேஷ். எம்மின் அசிஸ்டென்ட் இயக்கும் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம். கூட்டணியில் பவர் ஸ்டாரும் சேர வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். படத்தின் தலைப்பு ‘யா யா’வாம். ஹீரோயின் தன்ஷிகா.
அர்ஜுன், சன் ஆஃப் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட்டுக்கு புது வரவு. அப்பா போகும் இடமெல்லாம் கூடவே போய் பயிற்சி எடுத்துக் கொண்ட அர்ஜுன், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார். செலக்ஷனுக்கான போட்டியில் செஞ்சுரி போட்டு நம்பிக்கை தந்திருக்கிறார். வாரிசு கிரிக்கெட்டர்களில் இவராவது ஜெயிக்கட்டும்!
இமேஜ் பார்க்காமல் பொது நிகழ்ச்சிகளில் விக் வைக்காமல் ‘தலை’ காட்டிக்கொண்டிருந்த சத்யராஜிடம் சற்றே மாற்றம்... ஒரு ட்ரீட்மென்ட் மூலம் தலையில் ஒரிஜினல் முடியை வளர்த்துள்ளார். ஸாரி, நட்டுவைத்துள்ளார்.
பாலிவுட், ஆஸ்கர் என்று உச்சத்தைத் தொட்டாலும் இசைப்புயலின் மனதுக்கு நெருக்கமாக முதல் இரண்டு இடத்தில் இருப்பது தமிழ்ப் பாடல்கள்தான். ஒன்று ‘சின்னச் சின்ன ஆசை’. இன்னொன்று, ‘ஒரு தெய்வம் தந்த பூவே...’
இமேஜ் பார்க்காமல் பொது நிகழ்ச்சிகளில் விக் வைக்காமல் ‘தலை’ காட்டிக்கொண்டிருந்த சத்யராஜிடம் சற்றே மாற்றம்... ஒரு ட்ரீட்மென்ட் மூலம் தலையில் ஒரிஜினல் முடியை வளர்த்துள்ளார். ஸாரி, நட்டுவைத்துள்ளார்.
முன்பெல்லாம் பாரிமுனையில் உள்ள புனித அந்தோணியார் திருத்தலத்திற்கு மாதம் ஒருமுறை செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்த விஜய், சில வருடங்களாக அந்தோணியாரை சந்திப்பது அரிதாகிவிட்டது. எப்போதாவது பெசன்ட் நகர் தேவாலயம் செல்கிறார்.
சைலன்ஸ்
இரட்டையாக நடித்த படம் தோல்வி அடைந்ததில் கொஞ்சம் உற்சாகம் இழந்திருந்தார் வெப்ப நடிகர். இப்போது சுதாரித்துவிட்டாராம். ‘எவ்வளவோ கரெக்ஷன் சொல்லியும் கேட்கவில்லையே’ என அந்த இயக்குநர் பற்றி வேதனையில் இருந்தவர், இப்போதுதான் தெளிவாகி இருக்கிறார். இனி ஆளைப் பார்க்காமல், முழுக்கதையையும் கேட்க முடிவெடுத்துவிட்டாராம். அப்படியே தம்பியையும் அந்தக் கூட்டணியில் சேர்த்துக்கலாமே!
படித்தவர்கள் மத்தியில் கூட அந்த டாக்டர் காமெடிக்கு மதிப்பு கூடியிருக்கிறது. மனிதர் யூ ட்யூப்பில் பின்னி எடுக்கிறார். சமீபத்திய வெற்றியால் தெம்பில் இருப்பவர், தன்னை செக் மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கும்படி அந்த சந்தன நடிகரிடம் ஹெல்ப் கேட்டாராம். ‘என் சொல்படி கேள், செய்கிறேன்’ என்று ப்ராமிஸ் செய்திருக்கிறார் நடிகர்.
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விரைவில் ஒரு புது அணி உருவாகிறது. ஷிமிதிறிகி என பெயரிட்டு ஞானவேல்ராஜா தலைமையில் துடிப்பான இளம் தயாரிப்பாளர்கள் புது அணியில் இடம் பெறுகிறார்கள்.
பிரபுசாலமன் ‘கும்கி’க்குப் பிறகு எடுக்கும் படத்திற்கு துபாய்தான் ஷூட்டிங் ஸ்பாட். துபாயில் டிரக் ஓட்டும் டிரைவர் வேலைக்குப் போய் கஷ்டப்படும் அடித்தட்டு தொழிலாளியாக நடிக்கிறார் ‘கடல்’ கௌதம். இரண்டு படத்திலேயே கௌதமுக்கு நடிப்பு வந்திடும் போல இருக்கே! கௌதம் பிஞ்சு பாஸ்... பார்த்து...
தமிழில் வாங்குவதைவிட தெலுங்கில் இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்குகிறார் அஞ்சலி. அதனால் இப்போது தெலுங்கு படங்களுக்குத்தான் கால்ஷீட் புக்கில் முதலிடமாம். அஞ்சலியின் தாய்மொழியும் தெலுங்கு என்பதால், அங்கே அவருக்கு நடிப்பது ஈஸியாக இருப்பதாக டைரக்டர்கள் நினைப்பதுதான் காரணம். கிளாமரிலும் பிச்சு உதறுவது எக்ஸ்டரா போனஸ்.
‘‘எந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாலும், சீக்கிரமே போவதை வழக்கமாக வைத்திருந்தேன். மற்ற எல்லோரும் லேட்டாக வருவதால், நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இனி நான் இப்படி சீக்கிரம் போக மாட்டேன்’’ என அதிரடி புத்தாண்டு சபதம் எடுத்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ‘‘பொய் சொல்ல வராததால் பல இடங்களில் தர்மசங்கடத்தில் சிக்கித் தவிக்கிறேன். இந்த ஆண்டிலிருந்து பொய் சொல்லக் கற்றுக் கொள்ளப் போகிறேன்’’ என்கிறார் பிபாஷா பாசு. இப்படியெல்லாமா சபதம் எடுப்பாங்க?
நடிப்பதோடு புதுமுக நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பு சொல்லித் தருபவராகவும் மாறி விட்டார் கலைராணி. ‘கடலி’ல் நடித்த கௌதம் கார்த்திக், துளசி நாயர் இரண்டு பேருக்கும் கடுமையான நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டதின் விளைவுதான், இந்த ஜோடியின் நடிப்பு ‘கடலி’ல் அருமையாக அமைந்திருக்கிறதாம்.