யானைக கனவு





யானைக்கு பயம்தான்
மூடநம்பிக்கை
பாகனுக்கு தைரியம்தான்
மூடநம்பிக்கை
டைனோசர்கள் இப்போது
வாழ்ந்து கொண்டிருந்தாலும்
அஞ்சத் தேவையில்லை...
பிச்சை எடுக்கப்
பழகிவிடும்

காட்டுக்குள் நாடும்
நாட்டுக்குள் காடும்
ஊடுருவும் போட்டியில்
வெற்றியும் தோல்வியும்
நாட்டுக்கேயன்றி காட்டுக்கு இல்லை

போர்க்களத்தில் காரணமின்றி
இறந்த சரித்திரத்தை விட
பிச்சை எடுத்து சாவது மேலானது  

எனினும்
குழந்தைகள் தன் மீது
சவாரி செய்யும்போது,
வீதிகளில் பிச்சை எடுக்கும்
வேதனையை மறக்கின்றன யானைகள்
கு.திரவியம்